Advertisment

ஏழு நாட்கள் சைக்கிளில் பயணித்து ஊர் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை!

லாக்டவுனுக்கு பிறகே அவருடைய வேலை பறிபோனதாக அவரின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Migrant worker cycled 7 days from Maharashtra to UP committed suicide

Migrant worker cycled 7 days from Maharashtra to UP committed suicide

Migrant worker cycled 7 days from Maharashtra to UP committed suicide : புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப பெயர் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். கால்களாலும், சைக்களில்களிலும் தினம் தங்களின் சொந்த மாநிலங்களை நோக்கி சாரை சாரையாக நகர்ந்து வருகின்றனர். வேலை இழந்த விரக்தி, அடுத்தது என்ன என்ற நிலை, செலவுக்கு என்ன செய்வது என்பது போன்ற யோசனைகளையெல்லாம் யாராலும் தடுக்கவே முடியாது என்பது உண்மை தான்.

Advertisment

மகாராஷ்ட்ராவில் இருந்து சைக்கிளில் தன்னுடைய சொந்த மாநிலமான உத்திர பிரதேசத்திற்கு 7 நாட்கள் சைக்கிள் மிதித்துக் கொண்டு வந்து சேர்ந்தார் சுனில் என்பவர். 19 வயதாகும் அவரின் பூர்வீகம் உ.பி.யில் இருக்கும் பண்டா மாவட்டத்தில் உள்ள மியூசிவியான் கிராமம் ஆகும்.

மேலும் படிக்க : தயாநிதி மாறன், டி.ஆர். பாலு, ஐகோர்ட்டில் மனு; வன்கொடுமை தடுப்பு வழக்கை ரத்து செய்ய கோரிக்கை

வெள்ளிக்கிழமை அவர் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து இறந்துவிட்டார். வெளி மாநிலத்தில் இருந்து வந்ததால் தனிமனித விலகலை கடைபிடித்த அவர் வீட்டை விட்டு எங்கும் வெளியே போகவில்லை. வீட்டிலேயே இருந்த அவரின் குவாரண்டைன் காலம் சனிக்கிழமையோடு நிறைவடைய இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.

அவருடைய அப்பா குஜராத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். மகாராஷ்ட்ராவில் இருந்து வீடு திரும்பிய போது அவரிடம் கையில் ஒரு ரூபாய் கூட இல்லையான். லாக்டவுனுக்கு பிறகே அவருடைய வேலை பறிபோனதாக அவரின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Migrant Workers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment