Man tests positive who stole PPE kit thinking it is a raincoat : இந்தியாவில் அதிக அளவு கொரோனாவால் பாதிப்பை சந்தித்த மாநிலம் மகாரஷ்ட்ரா. அங்கு நாளுக்கு நாள் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட, அளவுக்கு அதிகமான உயிரிழைப்பையும் அம்மாநிலம் அதிகம் சந்தித்துள்ளது. இதுவரையில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க : தந்தை மரணம்; மருத்துவ நிபந்தனைகளுடன் இறுதி சடங்கு செய்த கொரோனா நோயாளி!
நாக்பூரை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் மதுபோதையில் சாக்கடையில் விழுந்து காயம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு மாயோ மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டது. அங்கிருந்து திரும்பிய அந்நபர் அங்கே இருந்த பாதுகாப்பு காவச உடையை திருடி வந்துள்ளார். அது பயன்படுத்தியதா, பயன்படுத்தாததா என்பதை அறியாமலேயே அதனை வீட்டிற்கு எடுத்து வந்து, தன் நண்பர்களிடம் எல்லாம், இந்த ரெயின்கோட்டை ரூ. 1000 கொடுத்து வாங்கியதாக பெருமையாய் பேசியுள்ளார்.
மேலும் படிக்க : கொரோனாவுக்கு பலியான ராணிப்பேட்டை நர்ஸ்: போராடி நடந்த இறுதிச் சடங்கு
இதனை அறிந்த நண்பர்கள் அந்த ரெயின்கோட்டை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதனை வாங்கிச் சென்று தீயில் இட்டு எரித்தனர். பி.பி.இ. ஆடையை திருடி வந்த நபர் உடனடியாக கொரோனா சோதனைக்கு சென்றுள்ளார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.போக்குவரத்து, பொது பயன்பாடு அனைத்தும் ரத்து செய்யப்பட்டாலும் கூட, இன்றைய சூழலுக்கு அனைவருக்கும் கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு தேவை என்பதையே இது விளக்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil