படைகள் நகர்வு: எல்லையில் ராணுவ குவிப்பு அபாயம்

சீன-இந்திய எல்லைப் பகுதியின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது - சீனா குற்றச்சாட்டு!

By: Updated: September 1, 2020, 06:36:23 PM

 Sushant Singh

Military moves raise fears of escalation along LAC : திங்கள் கிழமையன்று இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையே எல்லையில் நிலவிய பதட்டமான சூழலை தொடர்ந்து இரு படைகளும் சமரசமற்ற அறிக்கைகளை வெளியிட்டது. இதனால் லைன் ஆஃப் கண்ட்ரோல் பகுதியில் ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் அச்சம் எழுந்துள்ளது. அரசியல் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் இந்நிகழ்வு அச்சத்தை தருகிறது. இரண்டு ராணுவத்தினரும் பாங்கோங் திசோ பகுதியில் முன்னேறியதன் பிறகு இந்த அறிக்கைகள் வெளியானது. பாங்கோங் திசோவின் வடக்கு கரை போல் இல்லாமல், தெற்கு பகுதியில் இந்திய ராணுவனத்தின் துருப்புகள் அதிகமாக உள்ளது. இங்கு ரோந்து பணியில் இந்திய ராணுவம் ஈடுபடுவது வழக்கம். இந்த பகுதியில் இந்தியாவின் ராணுவம் குறித்து நன்றாக அறிந்திருக்கும் சீனா இங்கு எல்லை மீறல்களில் ஈடுபடவில்லை. இருப்பினும் இந்தியா இருக்கும் இடத்தில் இருந்து 8 கி.மீக்கு பின்னால் மேற்கே லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் இருப்பதாக சீனா நம்புகிறது.

To read this article in English

எல்.ஏ.சி குறித்த சீனாவின் நிலைப்பட்டை வலுப்படுத்தவே சீனாவின் ராணுவம் இந்த பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. இருப்பினும் சீனாவிற்கு இந்தியா தக்க பதிலடி தந்துள்ளது. இந்த போக்கு மேலும் தொடருமானால், பி.எல்.ஏ, டெம்சாக் மற்றும் சுமார் பகுதிகளிலும் இதே போன்ற தாக்குதல்களை நடத்தலாம். நிலைமை ஏற்கனவே பதட்டமாக இருப்பதால் ஒரு தவறான புரிதலும் கூட இரண்டு எல்லைகளிலு ராணுவத்தினரை வலுப்படுத்த வழி வகுக்கும்.

கடந்த 17 வாரங்கள் பிரச்சனையாக இருந்த பகுதியை தவிர்த்த, எல்.ஏ.சியில் இருக்கும் ஒரு புதிய பகுதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. லடாக்கில் இந்திய சீன எல்லையில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ராணுவ செயல்பாடுகள் நடத்தப்படலாம் என்பதை இது காட்ட்டுகிறது. எல்லைகளில் விரிவாகும் இந்த பதட்டம், இரண்டு பகுதிகளிலும் அதிக அளவு துருப்புகளுடன் மேலாதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றனர். இத்தகைய குற்றம் சாட்டப்பட்ட சூழலில், இருபுறமும் துருப்புக்கள் அதிக அளவில் குவிப்பது, நிலையற்ற அமைப்பு ஒரு பெரிய இராணுவ விரிவாக்கத்திற்கு முயற்சி செய்வதை மேற்கோள் காட்டுகிறது. இருதரப்பில் இருந்தும் வெளியிடப்பட்ட அறிக்கை சம்பவம் நடந்த தேதி குறித்தும் உடன்படவில்லை. ஒரு சிறு அசைவும் சந்தேகத்திற்கும் பெரும் எதிர்வினைக்கும் வழி வகுக்கும் சூழலில் நடைபெற்ற இந்நிகழ்வு இரு தரப்பிற்கும் இடையே இருந்த நம்பிக்கை முழுமையாக முறிந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.எல்.ஏ தற்போது இருக்கும் நிலைமையை மாற்றுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் உரையாடலின் மூலம் அமைதியையும் அமைதியை பேணுவதற்குமான உறுதியை கொடுத்துள்ளது. அதே போன்று பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுக்காக்கவும் தீர்மானம் செய்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சி.டி.எஸ். ஜெனரல் பிபின் ராவத்தின் கருத்துடன் இது ஒத்துப்போகிறது. கடந்த வாரம் இவர் பேசிய போது “சீன ராணுவத்தின் மீறல்களை தடுக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. இருப்பினும் ராணுவம் மற்றும் அரசியல் அளவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடையும் போதே அதனை செயல்படுத்துவோம்” என்று கூறினார்.

மேலும் படிக்க : ‘அது துரதிர்ஷ்ட நிகழ்வு; இப்போது பிரச்னையை முறையாக கையாளுகிறோம்’: சீனா

லடாக்கில் சீனாவின் நகர்வுகள் குறித்து இந்தியாவில் மக்கள் ஏற்கனவே கோபத்தில் உள்ளனர், மேலும் திங்களன்று நடைபெற்ற தாக்குதல் சீனாவுக்கு எதிரான பொதுக் கருத்தை மேலும் தூண்டிவிடும். “இந்திய தரப்பின் இந்த நடவடிக்கை சீனாவின் பிராந்திய இறையாண்மையை கடுமையாக மீறியது மற்றும் சீன-இந்திய எல்லைப் பகுதியின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது” என்று இந்தியா மீது குற்றம் சாட்டிய பின்னர், பி.எல்.ஏ அறிக்கை, தேவையான எதிர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், சீனாவின் பிராந்திய இறையாண்மை மற்றும் எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதியுடன் பாதுகாத்தல் குறித்து கவனம் செலுத்துவதாகவும் கூறியது ”.

மேலும் படிக்க : கிழக்கு லடாக்கில் புதிய பதற்றம்: நிலையை மாற்ற சீனாவின் முயற்சிகளை தடுக்கும் ராணுவம்

சீனா மக்கள் மனநிலையும் சிறப்பாக இல்லை. இந்தியாவின் செயல்பாடுகளுக்கு எதிராக போராடுவதில் சீன அரசாங்கம் கடுமையாக இருக்க வேண்டும் என்று ‘குளோபல் டைம்ஸ்’ மற்றும் சீனா இன்ஸ்டிடியூட் ஆப் கன்டெம்பொராரி இண்டெர்நேசனல் ரிலேசன்ஸ் (சி.ஐ.சி.ஐ.ஆர்) சமீபத்தில் நடத்திய ஆய்வில் 70 சதவீதம் பேர் பதிலளித்தனர். கணக்கெடுப்பில் 89.1 சதவிகிதம் பேர் இராணுவ பதிலடிக்கு ஆதரவளித்தனர், அவர்களில் 50.4% பேர் தற்காப்பு மற்றும் எதிர் தாக்குதல்களை வலுவாக ஆதரிக்கின்றனர்.

இந்தியத் துருப்புக்கள் பாங்காங் த்சோவின் தென் கரையில் அவர்கள் ஆக்கிரமித்திருந்த உயரத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று சீனத் தரப்பு வலியுறுத்திய அதே வேளையில், இந்தியர்கள் மறுத்துவிட்டனர், அவர்கள் இப்போது அங்கிருந்து சென்றுவிட்டால் சீனர்கள் அந்த பகுதிகளை ஆக்கிரமிப்பார்கள் என்று வாதிட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Military moves raise fears of escalation along lac

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X