68 years old man drives car for poor and needy people for free amid coronavirus : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன். 68 வயதாகும் இவர் அந்த பகுதியில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். 45 ஆண்டுகளுக்கு முன்பு பழைய கார் ஒன்றை வாங்கியுள்ளார். 515 என்ற எண் கொண்ட அந்த காரில் ஆதரவற்றோரின் சடலங்களையும், ஏழைகளின் சடலங்களையும் கட்டணமின்றி ஏற்றிச் சென்று உதவியுள்ளார்.
மேலும் படிக்க : தந்தையின் உடலை பெற மறுத்த மகன்; இறுதி சடங்கு நடத்திய இஸ்லாமியர்கள்
அவரின் இந்த சேவை மனப்பான்மையை பார்த்து, அவருக்கு பலரும் நிதி உதவி செய்ய, தற்போது அவரிடம் 3 கார்கள் உள்ளது. கொரோனா ஊரடங்கின் போது அவசர தேவைகளுக்காக கூட பலராலும் வெளியே செல்ல இயலாத நிலை உருவானது. ஆனால் கொரோனா நோய் தொற்றையும் பொருட்படுத்தாமல் பலரையும் தன்னுடைய காரில் ஏற்றிச் சென்று உதவி வருகிறார். இறந்தவர்களின் உடலையும் அவர் ஏற்றிச் செல்கிறார்.
மேலும் படிக்க : கருநாகத்தை வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன் – கேரளாவில் அதிர்ச்சி
ஆனால் இவர் செய்யும் இந்த சேவைக்கு யாரிடம் கை நீட்டி காசு வாங்குவது கிடையாது. இவருடைய காரை யாருமே நிறுத்துவது கிடையாது. இவரின் சேவை மனப்பான்மையை உணர்ந்த பலருன் உதவிக்கு ”515” கணேசன் இருக்கிறார் என்று அழைத்துக் கொள்கின்றனர். இது போன்ற சேவைகள் மட்டுமல்லாது, சென்னை, கேரளா வெள்ளம், தானே, ஒக்கி புயல் ஏற்பட்ட போது இதே கார்களில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்று தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்தும் உதவி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“