Mahendra Chaudhary Zoological Park : Man scales wall to enter Punjab zoo, killed by lions -வனப்பகுதிக்குள் நுழைந்த இளைஞர்... இரண்டு சிங்களுக்கு இரையான பரிதாபம்... | Indian Express Tamil

தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்த இளைஞர்… இரண்டு சிங்கங்களுக்கு இரையான பரிதாபம்…

முகம், கழுத்து, கண்கள் போன்ற பகுதிகள் சிங்கங்களின் தாக்குதலால் சிதிலமடைந்தால் அடையாளம் காண்பதில் சிக்கல்…

Mahendra Chaudhary Zoological Park
Mahendra Chaudhary Zoological Park

Mahendra Chaudhary Zoological Park : சட்பிர் வனவிலங்கு உயிரியல் பூங்கா பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் அமைந்துள்ளது. இந்த வன உயிரியல் பூங்காவினை சுற்றி பெரிய மதிற்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. 30 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட இந்த மதிற்சுவற்றை தாண்டி, நேற்று ஒருவர் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நடமாடிக் கொண்டிருந்தார்.

அங்கு சபாரி மூலம் சுற்றுலா வருபவர்களின் பார்வைக்காக அங்கு கூண்டில் வளர்க்கப்பட்டு வந்த 4 சிங்கங்களில் இரண்டை திறந்துவிட்டுள்ளனர் உயிரியல் பூங்கா காப்பாளர்கள்.

Mahendra Chaudhary Zoological Park – மர்ம நபர் பலி

ஷில்பா மற்றும் யுவராஜ் என்ற இரண்டு சிங்கங்களும், அந்த மனிதனை கடித்து குதறி பதம் பார்த்துவிட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று அந்த பூங்காவில் சபாரி நிறுத்தப்பட்டு, உள்ளே நுழைந்த மர்ம நபர் யார் என்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் காவல் துறையினர்.

பார்வையாளர்களை வண்டியில் வைத்து சபாரிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுனர் ஜானி என்பவர் அந்த மனிதனை சிங்கங்கள் தாக்கும் போது வனப்பகுதியில் 20 பயணிகளுடன் ரோந்து சென்று கொண்டிருந்தார். ஜானி என்ற இந்த ஓட்டுநர் அந்த மனிதனை காப்பற்ற வேகமாக ஹாரன் ஒலி எழுப்பிக் கொண்டே சிங்கங்களை அந்த பகுதியில் இருந்து வெளியேறியது.

இந்த விவகாரத்தை வனத்துறையினரிடம் அறிவித்து, அந்த மர்ம மனிதனை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அப்போது அந்த இளைஞர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த மர்ம நபரை பார்த்த ஜானி “அந்த மனிதன் மனநிலைக் கோளாறால் பாதிக்கப்பட்டவர் அல்லது போதைப் பொருள் பயன்படுத்தியவர் போல் தெரிந்தார்” என்று கூறியுள்ளார்.

மர்ம மனிதரின் அருகில் அலைபேசியோ, அடையாள அட்டைகளோ எதுவும் இல்லை. சிங்கங்கள் கடித்து குதறியதால் முகம் முழுமையாக சிதைந்து போயுள்ளது. அதனால் அம்மனிதனின் அடையாளங்களை கண்டறிந்து கொள்வதிலும் பெரிய சிக்கல்கள் உருவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : குழந்தை மீது பாய்ந்த சிங்கம்…நொடி பொழுதில் உயிர் தப்பிய அதிசயம்!

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Mahendra chaudhary zoological park man scales wall to enter punjab zoo killed by lions