பிரச்சாரத்தில் மக்களை “பாரத் மாதா கி ஜே” கூற வைத்த பாஜக தலைவர்… தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

இந்தியா பிடிக்குமென்றால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்... பாகிஸ்தான் தான் பிடிக்கும் என்றால் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் - சர்ச்சை பேச்சு

By: Updated: October 1, 2019, 11:29:49 AM

Milind Ghatwai

Madhya Pradesh Jhabua by-election BJP leader Gopal Bhargav controversial speech : மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபூவா என்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தரப்பில் இருந்து பானு பூரியா என்ற வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் தரப்பில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் கந்திலால் பூரியா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இருவரும் நேற்று (30/09/2019) தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்றிருக்கிறார் பாஜக தலைவர் கோபால் பார்கவ்.

பழங்குடிகள் அதிகம் வாழ்கின்ற இந்த தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பார்கவ் “இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெறும் தேர்தல். நீங்கள் இந்தியா பக்கமா? பாகிஸ்தான் பக்கமா? இந்தியா பக்கம் என்றால் பானு பூரியாவிற்கு வாக்களியுங்கள்… பாகிஸ்தான் பக்கம் என்றால் கந்திலால் பூரியாவிற்கு வாக்களியுங்கள்” என சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார். மேலும் இவரின் பேச்சை கேட்க காத்திருந்தவர்கள் அனைவரையும் ”பாரத் மாதா கீ ஜே” என கோஷமிட கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அனைத்து பிரச்சனைகளின் போதும் ஆதரவாக பேசிவருகிறது என்று குற்றம் சாட்டினார் பார்கவ். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மக்களிடம் பேசி வருவதாக காங்கிரஸ் தரப்பு பாஜக தலைவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல் நாத்தின் ஊடக தொடர்பாளர் நரேந்திர சலூஜா கூறுகையில், இந்த மாநிலத்தில் 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்தது ஆனால் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை. மற்ற பகுதிகளில் ஏற்பட்ட வளர்ச்சியும் கூட ஜபூவாவில் நடைபெறவில்லை என குற்றம் சுமத்தினார் அவர்.

மேலும் படிக்க : 50% குறைவான பயணிகளை கொண்டிருக்கும் ரயில்கள் இனி இயங்காது… செலவுகளை குறைக்க புது யோசனை!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Madhya pradesh jhabua by election bjp leader gopal bhargav controversial speech

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X