Internation Terrorist Masood Azhar : ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 48 மணிநேரத்திலேயே, புது டெல்லியின் அரசியல் வட்டாரங்கள் அமெரிக்கா, சௌதி அரேபியா, அமீரகம், மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் உதவியை நாடியுள்ளது.
masood azhar - ஐ சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சர்வதேச நாடுகளின் உதவியை நாடும் இந்தியா
மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூன்று முறை முயற்சி மேற்கொண்டும் சீனாவின் எதிர்வினையால், அவை தோல்வியில் முடிவடைந்தன.
வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோஹலே நேற்று அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக்கேல் ஆர். பாம்பியோவை வாஷிங்டனில் சந்தித்து பேசினார். அதே போல் சௌதியின் அமைச்சர் அதெல் அல் ஜூபியரையும் நேரில் சந்தித்து பேசினார்.
சௌதியின் அமைச்சர் நரேந்திர மோடி மற்றும் சுஷ்மா சுவராஜ் என இருவரையும் நேரில் சந்தித்து மூன்று வாரங்கள் கழித்து மசூத் விவகாரம் தொடர்பாக இந்தியா வருகை புரிந்துள்ளார்.
மோடியும் இரண்டு நாட்டின் வெளியுறவுச் செயலாளர்களுடன் பேசியது மட்டுமின்றி, பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக மோடி, அமீரகத்தின் இளவசர் ஷேக் முகமது பின் ஜயாத் அல் நஹ்யானிடம் பேசினேர்.
பாகிஸ்தானின் நட்பு நாடுகளாக இருக்கும் சௌதி, அமீரகம், துருக்கி மற்று சீனா மசூத் விவகாரம் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
சௌதியின் அமைச்சர் இஸ்லமாபாத்தில் இருந்து இந்தியாவில் வந்து நான்கு நாட்கள் தங்கியிருந்தார். அப்போது தீவிரவாதிகளுக்கும் தீவிரவாதத்திற்கும் எதிராக அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் சௌதியும் இந்தியாவும் கூட்டாக மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மைக்கேல் பாம்பியோ பேசுகையில், எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்தியாவின் கருத்தினை புரிந்து கொள்ள இயலுகிறது. பாகிஸ்தான் தீவிரவாத கட்டமைப்புகளை முழுமையாக அழிக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது” என்றும் குறிப்பிட்டார். மேலும் தீவிரவாதத்திற்கு எந்த வகையில் உதவி செய்தாலும் அது ஏற்புடையதில்லை என்பதையும் அவர் தெரிவித்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமீரகத்தின் இளவரசர் முகமது பின் ஜயேதுடன் மோடி பேசிய போது “ஓ.ஐ.சி. வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாட்டிற்கு, பாகிஸ்தானின் மறுப்பு இருந்த போதிலும் இந்தியாவினை அழைத்ததிற்கு நன்றி கூறிக் கொண்டார்.
துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகன், தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் காயம்பட்டவர்கள் வெகு விரைவாக உடல்நலம் தேறி வரவேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முறையான பேச்சுவார்த்தை மூலமாகவே இது போன்ற பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட இயலும் என்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லு காங் நேற்று அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.