Mumbai Hanuman Chalisa row: Rana couple arrested for ‘creating enmity between groups’: மும்பையில் உள்ள மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் தனிப்பட்ட இல்லமான ‘மாதோஸ்ரீ’க்கு வெளியே ஹனுமான் சாலிசாவை ஓதும் திட்டத்தை ரத்து செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, எம்எல்ஏ ரவி ராணா மற்றும் அவரது மனைவி எம்பி நவ்நீத் ராணா ஆகியோர் வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகையை உருவாக்கியதற்காக சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தம்பதியினர் மீது பிரிவு 153 (A) (மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்) கீழ் கார் பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், கணவன்-மனைவி இருவரின் பின்னணியில் மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இருப்பதாக குற்றம் சாட்டி, பாஜகவை கடுமையாக சாடினார். கடந்த சில நாட்களாக, சில போலி இந்துத்துவவாதிகள் (எம்பி நவநீத் ராணா மற்றும் எம்எல்ஏ ரவி ராணா) 'மாதோஸ்ரீ', முன்பு 'ஹனுமான் சாலிசா' ஓத முற்பட்டு, மும்பையில் உள்ள அமைதிச் சூழலை கெடுக்க முயன்றனர்,”என்று ராவுத் கூறியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், “முதல்வரின் இல்லத்தில் வேறு ஏதோ செய்ய சதி நடந்துள்ளது. தோளில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பாஜக தாக்க முயன்றது... நவ்நீத் மற்றும் ரவி ராணா மகாராஷ்டிராவின் எதிரிகள், அவர்களுக்குப் பின்னால் முன்னாள் முதல்வர் (தேவேந்திர ஃபட்னாவிஸ்) இருக்கிறார்,” என்றும் அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்: ஒவ்வொரு கட்சியாக மாறும் பிரசாந்த் கிஷோர்; தற்போதைய முடிவு என்ன?
மாநில அரசை தொடர்ந்து மிரட்டுவது புத்திசாலித்தனம் அல்ல என்று எச்சரித்த சிவசேனா ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் ராவத், சிவசேனாவின் கட்டுப்பாட்டை சோதிக்க வேண்டாம் என்று கூறினார். மேலும், "சிவசேனா மற்றும் 'மாதோஸ்ரீ'யுடன் விளையாட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், இல்லையெனில், அவர்கள் பூமிக்கு அடியில் 20 அடியில் புதைக்கப்பட்டிருப்பார்கள். சிவ சேனா சேவகர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்” என்றும் ராவுத் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சம்பவங்களால் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கான வாய்ப்புகள் குறித்து பேசிய ராவத், “எப்போது, ஏன் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். காலை 4 மணிக்கு ஆளுநர் அலுவலகத்தை திறந்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முயன்றவர்களை மகாராஷ்டிரா பார்த்துள்ளது. எனவே எங்களுக்கு அரசியலமைப்பை கற்பிக்க வேண்டாம். கடந்த இரண்டரை வருடங்களாக பல முக்கிய கோப்புகளில் கையெழுத்திடாமல் அமர்ந்திருக்கும் ஆளுநருக்கு இதை கற்றுக்கொடுங்கள்” என்றார்.
முன்னதாக, தாக்கரேயின் இல்லமான ‘மாதோஸ்ரீ’க்கு வெளியே ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யும் திட்டத்தை நிறுத்துவதாக ரவி ராணா அறிவித்தார். "பிரதமரின் வரவிருக்கும் மும்பை பயணம் மற்றும் நகரவாசிகள் மற்றும் காவல்துறை எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு எங்கள் முன்மொழியப்பட்ட திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளோம்." என்று ரவி ராணா கூறினார்.
முதல்வர் தாக்கரேயின் வீட்டிற்கு வெளியே அனுமன் சாலிசாவை ஓதுவோம் என்று இருவரும் கூறியதை அடுத்து, சனிக்கிழமை அதிகாலை சிவசேனா தொண்டர்கள் தடுப்புகளை உடைத்து ராணாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
ஆரம்பத்தில், தம்பதியினர் தங்களை "அச்சுறுத்த" நினைக்கும் சிவசேனா தலைவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யும் வரை தாங்கள் அசைய மாட்டோம் என்று கூறி, வீட்டிற்குள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் பின்னர் வெளியேற ஒப்புக்கொண்டு, இரண்டு போலீஸ் வாகனங்களில் புறப்பட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.