Advertisment

உயர்த்தப்பட்ட பெண்களின் திருமண வயது: தனிநபர் சட்டங்களில் மாற்றம் ஏற்படலாம் என சிறுபான்மையினர் அச்சம்

இந்த மசோதாவின் பின்னால் இருக்கும் அறிவியல்பூர்வமான காரணங்கள் எங்கே? ஒரு பெண் 18 வயதில் திருமணம் செய்து கொள்ள முடியாத அளவிற்கு ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கும் போது அவளால் 21 வயதில் எப்படி மாற முடியும்? இங்கு பிரச்சனை திருமண வயதில் இல்லை. ஆனால் வறுமையில் இருக்கிறது என்றார் ஃபரூக்கி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Minorities back raising marriage age of women

Indian wedding hands with gold

Esha Roy 

Advertisment

Minorities back raising marriage age of women : பெண்களின் சட்டபூர்வமான திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தி சமீபத்தில் குழந்தை திருமண தடை சட்ட மசோதா 2021, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்காக மத்திய அரசு அனுப்பியுள்ள நிலையில் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் இந்த மாற்றம் நாட்டில் இருக்கும் தனிநபர் சட்டங்களை பாதிக்கும் என்ற கவலைகளை எழுப்பியுள்ளனர்.

பெரும்பாலான சிறுபான்மை சமூகத்தினர் திருமண வயதை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் இந்திய அரசியலமைப்பின் கீழ் தனிநபர் சட்டங்கள் பாதுகாக்கப்படுவதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மசோதாவின்படி தற்போது முன்மொழியப்பட்டு இருக்கும் இந்த சட்டம் அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும் எனவே ஒரு முறை சட்டம் செயல்பாட்டுக்கு வரும் வரும் எனில் ஏற்கனவே இருக்கும் திருமண மற்றும் தனிநபர் சட்டங்கள் மாற்றங்களைக் காணும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசிடம் பார்சி சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை அமைப்பான ஜியோ பார்சியின் இயக்குநர் மருத்துவர் ஷெர்னாஸ் காமா, “இந்த சட்டம் தங்களின் சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார். ஏற்கனவே மிகவும் தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தை எங்களின் சமூகம் கொண்டுள்ளது என்று கூறிய அவர், தனிநபர் சட்டங்களில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை தான் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பார்சி சமூகத்தில் உள்ள பெண்கள் 28 முதல் 30 வயது வரை திருமணம் செய்து கொள்வதில்லை. பொதுவாகவே பார்சி ஆண்கள் 35 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள். இது தேசிய சராசரி வயதை (22-24) விட அதிகம். ஆனால் தனிநபர் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை தான் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அதில் பெண் உறுப்பினர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்று காமா கூறினார். யுனெஸ்கோவின் பார்சி-ஜோராஸ்ட்ரியன் திட்டமான PARZOR திட்டத்தின் இயக்குநராகவும் பணியாற்றும் காமா, ”ஒரு வயது வந்த நபர் எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும். எப்போது கூடாது என்பதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று தான் நான் கூறுவேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

பெண்களின் திருமண வயது 21ஆக உயர்வு: சட்டங்கள், காரணங்கள், விமர்சனங்கள் – முழுப்பார்வை

டெல்லி ஆர்ச்சிடையஸிஸின் (Delhi Archdiocese) செய்தி தொடர்பாளர் சவரி முத்து, அரசின் இந்த முடிவை கிறித்துவ சமூகம் வரவேற்கிறது. ஆனால் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் இந்த சட்டத்தினால் கிராமப்புறங்களில் ஏற்படும் தாக்கங்கள் குறித்த எச்சரிக்கை பற்றியும் பேசியுள்ளார்.

கத்தோலிக்க மற்றும் இதர கிறித்துவ சமூகத்தை சேர்ந்த பெண்களும் மிக தாமதமாகவே திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் இவை அனைத்தும் நகர்புறங்களில் நடைபெறுகிறது. ஆனால் கவலை அளிப்பது கிராமப்புறங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட பட்டியல் இனத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் நிலை தான்.

இளம் வயதில் அவர்கள் திருமணம் செய்து கொண்டு மறைத்துவிடுவார்களோ என்ற அச்சம் எழுகிறது. மேலும் இந்த மக்களை, குறிப்பாக இளைஞர்களை துன்புறுத்த இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த மசோதா சட்டம் ஆகும் முன் அரசு இதனை கவனிக்க வேண்டும் என்று முத்து கூறினார்.

முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிராகப் பேசிய அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) இது மிகவும் பகுத்தறிவற்ற சட்டம் என்று விமர்சனம் செய்தது.

இது தனிநபர் சட்டம் தொடர்பானது மட்டுமல்ல, இதனால் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதையும் ஆராய வேண்டும். பாதுகாப்பு தான் இந்தியாவில் இருக்கும் பெண்களுக்கு தேவையானதாக உள்ளது. ஒரு பெண் தன்னுடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்தால் அவளுடைய பாதுகாப்பு பெற்றோர்களின் பொறுப்பாகிவிடுகிறது. அதனால் தான் அவளுக்கு உடனே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. 18 வயது பூர்த்தி அடைந்த நபர்களுக்கு வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டிருக்கும் போது, அவர்கள் வயது வந்தவுடன் எந்த முடிவையும் சுதந்திரமாக எடுக்க முடியும். அவர்கள் திருமணம் செய்து கொள்வதை அரசாங்கம் எவ்வாறு தடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார் ஜமியத் - உலாமா-ஐ-இந்த் அமைப்பின் பொதுச்செயலாளரும், தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினருமான நியாஸ் அகமது ஃபரூக்கி .

ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமையான தனிநபர் சட்டங்களில் தலையிட அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை.பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அவர்கள் முன்பு 12-13 வயதில் கூட திருமணம் செய்து கொண்டனர் . அந்நிலை தொடர வேண்டும் என்று நாங்கள் நிச்சயமாக விரும்பவில்லை. மேலும் அரசின் தற்போதைய மசோதாவையும் எதிர்க்கவில்லை ஆனால் இது தனிநபர் சட்டங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டது என்று நம்புகின்றோம். இந்த மசோதாவின் பின்னால் இருக்கும் அறிவியல்பூர்வமான காரணங்கள் எங்கே? ஒரு பெண் 18 வயதில் திருமணம் செய்து கொள்ள முடியாத அளவிற்கு ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கும் போது அவளால் 21 வயதில் எப்படி மாற முடியும்? இங்கு பிரச்சனை திருமண வயதில் இல்லை. ஆனால் வறுமையில் இருக்கிறது என்றார் ஃபரூக்கி.

சட்டப்பூர்வமான வயதிற்கு குறைவாக மிகவும் குறைந்த இஸ்லாமிய பெண்களே திருமணம் செய்து கொள்கின்றனர் என்று ஜாமா மசூதியின் இமாம் மோஹ்ஷின் தக்வி கூறியுள்ளார்.

பெண்கள் இளவயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது முன்பு போல் இல்லை. மிக அரிதாகவே பெண்கள் 21-22 வயதிற்குள் திருமணம் செய்து கொள்கிறார்கள். எனவே அந்த வகையில் பெண்களுக்கு திருமண வயது அதிகரிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. எவ்வாறாயினும், சட்டம் இயற்றுவதற்கு முன்பு அரசாங்கம் இன்னும் சமூகத் தலைவர்களுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இமாம் கூறியுள்ளார்.

5வது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் , 20 முதல் 24 வயது வரை இருக்கும் பெண்களில் 23.3% பெண்கள் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இது நான்காவது கணக்கெடுப்பில் 26.8% ஆக இருந்தது. சமீபத்திய கணக்கெடுப்பின் படி 6.8% பெண்கள் 15 முதல் 19 வயதிற்குள் கர்ப்பமடைகின்றனர். இந்த போக்கு 4வது கணக்கெடுப்பின் போது 7.9% ஆக இருந்தது.

NFHS-4 இன் படி, இந்தியாவில் 25 முதல் 49 வயது வரையிலான பெண்களின் திருமணத்தின் சராசரி வயது நகர்ப்புறங்களில் 19.8 ஆகவும், கிராமப்புறங்களில் 18.1 ஆகவும் உள்ளது. இந்துக்களில் 18.% ஆகவும், இஸ்லாமியர்களிடையே 18.6 வருடங்களாகவும் உள்ளது. புத்த மதத்தினரின் சராசரி திருமண வயது 19.2 ஆகவும், சீக்கியர்களிடையே 20.9 ஆகவும், சமணர்களிடையே 21.2 ஆகவும் கிறித்துவர்களிடம் 21.6 ஆகவும் உள்ளது. 18-29 வயதுடைய பெண்களில் 28 சதவீதமும், 21-29 வயதுடைய ஆண்களில் 17 சதவீதமும் சட்டப்பூர்வ குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டனர் என்று 4வது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு முடிவுகள் காட்டுகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu India Minimum Age Of Marriage
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment