Shubhangi Khapre
Maharashtra government formation BJP's biggest political blunder : பாஜகவில் இருந்து விலகிவிட்டு பேசாமல் சிவசேனாவில் இணைந்துவிட்டால் என்ன என்று கேட்கிறார் மகாராஷ்ட்ரா பாஜகவின் முக்கிய தலைவர். தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சி கவிழ்ந்த பிறகு, பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் காட்சே மகாராஷ்ட்ரா பாஜக கட்சியில் இருந்து விலகி, சிவசேனாவில் சேர்ந்துவிட விருப்பம் தெரிவித்துள்ளார். மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்க பாஜக செய்த அரசியல் தவறுகளால் கட்சி மீது இருந்த அபிப்ராயம் மக்கள் மத்தியில் குறைந்துவிட்டதாக கருத்து தெரிவித்திருக்கிறார் அவர்.
இது குறித்து காட்சேவிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் கேள்வி எழுப்பிய போது “எனக்கு சிவசேனாவில் சேர அழைப்பு வந்துள்ளது. நான் இப்போது அந்த ஆஃபரை பயன்படுத்திக் கொள்ளலாமா என்று தீவிரமாக யோசித்து வருகிறேன். மக்களின் நம்பிக்கையை காயப்படுத்திய ஒரு கட்சியில் இருப்பதால் என்ன பயன் என்று எனக்கு தோன்றுகிறது” என்று அவர் குறிப்பிட்டார். இந்த கட்சி தற்போது செயல்படும் விதம் கோபத்தை கிளப்புவதாகவும், சங்கடத்தை உருவாக்குவதாகவும் அமைந்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
To read this article in English
மாநில மற்றும் டெல்லியில் இருக்கும் பாஜக தலைவர்கள் குறித்து அவர் ஏதும் பேசாமல், அஜித் பவாருடன் கைக்கோர்க்க முயற்சி செய்ததால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து மட்டும் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு புனேவில் நிலமோசடி ஒன்றில் ஈடுபட்டதாக கூறி காட்சே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டார். பிறகு பல்வேறு தருணங்களில் தேர்தலை சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பாஜக தலைமை அதனை மறுத்துவிட்டது. தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வடக்கு மகராஷ்ட்ராவில் அமைந்திருக்கும் முக்தாய்நகர் தொகுதியில் காட்சேவின் மகள் பாஜக சார்பில் போட்டியிட்டார். சிவசேனாவின் சுயேட்சை வேட்பாளர் அவரை வீழ்த்தி எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். தன் மகளின் தோல்விக்கு பாஜக தான் காரணம் என்றும் அவர் புகார்களை முன் வைக்கிறார்.
Maharashtra government formation BJP's biggest political blunder
40 வருடங்களுக்கும் மேலாக ஜன சங்கத்திலும் பாஜகவிலும் இருக்கும் என்னை போன்ற ஒருவருக்கு, அஜீத் பவாருடன் கூட்டணி வைப்பது என்பது பாஜகவின் மிகப்பெரிய அரசியல் தவறு என்று தான் தோன்றும். ஒரு முடிவு, மக்கள் மத்தியில் கட்சியின் மீது இருந்த நற்பெயர் கலங்கமடைந்தது. ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வந்த பாஜகவின் அனைத்து நற்பெயரும் இந்த ஒரே ஒரு முடிவால் தீமையாய் போய் முடிந்தது என்றும் காட்சே அறிவித்துள்ளார். கவர்னர் ரகசியமாக முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது தவறில்லை. ஆனால் எதற்காக முதிர்ச்சியற்ற ஒரு முடிவினை ஏன் அவசர அவசரமாக நாம் எடுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார் அவர்.
சந்திரசேகர் பவன்குலே, வினோத் தாவ்தே, ஏக்நாத் காட்சே போன்ற ஒ.பி.சி தலைவர்களுக்கு சீட் தராதது குறித்து கேள்வி எழுப்பிய போது, “கட்சியின் செய்தி சரியாக ஓ.பி.சி பிரிவினரிடம் சென்று சேரவில்லை. அதனால் அவர்கள் கட்சியில் இருந்து தானாகவே தங்களை ஒதுக்கிக் கொண்டனர்” என்று கூறினார்.
மேலும் படிக்க : அன்று கட்சி, இன்று ஆட்சி! – சிவாஜி பூங்கா சிவசேனாவுக்கு ஏன் அவ்வளவு முக்கியமானதாகிறது?
அஜீத் பவாருடன் கை கோர்த்தது குறித்து பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிடுகையில் “மொத்த நடவடிக்கையும் மத்திய மற்றும் மாநில பாஜக உறுப்பினர்களால் குழுவால் மேற்கொள்ளப்பட்டது. நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவின் கருத்துகளைக் கேட்ட பின்பு தான் இந்த முடிவுக்கே கட்சி வந்தது. ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு ஒருவரை மட்டும் குறை கூறுவது சரியில்லை” என்று அவர் அறிவித்தார்.
பாஜக மீது ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள்?
தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்ற போது மொத்த கட்சியும் அவ்வளவு மகிழ்ச்சியாக அஜீத் பவார், சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால் எதோ ஒரு காரணத்திற்காக அஜீத் பவார் கூட்டணியில் இருந்து விலகி வெளியேறினார். பின்பு பாஜக ஆட்சி அமைக்கப்போவதில்லை என்பதை திட்ட்வட்டமாக அறிவித்தது. இதில் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது?/ ஆரம்பம் முதலே பாஜக, சிவசேனா கூட்டணி என்று தான் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் கூட்டணியை விட்டு விலகி சென்றது சிவசேனா தான். ஆனால் அனைவரும் பாஜக தலைவர்களை குறை சொல்கிறார்கள் என பாஜக செய்தி தொடர்பாளர் சிவரேய் குல்கர்னி அறிவித்துள்ளார்.