32 நாட்களுக்குப் பிறகு மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் பிரேதத்தை கண்டுபிடித்த கடற்படை...

சுரங்கத்தில் நீர்மட்டம் குறையாமல் இருப்பதால் பிணத்தை மீட்பதில் சிரமம்...

Meghalaya Mine Tragedy : மேகாலயா மாநிலத்தில் இருக்குஇம் கிழக்கு ஜெயந்தியா மலைகளில், சட்டத்திற்கு புறம்பாக, ரேட் ஹோல் மைனிங் என்ற முறையில், சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுத்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்தனர் அவ்வூர்வாசிகள்.

Meghalaya Mine Tragedy

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13ம் தேதி 15 தொழிலாளர்கள் அந்த சுரங்கத்தில் இறங்கி வேலை செய்ய சென்றுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, அருகில் ஓடிக் கொண்டிருந்த லெய்டெய்ன் ஆற்றில் இருந்து நீர், நிலக்கரி சுரங்கத்தில் கசிந்ததால், சுரங்கம் முழுவதும் நீரால் நிரம்பியது.

சுரங்கத்தில் இருந்து நீர் எடுக்க போதுமான வசதி இல்லாத காரணத்தால், அவர்களை மீட்பது மிகவும் கடினமாக இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் கூறினார்கள். உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து, அவர்களை விரைவாக மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் அவர்களை மீட்பதற்காக நேசனல் ஜியோப்சிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட், நேசனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஹைட்ராலஜி, ரூர்கீ மற்றும் சென்னையில் இருந்து ஒரு குழு மேகாலயா விரைந்தனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழு இவர்களை மீட்கும் பணியில் மிகத் தீவிரமாக இறங்கி வந்துள்ளனர்.  இந்திய கடற்படை அண்டர்வாட்டர் ரிமோட்லி ஆப்பரேட்டட் வேஹிக்கிலை சுரங்கத்திற்குள் செலுத்தி, அங்கு இருக்கும் தொழிலாளர்களின் நிலை குறித்து அறிய முற்பட்டனர்.

சுரங்கம் எங்கும் நீர் சூழ்ந்திருக்கிறது. மேலும் ஏற்கனவே சுரங்க தொழிலாளர்களின் உறவினர்கள், அவர்கள் இறந்ததாகவே கருதப்பட்ட நிலையில், அந்த கருவி ஒரு தொழிலாளரின் பிணத்தினை படம் பிடித்து அனுப்பியுள்ளது. நீர் மட்டத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருப்பதால் உள்ளே இறந்து கிடப்பவரின் உடலை மீட்பதில் சிக்கல் எழலாம் என்று இந்திய கடற்படை கூறியுள்ளது.

மேலும் படிக்க : மேகாலயா விரையும் சென்னை இளைஞர்கள்… 15 பேரை உயிருடன் மீட்க உதவுமா நீருக்குள் செயல்படும் ரோபோட் ?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close