MeToo Movement in India : இந்தியாவில் ஊடகத்துறை மற்றும் திரைப்பட துறையில் நடைபெற்று வரும் பாலியல் சுரண்டல்களை மையப்படுத்தி தொடர் புகார்களை முன் வைத்து வருகின்றனர் ஊடகவியலாளர்கள் மற்றும் நடிகைகள். இந்நிலையில் முதன்முறையாக ஒரு மத்திய அமைச்சர் மீதும் #MeTooIndia மூலம் தங்களின் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர் 11 ஊடகவியலாளர்கள். மேலும் படிக்க : பணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்களை எப்படி அளிப்பது ?
இந்த குற்றச்சாட்டுகள் இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட சமயத்தில் அந்த மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் நைஜீரியாவில் ஒரு வர்த்தகம் தொடர்பான நிகழ்வு ஒன்றில் இருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலை முன்வைக்கவில்லை என்றால் எம்.ஜே. அக்பர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தரப்பு வலியுறுத்தி வந்தது.
மேலும் படிக்க பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு
இந்நிலையில் நைஜீரியாவில் இருந்து திரும்பி வந்த எம்.ஜே. அக்பர் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று மறுப்பு கூறியிருக்கிறார். இதற்கு புகார் கூறிய ஊடகவியலாளர்களில் ஐவர் நாங்கள் கூறியது உண்மை தான் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்கள். அதில் இருவர், அக்பரின் மறுப்பு மனவருத்தத்தை அளிக்கிறது. ஆனால் இதை நாங்கள் எதிர்பார்த்தோம் தான் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
எம்.ஜே அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு
இது குறித்து சுபர்ணா ஷர்மா கூறுகையில் “என்னால் இரண்டு சம்பவங்களை உறுதியாக கூற இயலும். ஒன்று என்னுடைய உள்ளாடையை பற்றி இழுத்தது.. மற்றொன்று தர்ம சங்கடத்தை வரவழைக்கும் மாதிரியாக என்னை பார்த்தது. இதே போல் மற்ற பெண்களுக்கும் நடந்த கொடுமைகளைப் பற்றியும் என்னால் உறுதியாக கூற இயலும்” என்று கூறியிருக்கிறார். எம்.ஜே. அக்பரின் மறுப்பு எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. இது எதிர்பார்த்த ஒன்று தான் என அவர் குறிப்பிட்டிருக்கிறார். இது மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள இருக்கும் பிரச்சனையாகவே இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். எம்.ஜே. அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்த ஊடகவியலாளர்கள்
MeToo Movement in India : எம்.ஜே. அக்பர் பாலியல் குற்றச்சாட்டு மறுப்பு
நைஜீரியாவில் இருந்து வந்த எம்.ஜே. அக்பர், தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு கூறி அறிக்கை விடுத்திருக்கிறார். அதில், என் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு போடவும் தயார் என்ற ரீதியில் கூறியிருக்கிறார். இது குறித்து ஷர்மாவிடம் கேட்கும் போது “இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி தர நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்ற தொணியில் கூறியிருக்கிறார்.
அந்நிய நாட்டு ஊடகவியலாளரின் குற்றச்சாட்டு
இது வரை இந்திய ஊடகவியலாளர்கள் மட்டும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த மஜ்லீ டே புய் கம்ப் என்ற ஊடகவியலாளர், தான் இண்டெர்னாக ஆசியன் ஏஜ்ஜில் பணியாற்றிய காலத்தில் எம்.ஜே. அக்பர் தன்னிடம் நடந்து கொண்டதை குற்றச்சாட்டாக முன் வைத்தார்.
அவரிடம் பொது தேர்தல்கள் வர இருக்கும் நேரத்தில் இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பபடுவது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போது, நான் இந்திய நாட்டின் பிரஜை கிடையாது, நான் வாக்களிக்கவும் போவது இல்லை, மேலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த அரசியல் பின்புலமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
என்னிடம் தவறாக எம்.ஜே. அக்பர் நடந்து கொண்டார். அது குறித்து என் தந்தை வருத்தம் தெரிவித்து எம்.ஜே அக்பருக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. எம்.ஜே, அக்பரின் மறுப்பு அப்படியாக அதிர்ச்சி ஒன்றையும் அளிக்கவில்லை. ஆனால் நான் கூறியது உண்மை என்று அவர் கூறியிருக்கிறார்.
புய் கம்ப் ஆசியன் ஏஜ் பத்திரிக்கையில் இண்டெர்ன்னாக வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, எம்.ஜே. அக்பர் தன்னுடைய விருப்பம் இல்லாமல் முத்தமிட்டார் என்ற குற்றச்சாட்டினை முன் வைத்திருக்கிறார்.
பிரியா ரமணியின் நிலைப்பாடு
எம்.ஜே. அக்பர் குறித்து முதன்முறையாக குற்றச்சாட்டு வைத்தவர் பிரியா ரமணி. அவர் இந்த மறுப்பு குறித்து பேசும் போது “எம்.ஜே.அக்பர் தவிர இந்த புகார்களில் சம்பந்தம்பட்ட எங்கள் எவருக்கும் அரசியல் நோக்கமும் ஆதாயமும் கிடையாது. மான நஷ்ட வழக்கு போட்டாலும் உண்மை எதுவோ அதுவே ஜெயிக்கும் என்று கூறியிருக்கிறார். கனிகா கஹ்லௌத் கூறுகையிலும் “நான் என்னுடைய புகாரில் எந்த வித மாற்றுக் கருத்தும் கூறாமல் உறுதியாக நிற்கிறேன் என்று கூறியிருக்கிறார். MeToo Movement in India மூலமாக பணியிடங்களில் தமக்கு நடைபெற்று வரும் பாலியல் தொந்தரவுகள் குறித்த அனுபவத்தினை பெண்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.