Advertisment

பா.ஜ.க அரசுக்கு எதிரான காங்கிரஸின் நம்பிக்கை இல்லா தீர்மானம்; மக்களவை சபாநாயகர் ஏற்பு

மணிப்பூர் விவகாரம்; பா.ஜ.க அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்றார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

author-image
WebDesk
New Update
Lok Sabha

Tamil News live

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று (ஜூலை 26) ஏற்றுக்கொண்டார்.

Advertisment

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கையை வெளியிடக் கோரி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸும் தனது லோக்சபா எம்.பி.க்கள் கூட்டத்தை கட்சியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் கூட்டி, லோக்சபா எம்.பி.க்கள் இன்று பாராளுமன்றத்தில் தவறாக கலந்துக் கொள்ள வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படியுங்கள்: இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்த மோடி; நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள்

"எதிர்க்கட்சிகள் நாளை லோக்சபாவில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்," என, லோக்சபாவில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செவ்வாய்கிழமை கூறியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், “இன்று, மணிப்பூர் தொடர்பாக பிரதமருடன் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்காததால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நாடாளுமன்றத்தில் நமது தலைவர் என்பதால் மணிப்பூர் வன்முறை குறித்து அவர் அறிக்கை வெளியிட வேண்டும்,” என்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.

செவ்வாயன்று, மக்களவையில் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்களுக்கு மத்தியில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா, 2022 நிறைவேற்றப்பட்டது. இந்த அமர்வில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் விவகாரத்தில் அரசு விவாதத்திற்கு தயாராக இருப்பதாக இரு அவைகளின் ஆளும் கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இதுபோன்ற முக்கியமான விஷயத்திற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குமாறும் வலியுறுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment