மேகாலயா விரையும் சென்னை இளைஞர்கள்... 15 பேரை உயிருடன் மீட்க உதவுமா நீருக்குள் செயல்படும் ரோபோட் ?

அதிசயமாக ஏதேனும் நடந்தால் மட்டுமே அந்த 15 பேர் உயிருடன் வெளியே வரமுடியும்.

மேகாலயா சுரங்கத் தொழிலாளர்கள் : மேகாலயாவின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது ஜெயிந்தியா மலைப்பகுதி. அதன் அருகில் வெகுநாட்களாக நிலக்கரி சுரங்கம் ஒன்று இயங்கி வருகின்றது. அதில் திடீரென தண்ணீர் புகுந்துவிட்டதால், 15 தொழிலாளர்கள் சுரங்கப்பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர்.

ஒரு மாத காலமாக அவர்கள் போதுமான மீட்பு உபகரணங்கள் இல்லாத காராணத்தால் மீட்கப்படாமல் இருக்கின்றனர். சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களின் உறவினர்கள், ஏற்கனவே தொழிலாளிகள் இறந்துவிட்டனர் என்ற முடிவிற்கே வந்துவிட்டனர்.

மேலும் படிக்க : போட்டோவிற்கு போஸ் கொடுப்பது தான் முக்கியமா ? தொழிலாளர்களை காப்பாற்றுங்கள் மோடி – ராகுல் காந்தி

மேகாலயா சுரங்கத் தொழிலாளர்கள் – உதவ முற்படும் சென்னை நிறுவனம்

இந்நிலையில் சென்னையில் இயங்கி வரும் பிளேனிஸ் டெக்னாலஜீஸ் (Planys Technologies) என்ற நிறுவனத்தில் இருந்து நீருக்கு அடியில் இயங்கும் ரோபாட்டிக் (submersible robotic inspections using Remotely Operated Vehicles (ROV)) இயந்திரங்களை மேகாலயாவிற்கு அனுப்பியுள்ளது.

370 அடி ஆழமுள்ள சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்து வரும் அவர்களை மீட்பதற்கு மத்ஹ்டிய அரசும் மாநில அரசும் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும், அவர்களால் சுரங்கத் தொழிலாளிகளை மீட்க இயலவில்லை.  உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, மீட்புப் பணிகள் மிகவும் தொய்வாக நடைபெற்று வருகிறது என்று கண்டனங்களை பதிவு செய்தனர்.

ஒரு மாதத்திற்கு மேலாக அப்பணியாளர்கள், சுரங்கத்தில் உள்ளதால், அவர்கள் உயிர் வாழும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதிசயமாக ஏதேனும் நடந்தால் மட்டுமே அந்த 15 பேர் உயிருடன் வெளியே வரமுடியும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close