Telangana Assembly Election results 2018 : இந்தியாவின் மிகவும் வயது குறைவான மாநிலம் என்றால் அது தெலுங்கானா தான். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைமையிலான ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது.
119 தொகுதிகளைக் கொண்டுள்ள தெலுங்கானாவிலும் மும்முனை போட்டி நடைபெற்றது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தான் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு இம்முறையும் கே. சந்திரசேகர ராவினையே மக்கள் மீண்டும் முதல்வராக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் குறித்த தகவல்களை உடனடியாக தெரிந்துகொள்ள
Telangana Assembly Election results 2018 முன்னிலை யாருக்கு ?
5:10 PM : மாலை 5 மணி நிலவரப்படி தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 94 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 22 இடங்களையும் கைப்பற்றும் சூழல் இருந்தது.
2.45 PM : இந்த தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியை அளிக்கிறது : தெலுங்கு ராஷ்ட்ரிய சமதி கட்சி அமைச்சர் கே.டி. ராமா ராவ் கொண்டாட்டத்தில் தெரிவித்தார்.
11.39 AM : தெலுங்கானா மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி முன்னிலை
11.00 AM : தெலுங்கானா மாவட்டத்தில் சந்திரசேகர ராவ்-ன் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி பல இடங்களில் முன்னிலை வகித்து வெற்றிப்பெற உள்ளது. இதனையொட்டி, தெலுங்கானா பவனில் கொண்டாட்டங்கள் கலைக் கட்டி வருகிறது.
10.30 AM : டி.ஆர்.சி - ஏ.ஐ.எம்.ஐ.எம் கூட்டணி தெலுங்கானாவில் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இதன் மூலம், தெலுங்கானா மாநிலத்தில், மீண்டும் சந்திர சேகர ராவ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளது
10.00 AM : தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 27 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி 10 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி. 119 தொகுதிகளில் 60 இடங்களில் வெற்றி பெறுபவர்கள் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அதே போல் பாஜகவும், பகுஜன் இடதுசாரி முன்னிலை கட்சியும் 119 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.
காங்கிரஸ் கூட்டணி
காங்கிரஸ் 99 இடங்களிலும், டிடிபி கட்சி 13 இடங்களிலும் டிஜிஎஸ் கட்சி 8 இடங்களிலும் சிபிஐ கட்சி மூன்று இடங்களிலும் போட்டியிட்டடது.