முடிவுக்கு வந்த இழுபறி… துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டது சிவசேனா…

பாஜக இந்த தேர்தலில் 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா 56 தொகுதிகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

Maharashtra Assembly Elections 2019 Shiv Sena accepts deputy CM post
Tamilnadu News live Updates

Shubhangi Khapre

Maharashtra Assembly Elections 2019 Shiv Sena accepts deputy CM post : மகாராஷ்ட்ரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் ஆகின்ற நிலையில் முதல்வர் பதவிக்காக சிவசேனா மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. துணை முதல்வர் பதவி தான் தருவோம் என பாஜக நிற்க, முதல்வர் பதவி இரண்டரை ஆண்டுகளுக்கு வழங்கியே தீர வேண்டும் என சிவசேனா முறையிட்டது. ஒரு வழியாக நேற்று இந்த பிரச்சனைக்கான தீர்வுகள் எட்டப்பட்டு சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதே போன்று அமைச்சரவையில் 13 முதல் 15 இடங்கள் சிவசேனாவுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவசேனாவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத் “ஆட்சியில் சரி சம பொறுப்பு வழங்க வேண்டும் என பாஜகவிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இருப்பினும் பாஜக கூட்டணியில் இருந்து செயல்பட வேண்டும் என்பதும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. மகாராஷ்ட்ரா மக்களின் நலனை கருத்தில் கொண்டு சிவசேனா இந்த முடிவை எட்டியுள்ளதாக அறிவித்தார்.

துணை முதல்வர் பொறுப்போடு சிவசேனா உறுப்பினர்கள் பொதுப்பணித்துறை, கிராமப்புற வளர்ச்சி, தொழில்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களாவும் பொறுப்பேற்க உள்ளனர். பாஜக ஏற்கனவே உள்த்துறை, நகர்புற வளர்ச்சி, வருமானம், நிதி போன்ற துறைகளை சிவசேனாவிற்கு தர மாட்டோம் என்பதிலும் உறுதியாக இருந்தது. சிவசேனா இதனை தன்மானப் பிரச்சனையாக பார்த்தால் வருமானம், விவசாயம், அல்லது பாசனம் என்ற மிக முக்கியமான மூன்று அமைச்சரவைப் பொறுப்புகளில் ஒன்று மட்டுமே வழங்குவோம் எனவும் திட்டவட்டமாக அறிவித்திருந்தது.  பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும். மற்ற பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் பேசி தீர்த்துக் கொள்ளப்படும் என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்தார்.

மேலும் படிக்க : பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இன்று ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக செயல்படத் துவங்கியது

அடுத்த வாரம் மும்பை வர இருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தவ் தாக்கரேவை சந்திக்க உள்ளார். நிர்வாகத்தில் 50:50 என்ற விகிதத்தில் துறைகள் பிரிக்கப்படும். சரிசமமான நிர்வாகம் என்பதை முதல்வர் பதவியை அடிப்படையாக கொண்டு தீர்மானம் செய்ய வேண்டியதில்லை என்று பெயர் கூற விரும்பாத பாஜக தலைவர் அறிவித்தார். சிவசேனாவிற்கு மிக முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டார் முதல்வர் பதவி வேண்டும் என்ற நிபந்தனையை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது என்றும் அவர் அறிவித்தார்.

288 தொகுதிகளை உள்ளடக்கியது மகாராஷ்ட்ர சட்டசபை. பாஜக இந்த தேர்தலில் 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா 56 தொகுதிகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Maharashtra assembly elections 2019 shiv sena accepts deputy cm post also bags 13 ministries

Next Story
இந்தியாவின் சமூக ஆர்வலர்கள் வேவு பார்க்கப்பட்டனரா ? வாட்ஸ்அப் ரிப்போர்ட்Whatsapp new security features, Hide your Last seen, Make your Display Picture private, Set who can add you in a group, Biometric Lock
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express