Advertisment

5 மாநில தேர்தல் முடிவுகள்: விறுவிறு காட்சிகளின் ஹைலைட்ஸ்

கொள்கை ரீதியாக நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இத்தனை நாட்கள் பணியாற்றியவர்களுக்கு நன்றி. 3 மாநிலங்களிலும் பாஜகவை தோற்கடித்திருக்கிறோம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Assembly Election Result 2018 Live, Assembly Election Vote Counting Live Updates, Madhya Pradesh Assembly election results 2018

Assembly Election Result 2018 Live, Assembly Election Vote Counting Live Updates, Madhya Pradesh Assembly election results 2018

Assembly Election Result 2018 : 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் தொடர்பான விறுவிறு காட்சிகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

Advertisment

Assembly Election Result 2018 Live, Assembly Election Vote Counting Live Updates, Madhya Pradesh Assembly election results 2018

மேலும் படிக்க : மூன்று மாநிலங்களில் வெற்றி பொதுத்தேர்தல் முடிவுகளை பாதிக்குமா ? 

Assembly Election Result 2018 Live

04:00 PM : தோல்விகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக அடைந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான்.

03:00 PM : ராஜஸ்தானில் முதல்வர் யார் ?

மத்தியப் பிரதேசம் போலவே ராஜஸ்தான் மாநிலத்திலும் முதல்வர் யார் என்ற இழுபறி நிலவிக் கொண்டு உள்ளது. சச்சின் பைலட் மற்றும் அசோக் கெஹ்லாட்டில் யார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்து தீவிர விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.

publive-image காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் மற்றும் சச்சின் பைலட்

02:30 PM : முதல்வர்கள் யார் என்பதை ராகுல் தான் தீர்மானிக்க வேண்டும்

ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் முதல்வராக யார் பொறுப்பேர்கள் என்பதை ராகுல் காந்தி தான் தீர்மானிக்க வேண்டும். ராஜஸ்தானில் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

நான்கு மணிக்கு மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஏ.கே. அந்தோனி முன்னிலையில் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பெரும்பான்மைகளின் தேர்வைப் பொறுத்தே கமல்நாத் அல்லது ஜோதிராதித்யா சிந்தியா முதல்வராக அறிவிக்கப்படுவார்கள்.

02:00 PM : ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்

இம்முறை ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவதில்லை என்று ஏற்கனவே சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்திருந்த நிலையில், 121 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப் போகிறது காங்கிரஸ்.

11:30 AM : ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் சிவராஜ் சிங் சௌஹான்

நான்காவது முறையாகவும் சிவராஜ் சிங் சௌஹான் முதல்வராவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் பாஜக மத்தியப்பிரதேசத்தில் தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார் சிவராஜ் சிங் சௌஹான்.

Assembly Election Result 2018 Live, Assembly Election Vote Counting Live Updates, Madhya Pradesh Assembly election results 2018 தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கவர்னர் அனந்திபென் படேலிடம் கொடுத்தார் சிவராஜ் சிங் சௌஹான்

11:00 AM : பகுஜன் சமாஜ் ஆதரவு

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் கட்சி தங்களின் ஆதரவினை அளித்திருக்கிறது. இதன் மூலம் 116 இடங்கள் என்ற பெரும்பான்மையை காங்கிரஸ் நிரூபிக்கும்.

10:00 AM : பெரும்பான்மை நிரூபிக்கத் தயார்

மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத், ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். எங்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தால் எங்களின் பெரும்பான்மையை நிச்சயமாக அவர் முன்பு நிரூபிப்போம் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

09:45 : தேர்தல் ஆணையத்தின் முறையான அறிவிப்பு வெளிவர வேண்டும்

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி எந்த கட்சி பெரும்பான்மை பெற்றதோ அதையே ஆட்சி அமைக்க அழைக்க இயலும் என்று கவர்னர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

09:30 AM : பிரதமர் வாழ்த்து

வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு தன்னுடைய வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் தெலுங்கானாவில் வெற்றி பெற்ற கே. சந்திரசேகர் ராவிற்கும், மிசோரம் மாநிலத்தில் வெற்றி பெற்ற மிசோ தேசிய முன்னணி கட்சிக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

09:15 AM : வெற்றியை உறுதி செய்த ராகுல் காந்தி

நேற்று மாலை தான் ராகுல் காந்தி மத்தியப் பிரதேச மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை உறுதி செய்தார். தற்போது மாநிலத்தின் முதல்வராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கமல்நாத் மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா இருவரில் யார் முதல்வராக்கப்படுவார் என்ற கேள்வி நிலவி வருகிறது.

09:10 AM : எந்த கட்சி வெற்றி பெற்றது ?

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஓட்டு எண்ணும் பணி மிகவும் மந்தமான நிலையில் தான் இருந்தது. மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்றவர்கள் யார் என்று அறிவித்து வெகு நேரம் ஆன பின்பும் கூட மத்தியப் பிரதேசத்தில் யார் வெற்றி பெற்றனர் என்பது கேள்விக் குறியாக இருந்தது.

09:00 AM : ஆட்சி அமைக்க ஆளுநர் எந்த கட்சியை அழைப்பார் ?

சரிக்கு சரி என்ற கணக்கில் தான் பாஜகவும் காங்கிரஸும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ஆளுநர் எந்த கட்சியை ஆட்சி அமைக்கக் கோருவார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

08:00 AM : தலைவர்கள் கருத்து

சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். "வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட்டு மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவோம். சத்தீஸ்கர் பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு முழுபொறுப்பேற்கிறேன்" என்று ரமன் சிங் தெரிவித்துள்ளார்.

அதேபோல், "கொள்கை ரீதியாக நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இத்தனை நாட்கள் பணியாற்றியவர்களுக்கு நன்றி. 3 மாநிலங்களிலும் பாஜகவை தோற்கடித்திருக்கிறோம். இந்த தேர்தலின் வெற்றி தொண்டர்களுக்கும் விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

Assembly Election Result 2018 நேற்று நிகழ்ந்தவை ஒரு தொகுப்பு

08:00 PM : "கொள்கை ரீதியாக நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இத்தனை நாட்கள் பணியாற்றியவர்களுக்கு நன்றி. 3 மாநிலங்களிலும் பாஜகவை தோற்கடித்திருக்கிறோம். இந்த தேர்தலின் வெற்றி தொண்டர்களுக்கும் விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

07:50 PM : திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், "5 மாநில தேர்தலை பொறுத்தவரை மினி பார்லிமெண்ட் தேர்தல் என்பதுதான் என்னுடைய கருத்து. 5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய அடி" என்று தெரிவித்திருக்கிறார்.

06:30 PM : சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். "வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட்டு மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவோம். சத்தீஸ்கர் பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு முழுபொறுப்பேற்கிறேன்" என்று ரமன் சிங் தெரிவித்துள்ளார்.

05:45 PM : "பாஜக தனது செல்வாக்கை இழந்து வருவதை நன்றாக காட்டுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு" என்று தேர்தல் முடிவு குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

05:15 PM :  மிசோரம் தொகுதியில், வாக்குப்பதிவு முழுவதும் முடிந்து முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. மொத்தம் உள்ள 40 தொகுதியில் மிசோ தேசிய முன்னணி கட்சி 26 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. 10 ஆண்டுகளாக மிசோரமில் ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்திருக்கிறது.

o4:45 PM : 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் ஆட்சி அமைக்க 60 இடங்கள் பெற்று இருந்தாலே போதுமானது, ஆனால், டிஆர்எஸ் கட்சி தற்போது தனிப்பெரும்பான்மை பலத்துடன் முன்னிலையில் உள்ளது. அந்தக் கட்சியின் தலைவரும் முதல்வருமான சந்திரசேகர் ராவ், கஜ்வெல் தொகுதியல் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதனால், 2-வது முறையாக தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட தோல்விக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடந்த முறைகேடு தான் காரணம் என காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்துள்ளனர்.

04:00 PM : டெல்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் காங். தலைவர் ராகுல் காந்தி 5 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். சத்தீஸ்கர், ராஜஸ்தானில் வெற்றியைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசனை செய்யவும் தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

02:45 PM : வெறிச்சோடி காணப்படும் ராய்ப்பூர் பாஜக அலுவலகம்

02: 30 PM : ஆரவாரம் கொண்டாட்டம் என சத்தீஸ்கர் காங்கிரஸ்

பொரும்பான்மை பெற்று சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்கப் போகிறது காங்கிரஸ் கட்சி. அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாய் ராய்ப்பூர் பகுதியில் இருக்கும் கட்சி அலுவலகத்தின் முன்பு மேள தாள இசைகளுக்கு ஏற்றவாறு கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகிறார்கள்.

02:20 PM : மகிழ்ச்சியில் மிசோ தேசிய முன்னணி

01:25 PM : பி.எஸ்.பி தலைமையில் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமையுமா ?

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து இழுபறிகள் நீடித்து வருகிறது. 108 - 107 என்ற நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக இருப்பதால் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய இயலாத சூழலில் இருக்கிறது இரண்டு கட்சிகளும்.

230 தொகுதிகளிலும் போட்டியிட்ட மற்றொரு கட்சியான பி.எஸ்.பி (பகுஜன் சமாஜ் பார்ட்டி) தற்போது யாருடன் கூட்டணி வைக்குமோ அவர்கள் தான் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க இயலும்.

ஆனால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார் மாயாவதி.

01:00 PM : செமி ஃபைனலில் ஆட்டம் கண்ட பாஜக

காங்கிரஸ் கட்சியின் வெற்றி மற்றும் பாஜகவின் தோல்வி, என இரண்டையும் ஒருமித்தே கொண்டாடி வருகிறார்கள் எதிர்கட்சித் தலைவர்கள்.

மேலும் படிக்க : பாஜகவின் தோல்வி நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி - ட்வீட்டரில் தலைவர்கள்

12:45 PM : களையிழந்து காணப்படும் பாஜக தலைமை அலுவலகம்... கொண்டாட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்

Assembly Election Result 2018 Live, Assembly Election Vote Counting Live Updates வெற்றிக் களிப்பில் காங்கிரஸ் தொண்டர்கள்... புகைப்படம் அபினவ் சாஹா (இந்தியன் எக்ஸ்பிரஸ்)

Assembly Election Result 2018 Live, Assembly Election Vote Counting Live Updates வெறிச்சோடி காணப்படும் பாஜக அலுவலகம்... புகைப்படம் - அபினவ் சாஹா (இந்தியன் எக்ஸ்பிரஸ்)

12:30 PM : தற்போதைய நிலவரம்

தெலுங்கானா, மிசோரம், மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, மிசோ தேசிய முன்னணி, மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களின் வெற்றியை உறுதி செய்துள்ளன.

மிசோரம் - 40 தொகுதிகள்

மிசோ தேசிய முன்னணி -  29

காங்கிரஸ் - 6

பாஜக - 1

இதர கட்சிகள் - 4

தெலுங்கானா  - 119 தொகுதிகள்

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி - 89

தெலுங்கு தேசம் - காங்கிரஸ் கூட்டணி - 22

பாஜக - 2

இதர கட்சிகள் - 6

ராஜஸ்தான் - 200 தொகுதிகள்

காங்கிரஸ் -  94

பாஜக - 80

ஆர்.எல்.எம் - 0

இதர கட்சிகள் - 25

சத்தீஸ்கர் - 80 தொகுதிகள்

காங்கிரஸ் - 64

பாஜக - 18

ஜே.சி.சி - 8

மத்தியப் பிரதேசத்தில் இழுபறி நிலையே காணப்பட்டு வருகிறது.

12:00 PM : மத்தியப் பிரதேச மாநிலத்தில் இழுபறி

230 இடங்களுக்கான தேர்தலில் நீயா நானா என்ற போட்டியே நிலவி வருகிறது. சிறிது நேரத்திற்கு முன்பு வரை பாஜக முன்னிலை வகித்து வந்தது. ஆனால் தற்போது காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. கூட்டணி முடிவாகும் தருணம் வரை, எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்று உறுதியாக கூற இயலாது.

11:40 AM : தேர்தல் முடிவுகள் என்பது மக்களின் தீர்ப்பு - மம்தா பானர்ஜீ

பாஜகவிற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். இது மக்களின் தீர்ப்பு. இந்த நாட்டின் மக்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

11:30 AM : ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்திருக்கிறார் அசோக் கெஹ்லோட். ஆனால் ராஜஸ்தானில் மீண்டும் அவர் தலைமையில் ஆட்சி அமையுமா என்பது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

11:00 AM :  தலைவர்கள் மகிழ்ச்சி

மத்தியப் பிரதேச மாநிலம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கமல் நாத், இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

 10:50 AM :  மிசோ தேசிய முன்னணி முன்னிலை

40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. வெற்றியைக் கொண்டாடும் விதமாக இனிப்புகள் வழங்கி கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டம்.

மிசோரம் மாநிலத் தேர்தல்கள் தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க

10: 40 AM : தொடர் தோல்விகளுக்கு தயாராகும் பாஜக

அனைத்து முடிவுகளும் வெளியாகட்டும். அதற்கு முன்பு என்னால் கருத்து சொல்ல இயலாது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.

10:30 AM : டெல்லியில் தொடங்கியது கொண்டாட்டம்

முழுமையான தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்னே டெல்லியில் கொண்டாட்டங்களை துவங்கிவிட்டனர் காங்கிரஸ் கட்சியினர்.

10:15 AM : ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்

ராஜஸ்தான் மாநிலத்தில் 72 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக 54 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

10:00 AM : வெற்றியை உறுதி செய்த தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி

60 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்று இருந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் கே. சந்திரகேகர ராவ் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

காலை 09.50 மணி நிலவரம்

  • ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்ட நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 98 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 83 இடங்களில் பாஜகவும் முன்னிலை வகிக்கிறது.
  • மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 94 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
  • சத்தீஸ்கர் மாநிலத்திலும் 48 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் பாஜக 26 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறாது.
  • மிசோரம் மாநிலத்தில் எம்.என்.எஃப். கட்சி 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
  • தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 27 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

09:40 AM: மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் பாஜக மற்றும் காங்கிரஸ் அலுவலகங்கள்

Assembly Election Result 2018 Live, Assembly Election Vote Counting Live Updates

Assembly Election Result 2018 Live, Assembly Election Vote Counting Live Updates

09:15 AM : தெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிவுகள் 2018

தெலுங்கானாவில் முன்னிலை வகிக்கிறது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு சந்திரசேகர ராவே மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா தேர்தல் தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க

09:00 AM : மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மற்றும் ராஜஸ்தான் இந்தி பேசும் மக்களின் மனதில் நிற்கும் பாஜக

மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து மொத்தம் 65 நாடாளுமன்ற தொகுதிகளில் 62 தொகுதிகளை தக்கவைத்துள்ளது பாஜக. இந்த தேர்தல் முடிவுகளைப் பொறுத்து பொதுத் தேர்தலில் வெற்றி யாருக்கு சாதகமாக அமையும் என்பதை யூகிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய தேர்தல் முடிவுகள் தேசியக் கட்சிகள் இரண்டிற்கும் மிக முக்கியமானவை.

08:40 AM : மத்தியப் பிரதேசம் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2018

சத்தீஸ்கர் மாநிலத்தைப் போலவே பாஜக ம.பியிலும் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. 15 வருடங்களாக சிவராஜ் சிங் சௌஹான் அங்கு முதல்வராக பணியாற்றி வருகிறார். இங்கு நடைபெற்ற கருத்துக் கணிப்பு முடிவுகள் யாருக்கும் சாதகம் பாதகம் இல்லாமல் சரிக்கு சரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : கருத்துக் கணிப்பு முடிவுகள், வேட்பாளர்கள் போன்ற தகவல்களைப் படிக்க

07: 52 AM : சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2018

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2003ம் ஆண்டு முதல் தொடங்கியே பாஜகவின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. ராமன் சிங் மூன்று முறை அந்த மாநிலத்தின் முதல்வராக பதவியில் இருந்து வருகிறார். நான்காவது முறையாக பாஜக ஆட்சி அமைக்குமா அல்லது பாஜகவின் கனவினை காங்கிரஸ் நீர்த்துப் போகச் செய்யுமா என்பதை இன்று தேர்தல் முடிவுகள் அறிவித்து விடும்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் தொகுதிகள் மற்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

07:30 AM - ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2018

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. வசுந்த்ரா ராஜே முதல்வராக பணியாற்றி வருகிறார்.

ராஜஸ்தான் சட்டசபைத் தொகுதிகள் மற்றும் முக்கிய வேட்பாளர்கள் பற்றிய தகவல்களைப் பெற

Election Results 2018 LIVE: Rajasthan | Madhya Pradesh | Chhattisgarh | Mizoram | Telangana Election Result 2018

Bjp India All India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment