Party to party, Prashant Kishor, the man in a hurry: 2014 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமராக்கும் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தது முதல், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய ஐனதா தள் கட்சியில் சேர்ந்து அரசியலில் நுழைந்தது, இப்போது காங்கிரஸ் கட்சியுடன் நுழைவதற்கு பேரம் பேசுவது வரை, பிரசாந்த் கிஷோர் அல்லது பிகே கடந்த எட்டு ஆண்டுகளில் இந்திய அரசியலில் நீண்ட தூரம் பயணித்துள்ளார்.
ஆனால் கணிக்க முடியாத தன்மை, அல்லது சீரற்ற தன்மை காரணமாக லட்சியத்தால் உந்துதல் அவரது தனிச்சிறப்பாகும். மேலும் கடந்த எட்டு ஆண்டுகளில் கூர்மையான தந்திரத்துடன் ஈடுபட்ட அவரது சிறப்பு குறித்து பல அரசியல் தலைவர்கள் எடுத்துரைக்கலாம். அதேநேரம் அவர் முரண்பாடுகள் நிறைந்தவர் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
இதற்கு, பிரசாந்த் கிஷோரின் காங்கிரஸ் கதை ஒரு உதாரணம்; இந்த விவகாரம், வியாழனன்று மற்றொரு திருப்பத்தை எடுத்தது, கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சிக்காக அவர் அளித்த பவர் பாயிண்ட் விளக்கத்தில், நேரு குடும்பத்தைச் சேராத ஒருவரை கட்சி தலைவராக நியமிக்க பிரசாந்த் கிஷோர் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பிரசாந்த் கிஷோர் நேரில் சந்தித்துப் பேசினார். பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும், அவரும் அந்த யோசனைக்கு தயாராக இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த இரண்டு வாரங்களில் அவர் காங்கிரஸில் இணையலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
மே 2021 இல், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியுடன் தனது முதல் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அவரும் அவரது அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐ-பேக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் போட்டியாளரான திரிணாமுல் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றியபோதும், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். காங்கிரஸ் கட்சியை எவ்வாறு புத்துயிர் செய்ய வைப்பது என்று ஒரு மாதம் கழித்து சோனியாவுக்கு கிஷோர் விளக்கமளித்தார். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் ஜூலை மாதம் அவரை சந்தித்தனர்.
ஆனால் அதே நேரத்தில், கிஷோர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்தார், மேலும் என்சிபி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டும் இணைய வேண்டும் என்ற ஒரு பெரிய திட்டத்தை பரிந்துரைத்ததாக என்சிபி வட்டாரங்கள் கூறுகின்றன. காங்கிரஸிலிருந்து பல “அதிருப்தி” தலைவர்களையும், இரண்டு லோக்சபா எம்.பி.க்கள் உட்பட பா.ஜ.க.வில் இருந்து சிலரையும் காங்கிரஸுக்குப் பதிலாக புதிய அமைப்பிற்குள் கொண்டு வர முடியும் என்றும், அது நரேந்திர மோடி மற்றும் பாஜகவுக்கு சவாலாக இருக்கும் என்றும் அவர் NCP க்கு உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
“காங்கிரஸின் மறுமலர்ச்சிக்கான திட்டத்தை அவர் இப்போது எவ்வாறு விவாதிக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் வேறு சில திட்டங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்,” என்று ஒரு NCP தலைவர் கூறினார்.
இதற்கிடையில், காங்கிரஸுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. அவரது NCP-TMC இணைப்பு யோசனையும் நிறைவேறவில்லை.
விரைவிலேயே, பிரசாந்த் கிஷோர், சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியைச் சேராத ஒரு தலைவர் UPA தலைவராக பதவியேற்க வேண்டும் என்ற பெருகிய முறையில் குரல் எழுந்ததற்கு பின்னணியில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது UPA தலைமை பதவியை சோனியா காந்தி வகித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: ADR: 7 அறக்கட்டளைகளுக்கு ரூ258 கோடி தேர்தல் நிதி; பாஜகவுக்கு மட்டும் ரூ212 கோடி
காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்கு இருந்த கோவாவில், 2022 சட்டமன்றத் தேர்தலில் TMC க்கு ஆதரவாக செயல்படுவதாக கையெழுத்திட்ட பிறகு, பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டு டிசம்பரில் ட்வீட் செய்தார், எதிர்க்கட்சித் தலைமை “ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை அல்ல, குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தேர்தல்களில் தோல்வி அடைந்த நிலையில்” என்றும், எதிர்க்கட்சித் தலைமையை “ஜனநாயக முறையில்” முடிவு செய்ய வேண்டும், என்றும் பதிவிட்டிருந்தார்.
கோவாவில் TMC யின் தோல்வி பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கையில் மற்றொரு திருப்புமுனையாக அமைந்தது. மம்தா பானர்ஜியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் ஒரு கட்சியில் கூட, கட்சியின் பிரச்சாரத்தை வடிவமைப்பதிலும், அதன் வாய்ப்புகளை அதிகப்படுத்துவதிலும் பிரசாந்த் கிஷோரின் பங்கு விரைவில் கேள்விக்குள்ளானது.
இந்தப் பின்னணியில்தான் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினார், கடந்த வருடத்தின் மனக்கசப்புகள் வெளிப்படையாக மறந்துவிட்டது.
பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேர ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது கடந்த முறை நிறைவேறாமல் போனது. பாரம்பரிய முறைகளுடன் கூடிய பழைய கட்சியில் அவருக்கு ஒரு பங்களிப்பை வழங்குவதைத் தவிர, இதில் வேறு சிக்கல்களும் உள்ளன. பிரசாந்த் கிஷோரின் நிறுவனமான I-PAC தற்போது ஆந்திராவில் YSRCP மற்றும் தெலுங்கானாவில் TRS உடன் இலாபகரமான ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் தொடர்ந்து சற்று செல்வாக்குடன் இருந்து வருகிறது.
பிரசாந்த் கிஷோர் பீகாரில் ஒரு அரசியல் அமைப்பை தொடங்குவது என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் ஜே.டி.(யு) வில் இணைந்தது கள நிலைமையை சோதிக்கும் ஒரு வழி என்றும் கூறப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைந்தால், ஐ-பேக் நிறுவனம் காங்கிரஸின் எதிர்கட்சிகளுக்காக வேலை செய்வது நலன்களுக்கு இடையிலான மோதலை உருவாக்கும். மற்ற தேர்தல் ஆலோசகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது போல் அல்லாமல், பிரசாந்த் கிஷோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சி சாமர்த்தியமாக பகிரங்கப்படுத்தியது இந்தச் சூழலில் சுவாரஸ்யமானது. கடந்த வாரம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது: 2024 தேர்தல் வியூகத்தை பிரசாந்த் கிஷோர் விரிவாக விளக்கியுள்ளார். இதற்கு சில விரிவான விவாதங்கள் தேவை, இந்த முழு விளக்கக்காட்சியையும் பற்றி பேச காங்கிரஸ் தலைவர் ஒரு சிறிய குழுவை அமைப்பார். அந்த குழு இறுதி முடிவுக்காக ஒரு வார காலத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேருவதற்கு தலைமைக்கு நெருக்கமானதாகக் கருதப்படும் சில குரல்களும் சாதகமாகப் பேசுகின்றன. மற்ற கட்சித் தலைவர்களும் அவர் கட்சியில் சேர்வதில் எந்தத் தடையும் இல்லை என்று கூறுகிறார்கள், ஆனால் ஒரு பிரிவினர் தங்களுக்கு கட்சியில் முக்கியவத்துவம் இருந்து வரும் நிலையிலும், காங்கிரஸ் எடுக்கும் இந்த புதிய திசையில் தாங்கள் தேவையில்லாமல் போய்விடுவோம் என்று அஞ்சுகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil