சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2018 : 15 ஆண்டுகளுக்குப் பிறகு அரியணை ஏறும் காங்கிரஸ்!

Chhattisgarh Assembly Election Result 2018 : சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இரண்டு கட்டங்களாக இங்கு தேர்தல் நடத்தப்பட்டது. முதற்கட்டத் தேர்வு நவம்பர் 12ம் தேதியும் (18 தொகுதிகளில்), இரண்டாம் கட்டத் தேர்வு நவம்பர் 20ம் தேதியும் (70 தொகுதிகளிலும்) நடைபெற்றது.

15 வருடங்களுக்கு பின்பு வாகை சூடும் காங்கிரஸ் கட்சி

02:45 PM:  வெறிச்சோடி காணப்படும் ராய்ப்பூர் பாஜக அலுவலகம்

02: 30 PM : ஆரவாரம் கொண்டாட்டம் என சத்தீஸ்கர் காங்கிரஸ்

பொரும்பான்மை பெற்று சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்கப் போகிறது காங்கிரஸ் கட்சி. அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாய் ராய்ப்பூர் பகுதியில் இருக்கும் கட்சி அலுவலகத்தின் முன்பு மேள தாள இசைகளுக்கு ஏற்றவாறு கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகிறார்கள்.

01: 20 PM : பாஜகவிற்கு ஆதரவு தர மாயாவதி மறுப்பு…

இன்று நடைபெற்று முடிந்த தேர்தலில் இழுபறி இருக்கும் மாநிலங்களில்  பாஜகவிற்கு ஆதரவாக கூட்டணி அமைக்கமாட்டோம் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியிருக்கிறார். ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார் மாயாவதி.

பகல்  12:30 மணி நிலவரம்

சத்தீஸ்கர் – 80 தொகுதிகள்

காங்கிரஸ் – 64
பாஜக – 18
ஜே.சி.சி – 8

காலை 11:00 மணி நிலவரம்

90 தொகுதிகளில் 45 பெரும்பான்மை என்ற நிலையில், சத்தீஸ்கர் 52 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 27 இடங்களிலும் ஜே.சி.சி. கட்சி 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 15 வருடங்கள் கழித்து சத்தீஸ்கரில் தன்னுடைய வரலாற்று வெற்றியினை பதிவு செய்திருக்கிறது காங்கிரஸ்.

Chhattisgarh Assembly Election Result 2018

சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 வருடங்களாக பாஜகவின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சி – அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் சத்திஸ்கர் ( ஜேசிசி ) கட்சி கூட்டணி, காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனை போட்டி நிலவி வருகிறது சத்தீஸ்கர் மாநிலத்தில்.

தற்போதைய முதல்வர் : ராமன் சிங் (பாஜக). மூன்று முறை தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றி பெற்ற இவருக்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

15 வருடங்கள் கழித்து பாஜகவினை வீழ்த்தி அரியணையில் ஏறுமா காங்கிரஸ் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 76.60 சதவீதம் வாக்குப் பதிவுகளாகியிருக்கிறது. சரியாக காலை 8 மணிக்கு 27 மாவட்டத் தலைநகரங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தேர்தல் முடிவுகளை அறிவிக்க மற்றும் பதிவான வாக்குகளை எண்ண சுமார் 5184 நபர்கள் மற்றும் 1500 மைக்ரோ அப்சர்வர்களை பணியில் அமர்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை நடைபெற்ற தேர்தலின் போது பாஜக 49 இடங்களிலும், காங்கிரஸ் 39 இடங்களிலும் பி.எஸ்.பி கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சி வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.

இன்று நடைபெற இருக்கும் தேர்தல் முடிவுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Chhattisgarh Assembly Election Result 2018 கருத்துக் கணிப்பு முடிவுகள்

கடந்த வாரம் நடைபெற்ற கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துக் கணிப்பு தொடர்பான முழுமையான செய்திகளை தெரிந்து கொள்ள

Election Results 2018 LIVE: Rajasthan | Madhya Pradesh | Chhattisgarh | Mizoram | Telangana Election Result 2018

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close