மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் ஆட்சி : சட்ட நுணுக்கங்களை ஆராய்கிறது காங்கிரஸ்
Congress legal change to Maharashtra new government : மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பட்னாவிஸ் தலைமையிலான புதிய அரசு விவகாரத்தில், சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து அதன்படி செயல்பட காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பட்னாவிஸ் தலைமையிலான புதிய அரசு விவகாரத்தில், சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து அதன்படி செயல்பட காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கூட்டணியின் சார்பில், 23ம் தேதி மதியம் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்திக்க திட்டமிட்டிருந்தது. மகாராஷ்டிரா முதல்வராக 5 வருட காலமும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவே நீடிப்பார் என்று என்சிபி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அதிரடி திருப்பமாக, முதல்வராக பாரதிய ஜனதாவின் தேவேந்திர பட்னவிஸூம், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வு, மகாராஷ்டிரா அரசியல் மட்டுமல்லாது தேசிய அளவிலும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வை, உற்று கவனித்து வருவதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது.
பட்னாவிஸ் முதல்வர், அஜித் பவார் துணை முதல்வர் விவகாரத்தில், என்சிபி கட்சிக்கு சம்பந்தமில்லை என்று என்சிபி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
இதனிடையே, என்சிபி எம்எல்ஏக்களின் கையெழுத்து பட்டியலை, அஜித் பவார் கட்சி தலைமையின் அனுமதி இல்லாமல், கவர்னரிடம் வழங்கியுள்ளதாக கருத்து வெளியாகியுள்ளது. என்சிபி கட்சி எம்எல்ஏக்கள், கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பாடுவார்கள் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சி சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அஜித் பவாருக்கு 11 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கவர்னரிடம் அளிக்கப்பட்ட கடிதத்தில், எத்தனை எம்எல்ஏக்களின் கையெழுத்துகள் உள்ளன, அந்த கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டாரா? அதன் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பான முடிவுகளுக்காக காங்கிரஸ் கட்சி காத்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தொலைபேசியின் மூலம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து : இதனிடையே, டில்லியில் காங்கிரஸ் ஊடகத்துறை சார்பில் ரந்தீ்ப் சுரஜ்வாலா பங்கேற்க இருந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதிய அரசுக்கு, என்சிபி கட்சி ஆதரவு அளிக்குமா, ஆம் என்றால், அது முழுமையானதாக இருக்குமா உள்ளிட்ட விவகாரங்களின் முடிவுகளுக்கேற்ப, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.