பெண்கள் மாதவிடாய் நாள்களில் கணவருக்காக உணவை சமைத்தால், அடுத்த பிறவியில் அவர்கள் நாயாகத்தான் பிறப்பார்கள் என சுவாமி கிருஷ்ண ஸ்வரூப் தாஸ்ஜி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் உள்ள சுவாமி நாராயண் கோயிலைச் சேர்ந்த சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி ஆற்றும் சொற்பொழிவுகள் பல அந்தக் கோயிலின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளன.
காந்தியைப் பின்பற்றுபவர்கள் கோட்சே ஆதரவாளர்களுடன் நிற்க முடியாது; பிரசாந்த் கிஷோர்
இந்த நிலையில், அவர் சொற்பொழிவு ஆற்றும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில்
"மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் சமைத்த உணவை உண்டால் ஆண்கள் அடுத்த பிறவியில் காளை மாடுகளாகப் பிறப்பார்கள். என்னுடைய பார்வை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால், இவையனைத்தும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மாதவிடாய் நாள்களில் கணவருக்காக உணவைச் சமைத்தால் பெண்கள் நிச்சயம் அடுத்த பிறவியில் நாய்களாகத்தான் பிறப்பார்கள்.
மாதவிடாய் நாட்கள் என்பது தவமிருப்பது போன்றது என்பதைப் பெண்கள் உணரமாட்டார்கள். இவை நமது சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளன. இதை உங்களிடம் சொல்வதற்கு எனக்கும்கூட விருப்பம் இல்லை. ஆனால், நான் உங்களை எச்சரிக்க வேண்டும். ஆண்கள் சமைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு அது உதவும்" என்றார்.
முன்னதாக, கடந்த 11ம் தேதி பூஜ் பகுதியில் ஸ்ரீ சகஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருக்கும் பெண்களில் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் யார் என்பதை அறிய அங்கு தங்கியிருந்த 68 பெண்களும் உள்ளாடைகளை நீக்கி சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தச் செயல் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, இதுதொடர்பாக மாணவியர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மாநில மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் கல்லுரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ட்ரெம்ப் வருகை : சேரியில் வசிக்கும் மக்கள் விரைவாக வெளியேற உத்தரவு
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி முதல்வர் உட்பட மூவரை காவல் துறையினர் நேற்று (திங்கள்கிழமை) கைது செய்தது குறிப்பிடத்தக்கது.