பாஜக.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஓம் பாண்டே, ராமாயணத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தினரும் எந்தெந்த சாதியை சார்ந்தவர்கள் என்று ஒரு முழுப் பட்டியலையே வெளியிட்டிருக்கிறார்.
புதிய ஆராய்ச்சியில் பாஜக எம்.பி
உத்திரப் பிரதேசம் அம்பேத்கர் நகர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருபவர், ஹரி ஓம் பாண்டே. ஆஞ்சநேயரை பிராமணன் என்றும், வானர நாட்டின் தலைவன் சுக்ரீவனை குர்மி இனத்தவர் என்றும், அவருடைய தமையன் வாலி யாதவர் என்றும், சீதையை ராவணனிடம் இருந்து காப்பாற்ற முற்படும் ஜடாயூ முஸ்லீம் என்றும், ராமர் சேது பாலத்தை கட்ட உதவிய வானர சேனையை சேர்ந்த வீரர் நாள்-நீல் விஷ்வகர்மா இனத்தை சேர்ந்தவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜகவை சேர்ந்த புக்கல் நவாப் தனது கருத்தாக அனுமன் ஒரு முஸ்லீம் என்று கூறியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது. ‘ரெஹ்மான், ரம்ஜான், ஃபர்மான், ஜிஷான், குர்பான் போன்று தான் அனுமான் என்ற பெயரும் இருக்கிறது. அனுமானுக்கும் இஸ்லாத்திற்கும் இருக்கும் தொடர்பினை அவருடைய பெயரே கூறிவிடுகிறது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் மாதத்தில் அனுமன், ஒரு தலித் என்று உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய இணை அமைச்சர் சத்யபால் சௌத்ரி, அனுமன் ஒரு ஆரியர் என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க : அயோத்தியில் 221 மீட்டரில் ராமர் சிலை: உ.பி.அரசு உறுதி