Advertisment

Goa CM Manohar Parrikar Funeral: மனோகர் பாரிக்கர் உடலுக்கு இறுதி அஞ்சலி! கலைக்கப்படுகிறதா கோவா சட்டசபை?

Goa CM Manohar Parrikar Funeral: மனோகர் பாரிக்கர் இறுதிச் சடங்கு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Goa CM Manohar Parrikar Funeral: மனோகர் பாரிக்கர் உடலுக்கு இறுதி அஞ்சலி! கலைக்கப்படுகிறதா கோவா சட்டசபை?

மனோகர் பாரிக்கர் உடலுக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி

Goa CM Manohar Parrikar Funeral: முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும் கோவாவின் முதல்வராகவும் பதவி வகித்து வந்த மனோகர் பாரிக்கர், கணைய நோய் காரணமாக நேற்று (மார்ச்.17) இரவு காலமானார். இதைத் தொடர்ந்து, கோவாவில் அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்வது என்பதில் பாஜக தலைமையிலான கூட்டணியில் ஒருமித்த கருத்து இதுவரை ஏற்படவில்லை. இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்காரி, நேற்று இரவே பனாஜி விரைந்து, கூட்டணி மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

Advertisment

இதுவரை எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் உள்ள மஹாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியின் தலைவர் சுதின் தவாலிகர், முதல்வராகும் தனது விருப்பத்தை தெரிவித்திருப்பதாக துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ கூறியுள்ளார். இருப்பினும், கோவா அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

Manohar Parrikar Funeral Live Updates

மனோகர் பாரிக்கர் இறுதிச் சடங்கு மற்றும் கோவாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை அறிய ஐஇதமிழ் வழங்கும் பிரத்யேக லைவ் அப்டேட்ஸுடன் இணைந்திருங்கள்.

Manohar Parrikar Funeral Goa Crisis

04:00 PM - பாஜக சார்பில் முதல்வர் தேர்வு செய்யப்பட வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்பதில் பாஜக குறியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

02:40 PM - மனோகர் பாரிக்கர் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இறுதியஞ்சலி செலுத்தினார்.

publive-image

01:15 PM - கோவாவின் அடுத்த முதல்வர் யார் என்பது விரைவில் இறுதி செய்யப்படும் என பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மனோகர் பாரிக்கரின் இறுதிச் சடங்கு மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

12:00 PM - கோவா சட்டசபை தொகுதி பங்கீடு

publive-image

11:00 AM - மனோகர் பாரிக்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்டிருக்கும் பொதுமக்கள்

10:45 AM - பன்ஜிம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மனோகர் பாரிக்கரின் மகன்கள் உத்பல் பாரிக்கர் மற்றும் அபிஜத் பாரிக்கர்.

publive-image

10:30 AM - பாஜக அலுவலகம் கொண்டுவரப்பட்ட மனோகர் பாரிக்கர் உடல்

10:15 AM - மனோகர் பாரிக்கர் உடல் பனாஜியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.

publive-image

09:45 AM - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "மனோகர் பாரிக்கரின் குடும்பத்திற்கு என ஆழ்ந்த அனுதாபங்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது தாய் மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த போது, மனோகர் பாரிக்கர் நேரில் வந்து உடல் நலம் விசாரித்தார். அந்த ஒருமுறை மட்டுமே அவரை நான் பார்த்திருக்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

09:30 AM - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, "கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைந்ததற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நாடாளுமன்றத்தில் நாங்கள் சந்தித்துக் கொண்ட தருணங்களை நினைத்துப் பார்க்கிறேன்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

09:15 AM - இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடன் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

08:30 AMமேலும் படிக்க - ஆர்.எஸ்.எஸ் அடிப்படைத் தொண்டனில் இருந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் வரை... யார் இந்த மனோகர் பாரிக்கர் ?

08:10 AM'அப்பழுக்கற்ற ஒரு தலைவரை இழந்துவிட்டோம்' - பிரதமர் மோடி இரங்கல்

 

Manohar Parrikar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment