நேர்த்தியான திட்டமிடல் ; உமா தான் பொறுப்பேற்றார் – நீதிபதி லிபரான்!

”கொரில்லா இயக்கம் போல், டிசம்பர் 6ம் தேதி செயல்பட வேண்டும் என்று அவர் கூறியதாக செய்தி வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவித்தோ, முரணாகவோ இந்த இயக்கத்தின் தலைவர்கள் ஒரு போதும் கருத்து கூறவில்லை

By: October 1, 2020, 12:33:40 PM

Manraj Grewal Sharma , Dipankar Ghose 

Justice Liberhan on Babri Masjid demolition : ”அதில் சதி இருப்பதை நான் கண்டு பிடித்தேன். அதை நான் இன்னும் நம்புகிறேன். நான் சமர்பித்த அனைத்து சாட்சியங்களும் பாபர் மசூதி இடிப்பு என்பது நுணுக்கமாக திட்டமிட்டப்பட்டு நடத்தப்பட்டது தான். உமா பாரதிக்கு இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டது என்பதை இன்னும் நினைவில் கொண்டுள்ளேன். கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒன்று மசூதியை இடிக்கவில்லை. மனிதர்கள் தான் இடித்தார்கள்” என்று புதன்கிழமை அன்று இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு கூறுகிறார்

Meticulously planned, Uma took onus: Justice Liberhan on Babri Masjid demolition சண்டிகரில் இருக்கும் தன் வீட்டில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மன்மோகன் சிங் லிபரான்

.

லிபரான் ஆணையம், பாபர் மசூதி இடிப்பு வழக்கினை விசாரிக்கை 1992ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அறிக்கை 2009ம் ஆண்டு சமர்பிக்கப்பட்டது. அதில் மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மற்றும் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பெயரும், இந்த இடிப்பிற்கு மறைமுகமாக அனுமதி அளித்த அன்றைய உ.பியின் மாநில அரசின் செயல்பாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. “அவர்கள் இடிப்பதை தீவிரமாகவோ அல்லது அமைதியான முறையிலோ ஆதரித்தனர்,” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

கரசேவர்களின் வருகை அங்கு தன்னிச்சையாகவோ, தன்னார்வத்துடனோ நடைபெறவில்லை மாறாக திட்டமிடப்பட்டு நடைபெற்றது என்று ஆணையம் அறிவித்திருந்தது. அந்த அறிக்கையில் பாஜக தலைவர்கள் அத்வானி, ஜோஷி, பாரதி, ஏ.பி. வாஜ்பாய், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், வி.எச்.பி. தலைவர்கள், மற்றும் அதிகாரிகள் உட்பட 60 நபர்களின் பெயர்கள் , நாட்டினை இனவாத முரண்பாட்டின் விளிம்பிற்கு இட்டுச் சென்ற குற்றவாளிகள் என்று பட்டியலிட்டது.

 

 

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

என்னுடைய அறிக்கை சரியானது, நேர்மையானது, பயத்தில் இருந்தும் பக்கசார்பில் இருந்தும் முற்றிலும் விடுபட்டவை என்று கூறிய நீதிபதி, வருங்காலத்தினருக்கு, என்ன நடந்தது என்பதை நேர்மையாக விளக்கும் ஒரு அறிக்கையாக அமையும். இது வரலாற்றின் ஒரு முக்கிய அங்கமாகும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், நீதிமன்றத்தின் முடிவு குறித்து அவர் கருத்து கூறவில்லை. நான் சி.பி.ஐ விசாரணை குறித்தோ, நீதிபதி குறித்தோ, நீதிமன்றம் குறித்தோ எதுவும் கூறமாட்டேன். அனைவரும் அவர்களின் கடமையை நேர்மையாக நிறைவேற்றினார்கள் என்று நம்புகின்றேன். நீதிமன்றத்திற்கு வேறுபடுவதற்கு உரிமை உண்டு, அதன் அதிகாரங்கள் அல்லது வேலை குறித்து எந்தவிதமான சர்ச்சையும் இருக்க முடியாது” என்றார்.

Meticulously planned, Uma took onus: Justice Liberhan on Babri Masjid demolition 2015ம் ஆண்டில் ரேபரேலியில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி

அத்வானி, வாஜ்பாய் ஆகியோர் எனக்கு முன்பு ஆஜாரானர்கள். நான் கண்டறிந்ததை, நான் என் அறிக்கையில் சமர்பித்ததிற்கு மாறாக அவர்களாலே எதிர்ப்பு கூற முடியாது. சிலர், இந்த இடிப்பிற்கு பொறுப்பேற்றார்கள். உமா பாரதி பொறுப்பு கூறினார். ஆனால் இப்போது நீதிபதி, உமா பாரதி பொறுப்பு இல்லை என்று கூறினார். இனி என்னால் என்ன செய்ய இயலும்… எனக்கு முன் சாட்சி அளித்த சாட்சியங்களிலிருந்தும், சாட்சிகளின் கணக்குகளிலிருந்தும், நான் மட்டுமல்ல, எவரும் இது ஒரு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்று நியாயமான முறையில் முடிவு செய்திருக்க முடியும், ”என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க : பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, ஜோஷி உள்பட 32 பேரும் விடுவிப்பு

அவருடைய அறிக்கையை மசூதியை உடைத்தது யார், எந்த சூழ்நிலை இது போன்ற நிகழ்வுக்கு வழிவகுத்தது, மசூதி இடிப்பதற்கான உண்மையான ஆதாரம் என்ன என்பதை கண்டுபிடிப்பதே இதன் நோக்கமாகும். சிலருக்கு பக்தி ரீதியான காரணங்கள் இருக்கலாம். ஆனால் அரசியல்வாதிகளுக்கு, அவர்களுக்கு ஆதரவாக வாக்குகளை உருவாக்க மிக முக்கிய காரணமாக இது இருக்கும் என்று அவர் கூறினார்.

82 வயதாகும் முன்னாள் ஆந்திர மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான இவர், இந்த மசூதி இடிப்பு, முறையான நிர்வாக திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் தடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறினார். இடிப்பினை தடுக்கவோ, மத வெறுப்பு பரவலை தடுக்கவோ எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

லிபரான் அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்க் தால், வி.எச்.பி, பாஜக, மற்றும் சிவசேனா தொண்டர்கள் அவர்கள் தலைவர்களுடன், மசூதி இடிக்கப்படும் சமயங்களில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தீவிரமாகவோ அல்லது செயலற்ற முறையிலோ இந்த இடிப்பிற்கு ஆதரவளித்தனர். மதகுருக்கள், சாதுக்கள், நிர்வாகிகள், காவல்துறையினர், கர சேவர்கள் மற்றும் ஊடகத்துறையினர் ஆகியோரும் அங்கு இருந்தனர். அரசியல் ரீதியாக விரும்பதக்க முடிவுகளை பெறுவதற்கான, அரசியல் அதிகாரங்களை பெறுவதற்காக இவை அரங்கேறியது என்று அவர் கூறினார்.

அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்டதைஜோஷியுடன் இணைந்து கொண்டாடும் உமா பாரதி (Express Photo by Kedar Jain)

அன்றைய உ.பி. அரசு வேண்டுமென்றே இந்த இயக்கம் செயல்பட அனுமதித்தது. மேலும் அயோத்தி, ஃபைசாபாத்தினை நிர்வாகிக்கவும் ஆதரவளித்தது. மசூதி இடிப்பு நடைபெற்று முடியும் வரையில் துணை ராணுவத்தை பயன்படுத்தவில்லை. அவருக்கு அங்கே நிகழும் அனைத்து விவகாரங்களும் முழுமையாக தெரியும். எந்தவொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையையும் எடுக்க அவர் தயக்கம் காட்டினார், அதற்கான காரணங்கள் விவரிக்க முடியாதது என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க : அனைவரும் விடுதலை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் கூறுவது என்ன?

இந்த கூட்டத்தின் செயல்பாடுகளை தடுக்கமுடியாத அளவுக்கு அரசு இல்லை என்று கூறிவிட இயலாது. அதற்கு மாறாக இது முற்றிலும் பரிதாபகரமான, வெட்ககேடான வழக்கு. முதல்வரும் அவருடைய கூட்டாளிகளும், அரசுக்கு உள்ளேயும் வெளியேயும், அவரின் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும், சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் கட்டிட இடிப்பையும், அதன் மூலம் ஏற்பட இருக்கும் கலவரங்களையும் நிறுத்த தேவையான நல்லறிவையும் பொது அறிவையும் தீவிரமாக தடுத்து நிறுத்திவிட்டனர். அரசு அலுவலர்கள் குறித்து கூறிய போது, ஆணையம், அரசிடம் இருந்து கிடைக்க இருக்கும் பின்விளைவுகள் குறித்து பயந்து, : “கர் சேவகர்கள் அல்லது கர் சேவாவின் மீது எந்தவொரு கட்டுப்பாட்டையும் நிர்வாகத்தால் செய்ய முடியவில்லை, செய்யவில்லை, அல்லது அதை ஒழுங்குபடுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

”அத்வானியால் ராம் ஜானகி யாத்திரை 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, சர்ச்சைக்குரிய நிலத்தில் கோவில் கட்டுவதற்காக, மக்களை திரட்ட நடத்தபப்ட்டது. மதுரா, காசி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் மக்களை அயோத்தி வழக்கிற்காக திரட்டியது, தேசிய அரசியல் கட்சியான பாஜக தான். அரசியல் சாசன மதசார்பற்ற தன்மையை போலி – மதசார்பின்மை என்று அழைத்தது” என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

டிசம்பர் 6, 1992ம் ஆண்டு, அத்வானி, ஜோஷி மற்றும் அந்த இடத்தில் இருந்த மற்ற தலைவர்கள், கர சேவகர்களை, சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து இறங்கி வர வேண்டும் என்று பலவீனமான கோரிக்கையை முன்வைத்தார்கள். ஆனால் ஒரு கட்டுமானத்தை, அதன் கோபுரத்தில் இருந்து தகர்க்க முடியாது என்பது எவராலும் உணர்ந்து கொள்ள முடியும். இந்த தலைவர்கள் யாரும் கர்ப கிரகத்திற்குள் செல்ல வேண்டாம் என்றோ, குவிமாடங்களில் உள்ளிருந்து இடிக்க வேண்டாம் என்றோ கோரிக்கையே வைக்கவில்லை. தலைவர்களின் இந்த செயல்கள், ஒருவரின் மறைக்கப்பட்ட நோக்கங்களைப் பற்றியும், சர்ச்சைக்குரிய கட்டமைப்பை இடிப்பதை நிறைவேற்றுவதையும் பற்றி பேசுகிறது.

Meticulously planned, Uma took onus: Justice Liberhan on Babri Masjid demolition
கர் சேவக் மசூதி இடிப்பில் ஈடுபட்ட நில நேரம் கழித்து பாஜக தலைவர்கள் எல்.கே. அத்வானி, எம்.எம்.ஜோஷி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்ட காட்சிகள் (Express photo by R K Sharma)

அன்று மத்தியில் ஆளும் அரசாக இருந்த காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்துள்ளது இந்த ஆணையம். பி.வி. நரசிம்ம ராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. “மாநில அரசு அதன் தேர்தல் அறிக்கைக்கு எதிராக தான் நடந்து கொள்ளும் என்று மத்திய அரசு பகற்கனவு கண்டு கொண்டிருந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பத் ராய், தற்போது, ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் பொது செயலாளராக இருக்கும் அவர் ராமர் கோவில் கட்டுவதற்கான பொறுப்பில் உள்ளார். ”கொரில்லா இயக்கம் போல், டிசம்பர் 6ம் தேதி செயல்பட வேண்டும் என்று அவர் கூறியதாக செய்தி வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவித்தோ, முரணாகவோ இந்த இயக்கத்தின் தலைவர்கள் ஒரு போதும் கருத்து கூறவில்லை என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.  சாட்சிகளின் முன்கணிப்பு கர சேவர்களின் அணி திரட்டல் என்பது தன்னிச்சையாகவோ அல்லது தன்னார்வத்துடனோ நிகழவில்லை மாறாக இது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Meticulously planned uma took onus justice liberhan on babri masjid demolition

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X