Mangalyaan welcomes Abhinandan : இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே பிப்ரவரி 14ம் தேதிக்குப் பின்பு பதட்டமான சூழலே நிலவுகிறது. ஜம்முவில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியாக, இந்தியா பதில் தாக்குதலை நடத்தியது. இதன் விளைவாக இருநாட்டு விமானப்படைகளும் சர்வதேச எல்லையை தாண்டி இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்குள் நுழைந்தன. இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் பிடியில் சிக்கிக் கொண்டார்.
Mangalyaan welcomes Abhinandan - ட்வீட்
பிறகு நல்லெண்ண அடிப்படையில் 01ம் தேதி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார் அபிநந்தன் வர்த்தமான். அவரை இந்திய அரசியல்வாதிகள், சினிமாத்துறையினர், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் வரவேற்றனர்.
இந்நிலையில், அபிநந்தனின் வருகையை ஒட்டி செவ்வாய் கிரகத்தில் இருக்கும் இந்திய செயற்கைக் கோள் மங்கல்யான் அபிநந்தனை வரவேற்கும் விதமான ட்விட்டர் ஒன்றை ட்வீட் செய்துள்ளது. அதில் “நாங்கள் உங்களை நினைத்து பெருமிதம் அடைகின்றோம், விங் கமாண்டர் அபிநந்தன்” என்று கூறியிருந்தது.
கடைசியாக அதன் ட்விட்டர் ஹேண்டலில் இருந்து கடந்த வருடம் செப்டம்பர் 29ம் தேதி, செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் மங்கல்யான் செலுத்தப்பட்ட நான்காம் ஆண்டு முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் ஒரு ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோ மங்கல்யானை நவம்பர் 5 2013ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. செப்டம்பர் 24ம் தேதி 2014ம் ஆண்டு அது செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்தது. 6 மாதங்களுக்கு மட்டுமே செயல்படும் என்ற நம்பிக்கையில் அனுப்பப்பட்ட மங்கல்யான் தற்போது கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளை கடந்து செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ரபேல் விமானம் இருந்திருந்தால் விளைவுகள் வேறாக இருந்திருக்கலாம் - மோடி பேச்சு