குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீரவ் மோடி மற்றும் அவரது தாய்மாமன் மெகுல் சோக்ஷி இருவரும் பஞ்சாப் தேசிய வங்கியில் இருந்து 2 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கடன் வாங்கிவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்டனர்.
அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறையினரால் தேடப்பட்டு வருபவர்கள் நீரவ் மோடி மற்றும் அவருடைய தாய்மாமன் மொகுல் சோக்ஷி ஆவார்கள். பஞ்சாப் தேசிய வங்கியில் இருந்து வாங்கிய கடனைத் திருப்பி அளிக்காமல் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சர்வதேச காவலர்களின் உதவியுடன் தேடி வருகிறார்கள் இந்திய புலனாய்வுத் துறை.
மேலும் படிக்க : ஆண்ட்டிகுவா நாட்டில் இருக்கும் மெகுல்
மெகுல் சோக்ஷியின் உதவியாளர் கைது
இந்நிலையில் மொகுல் சோக்சியின் உதவியாளரான தீபக் குல்கர்னியை கொல்கத்தாவில் வைத்து கைது செய்திருக்கிறார்கள் புலனாய்வுத் துறையினர். செவ்வாய் கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் சோக்ஷிக்கு சொந்தமான டம்மி நிறுவனம் ஒன்றின் இயக்குநராக செயல்பட்டு வந்தார். அந்த நிறுவனம் ஹாங்காங்கில் இருக்கிறது. ஹாங்காங்கில் இருந்து இந்தியா திரும்பி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது நான் - பெய்லபிள் வழக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியா வர மறுக்கும் மெகுல் சோக்ஷி
கடந்த வாரம், மெகுல் சோக்ஷி பண மோசடி வழக்கினை விசாரித்து வரும் நீதிமன்றத்தில் “என்னால் இந்தியாவிற்கு திரும்பி வர இயலாது. எனக்கு சர்க்கரை நோய், இதயத்தில் அடைப்பு, மற்றும் மூளையில் இரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகள் இருப்பதால் என்னால் 41 மணி நேரத்திற்கும் மேலாக விமானங்களில் பயணித்து இந்தியா வருவது என்பது மிகவும் கடினமான காரியம்” என்று அறிக்கை ஒன்றினை தன்னுடைய வழக்கறிஞர்கள் சஞ்சய் அப்பாட் மற்றும் ராகுல் அகர்வால் மூலம் தாக்கல் செய்திருக்கிறார்.