எம்.ஜே. அக்பர் #MeToo விவகாரம் : மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் பத்திரிக்கை ஆசிரியராக இருந்த காலத்தில், தன்னுடன் வேலை பார்த்து வந்த பெண் ஊடகவியலாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்து வந்ததாக நேற்று மாலை வரை சுமார் 7 ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். வர்த்தக நிகழ்வு ஒன்றிற்காக நைஜீரியா சென்றுள்ள எம்.ஜே. அக்பரிடம் இது குறித்து கேட்கப்பட்ட எந்த கேள்விகளுக்கும் இதுவரை அவரிடம் இருந்து பதில்களும் வரவில்லை. ஆறு பத்திரிக்கையாளர்கள் அளித்த குற்றச்சாட்டு குறித்த செய்தியைப் படிக்க
இது குறித்து மத்திய அரசு இன்று வரை மௌனம் சாத்தித்து வருகிறது. ஆனால் எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் எம்.ஜே. அக்பர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ஆங்காங்கே கருத்து பத்விட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று நடைபெற்ற கேபினெட் மீட்டிங்கில் அக்பர் குறித்த விவாதம் எதுவும் நடைபெற வில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் படிக்க : எம்.ஜே. அக்பர் விவகாரம் குறித்து பேசிய பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
ஆனால் ஒரு பெரிய தலைவர் மீதான இந்த குற்றச்சாட்டுகளை அப்படியாக விட்டுச் செல்லவும் முடியாமல் இருக்கின்றன. இந்த அரசு பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காக உஜ்வாலா, பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ், முத்ரா, முத்தலாக், தேசிய அளவில் துப்புரவு தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றை இந்த அரசு கொண்டு வந்த காரணத்தால் இது போன்ற புகார்களை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள இயலவில்லை என்ற நிலைப்பாடு அமைச்சர்கள் மத்தியில் நிலவிவருகிறது. பணியிடத்தில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்கள் செய்ய வேண்டியவை என்னென்ன?
அவர் தன்னுடைய அமைச்சர் பதவியை தொடருவாரா அல்லது பணி நீக்கம் செய்யப்படுவாரா என்பதை, நைஜீரியாவில் இருந்து அவர் திரும்பி வந்த பின்பே முடிவு செய்யப்படும் என்று மத்திய அமைச்சகம் முடிவெடுத்திருக்கிறது.
எம்.ஜே. அக்பர் #MeToo விவகாரம் எதிர்கட்சிகளின் நிலைப்பாடு
தொடர் புகார்கள் வெளிவந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அனைவரும் “இந்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு முறையான பதிலை எம்.ஜே. அக்பர் அளிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து விலக வேண்டும்” என்று கூறி வருகின்றனர்.
எம்.ஜே. அக்பர் #MeToo விவகாரம் - பாஜக பெண் அமைச்சர்களின் கருத்து
ஆனால் பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் “இந்த பிரச்சனைகள் அனைத்தும் அவர் ஊடகவியல் துறையில் இருந்த போது நடைபெற்றது. அதற்கும் அமைச்சர் பதவிக்கும் என்ன சம்பந்தம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொருமொரு பாஜக தலைவர், அக்பர் மீது இதுவரை எந்த வழக்கும் அதிகாரப்பூர்வமாக பதியப்படவில்லை. ஆனால் இது நன்னடத்தை தொடர்பான விசயமாக இருக்கிறது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இது குறித்து நிச்சயம் எம்.ஜே. அக்பர் மட்டுமே கருத்து கூற வேண்டும் என்று மற்றொரு பாஜக தலைவர் கூறியிருக்கிறார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இது குறித்து மத்திய அமைச்சர் உமா பாரதி குறிப்பிடுகையில் #MeToo விவகாரம், இனி பெண்களின் பணியிடத்தில் போதுமான பாதுகாப்பினை உருவாக்கிடும் என்று நம்புவோம். இனி மேல் இது தொடர்பான பிரச்சனைகளில் ஆண்கள் அதிக கவனமுடன் இருப்பார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதே போன்ற கருத்துகளை மக்களவை உறுப்பினர்களான மீனாட்சி லேகி மற்றும் பூனம் மஹாஜன் கூறியிருக்கிறார்கள்.
உமா பாரதி இந்த மீடு கேம்பைன் நல்ல ஒரு தொடக்கம் என்று கூறியிருக்கிறார். மேலும் இது போன்ற புகார்களை கூறும் பெண்களுக்கு உற்ற துணையாக அனைவரும் உடன் நிற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சூரத்தை சேர்ந்த தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் என்ற எம்.பி. இது குறித்து பேசுகையில், நரேந்திர மோடியின் ஆட்சியில் அனைவருக்கும் சுதந்திரம் இருக்கின்ற காரணத்தால் பயம் இல்லாமல் தைரியமாக தங்களுக்கு நடந்த அவலங்களை உடனுக்குடன் தெரிவித்திருக்கிறார்கள். முன்பு இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க போதுமான சூழ்நிலை அன்று அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.