Mizoram Assembly Election Results 2018 : 40 தொகுதிகளைக் கொண்டிருக்கும் மிசோரம் மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல்கள் கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி நடைபெற்று முடிந்தது. 2008ம் ஆண்டில் இருந்து இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. மூன்றாவது முறையும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றது காங்கிரஸ் கட்சி. நடைபெற்ற தேர்தலில் 80% வாக்குகள் பதிவாகியுள்ளன.
1984ம் ஆண்டு முதல் செர்ச்சிப் என்ற தொகுதியில் வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்திருக்கிறார் அம்மாநில முதல்வர் லால் தனவாலா. ஆனால் மிசோரத்தில் மீண்டும் அவரின் தலைமையில் ஆட்சி அமையுமா என்பது கடினமான கேள்வி.
மேலும் படிக்க : ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்
Mizoram Assembly Election Results 2018 :
காலையிலேயே தங்கள் கட்சியின் வெற்றியை உறுதி செய்துவிட்டனர் மிசோ தேசிய முன்னணி கட்சி. கட்சி அலுவலகங்கள் முன்பு கொடியுடன், இசைக்கு ஏற்றவாறு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள் மிசோரம் மக்கள்.
வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்று வரும் இந்நிலையில் மிசோ தேசிய முன்னணி கட்சி 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியானது 06 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. தங்கள் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து கட்சி அலுவலகங்களில் இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர் மிசோ தேசிய முன்னணி கட்சியினர்.
கடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள்
2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 34 இடங்களிலும், மிசோ தேசிய முன்னணி கட்சி 5 இடங்களிலும், மிசோரம் பிப்புள் கான்ஃபிரன்ஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.