Mahanadi Coalfields loses Rs 2.68 crore : ஒடிசா மாநிலம் தால்செரில் அமைந்திருக்கிறது மகாநதி கோல்ஃபீல்ட் நிறுவனத்துக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம். மூன்று நாட்களுக்கு முன்பு இங்கிருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, சாலையின் குறுக்கே வந்த ஆட்டின் மீது மோதியதால் ஆடு அங்கேயே உயிரிழந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
இதனை அறிந்த ஊர்க்காரர்கள் அந்த வண்டியை மறித்து, இறந்து போன ஆட்டிற்கு நஷ்ட ஈடாக ரூ. 60 ஆயிரம் தர வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அதற்கு லாரி ஓட்டுநரோ பணமெல்லாம் தர முடியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதனால் அக்கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புரத்தினர் அக்டோபர் மாதம் 1ம் தேதி கும்பலாக வந்து, சுரங்கத்தில் இருந்து நிலக்கரியை எடுத்துச் செல்லும் வழியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு காவல்துறையினர் வந்து சமாதானம் செய்து வைக்க 4 மணி நேரம் கழித்து அவ்விடத்தில் இருந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் நிலக்கரி போக்குவரத்து சில மணி நேரங்கள் தாமதமானது. இந்த தமாதத்தால் எங்களின் நிறுவனத்திற்கு ரூ.2.68 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும், அரசுக்கு ரூ. 46 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற திடீர் போராட்டத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக மகாநதி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க : Tamil Nadu news today live : சீன அதிபர் வருகையை ஒட்டி பேனர்கள் வைக்கலாம் – உயர் நீதிமன்றம்