காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது மெல்லிய மறைமுகத் தாக்குதலில், பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை, இந்திய ஜனநாயகத்தை சிலர் கேள்விக்கு உட்படுத்துவதாகவும், நாட்டின் குடிமக்களை அவமதிப்பதாகவும் கூறினார்.
“இந்திய ஜனநாயகத்தின் வேர்கள் நமது வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்டவை. உலகில் எந்த சக்தியாலும் நம் நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை சேதப்படுத்த முடியாது. இன்னும் சிலர் இந்திய ஜனநாயகத்தை சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கர்நாடக மக்களையும், அதன் பாரம்பரியத்தையும், நாட்டின் 130 கோடி குடிமக்களையும் அவமதிக்கிறார்கள்” என்று மோடி கூறினார்.
இதையும் படியுங்கள்: நான் ஏழைகளுக்காக பணியாற்றும்போது, காங்கிரஸ் எனக்கு கல்லறை தோண்டுவதில் தீவிரம் – மோடி
ஹுப்பள்ளியில் உள்ள ஸ்ரீ சித்தரோத்த சுவாமி ரயில் நிலையத்தில் உலகின் மிகப்பெரிய ரயில் நடைமேடையையும், தார்வாட்டில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தையும் தொடங்கி வைத்து மோடி பேசினார்.
சமூக சீர்திருத்தவாதி பகவான் பசவேஸ்வரின் அனுபவ மண்டபம் போன்ற வரலாற்று ஜனநாயக அமைப்புகள் இருப்பதால், இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாய் என்றும் நாம் கூற முடியும் என்று மோடி கூறினார். லண்டனில் பசவேஷ்வர் சிலையை திறந்து வைத்ததை நினைவுகூர்ந்த மோடி, அதே நகரத்தில் இந்திய ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று கூறினார்.
“கர்நாடகா மக்கள் அத்தகைய நபர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று பிரதமர் கூறினார், தனது சமீபத்திய இங்கிலாந்து பயணத்தின் போது பா.ஜ.க அரசாங்கத்தின் கொள்கைகளை ராகுல் காந்தி விமர்சித்ததற்கு மோடி இவ்வாறு பதிலளித்தார்.
பா.ஜ.க ஆட்சியில் மக்களின் தேவைக்கேற்ப உள்கட்டமைப்புகள் வளர்ந்து வருவதாக மோடி கூறினார். “முன்பு, சாலைகள் மற்றும் ரயில்வே திட்டங்கள் அரசியல் ஆதாயத்தின் அடிப்படையில் மட்டுமே அறிவிக்கப்பட்டன,” என்று மோடி கடந்த அரசாங்கங்களைத் தாக்கினார்.
“இந்த நிலையத்தில், உலகின் மிக நீளமான நடைமேடை உள்ளது. இது வெறும் பதிவு அல்ல. இது ஒரு தளத்தின் விரிவாக்கம் மட்டுமல்ல. உள்கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிந்தனையின் விரிவாக்கம் இதுவாகும், ”என்று அவர் ஸ்ரீ சித்தாரூட சுவாமி ரயில் நிலையத்தின் புதிய நடைமேடையைப் பற்றி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil