குழந்தைகளுக்கு ”சானிடைஸர்”, ”குவாரண்டைன்” என பெயர் சூட்டிய பெற்றோர் ; முடிவே இல்லாம போகுது பாத்துக்கங்க!

இந்த இரண்டும் தான் நம்மை கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும். அதை நினைவு கூறும் வகையில் பெயர் வைத்தோம் - குழந்தையின் தந்தை

By: May 27, 2020, 11:43:40 AM

Meerut couple named their twins sanitizer, quarantine : கொரோனா வைரஸ் காரணமாக பலரும் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. நோய் தொற்றுக்கு அஞ்சி இருக்கும் மக்கள் தங்கள் வீட்டில் பிறக்கும் புதுவரவுகளுக்கு குவாரண்டைன், கோவிட், கொரோனா, லாக்டவுன் என்றெல்லாம் பெயர் வைத்துள்ளனர். இது ஏற்கனவே நமக்கு தெரிந்த செய்தி என்றாலும் மீரட்டில் வசிக்கும் தம்பதியினர் தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு சானிட்டைசர், குவாரண்டைன் என பெயர் வைத்துள்ளனர்.

மேலும் படிக்க : உதவ மனம் இருந்தால் போதும்; அவசர உதவிகளுக்கு இலவசமாக கார் ஓட்டும் முதியவர்

இவர்களின் தந்தை தர்மேந்திரா கூறுகையில், கொரோனா நோய் தொற்றில் இருந்து தப்பிக்க நாம் செய்ய வேண்டியதெல்லாம் குவாரண்டை இருப்பது, கைகளை சுத்தமாக சேனிடைசர் போட்டு துடைப்பதும் தான். அவைகள் நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதனை நினைவு கூறும் வகையில் தான் இந்த பெயர்களை தங்களின் குழந்தைகளுக்கு வைத்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். மோதிபுரத்தில் வசிக்கும் இந்த தம்பதிகளுக்கு மேலும் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : தந்தையின் உடலை பெற மறுத்த மகன்; இறுதி சடங்கு நடத்திய இஸ்லாமியர்கள்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Meeta couple named their twins sanitizer quarantine

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X