Advertisment

குஜராத் பாலம் விபத்து சோகம்; புகைப்படங்களை வைத்து குழந்தைகளை தேடி வரும் பெற்றோர்

குஜராத் மோர்பி பாலம் விபத்து; குழந்தைகளின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு அவர்களை தேடி வரும் பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் சோகம்

author-image
WebDesk
Nov 01, 2022 10:01 IST
New Update
குஜராத் பாலம் விபத்து சோகம்; புகைப்படங்களை வைத்து குழந்தைகளை தேடி வரும் பெற்றோர்

Rashi Mishra

Advertisment

கோயில் பயணத்திற்கு பிறகு, குழந்தைகள் வற்புறுத்திய மாற்றுப்பாதை இது, ஆனால் ஜடேஜா குடும்பத்திற்கு இது மிகவும் மோசமாக இருந்தது, நான்கு குழந்தைகள் மற்றும் ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண் உட்பட ஏழு உறுப்பினர்களின் மரணத்தில் இந்தப் பயணம் முடிந்தது.

ஞாயிற்றுக்கிழமை, பிரதாப் சிங் ஜடேஜாவின் (30) குடும்பத்தினர்களான பிரதாப்பின் இரண்டு குழந்தைகள், மூன்றாவது குழந்தையுடன் கர்ப்பமாக இருந்த அவரது மனைவி, அவரது மைத்துனி, பிரதாப்பின் சகோதரர் பிரத்யுமானின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மோர்பியில் உள்ள மெல்டி அம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளனர். திரும்பி வரும் வழியில், குழந்தைகள் மச்சு ஆற்றின் மீது ஒரு நூற்றாண்டு பழமையான தொங்கு பாலமான ஜூல்டோ புல்லுக்குச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்கள், அது சுமார் ஏழு மாதங்கள் பழுதுபார்ப்பதற்காக மூடப்பட்டு நான்கு நாட்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: மோர்பி சம்பவம்.. கடவுளின் செயலா? மோசடியா? பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி

சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாலம் பாரம் தாங்காமல் அதிலிருந்த மக்களுடன் இடிந்து விழுந்ததால், குடும்பத்தைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்களும் ஆற்றில் மூழ்கி இறந்தனர்.

publive-image

“பிரதாப்பும் பிரத்யுமானும் வேலையில் இருந்ததால், அவர்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்தப் பயணத்தில் கலந்துக் கொள்ளவில்லை. இப்போது அவர்களது குடும்பத்தில் அவர்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்” என்கிறார் ஜடேஜாக்களின் உறவினரான கனக் சின். ஜாம்நகர் மாவட்டத்தின் ஜாலியா கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தின் சகோதரர்கள் மோர்பியில் உள்ள சனாலாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தனர்.

மோர்பியில் உள்ள புதைகுழிக்கு வெளியே காத்திருந்த 52 வயதான தையாப் சும்ரா தனது மைத்துனரின் குடும்பத்தின் துயரக் கதையை விவரிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை பாலம் இடிந்து விழுந்ததில் மைத்துனர் தனது 30 வயது மகன் மற்றும் 5 வயது பேத்தி மற்றும் 7 வயது பேரன் என இரண்டு பேரக்குழந்தைகளையும் இழந்தார்.

“புனரமைக்கப்பட்ட பாலத்தைப் பார்வையிட எனது மைத்துனரின் மகனும் குடும்பத்தினரும் சென்றிருந்தனர். மாலையில், பாலம் இடிந்து விழுந்தது பற்றிய செய்தி சமூக ஊடகங்களில் வெளி வந்ததால், எனது மைத்துனர் தனது மகனையும் குடும்பத்தினரையும் தேட புறப்பட்டார். விரைவில் கெட்ட செய்தி கிடைத்தது. இரவு 8 மணிக்கு இரண்டு குழந்தைகளின் உடல்களும், இரவு 11 மணியளவில் எனது மைத்துனரின் மகனின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. அவரது மருமகள், 25, மட்டுமே உயிர் பிழைத்துள்ளார், ஆனால் அவர் அதிர்ச்சியில் இருக்கிறார்,” என்கிறார் தையாப் சும்ரா.

வெளித்தோற்றத்தில் தப்பிப்பிழைத்த பலர் உள்ளனர்.

publive-image

ஏழு வயதான நந்தன் சௌஹான், வார இறுதி நாளில் ஜூல்டா புல் பாலத்திற்குச் செல்வதற்காகக் காத்திருந்து சென்றவன். அவன் இப்போது மோர்பியில் உள்ள கிருஷ்ணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டுள்ளான், அவனது வலது கை உடைந்த நிலையில், பேச முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்துள்ளான். நந்தனின் தாயார் அவரது தந்தைக்கு உதவி வருகிறார், அவருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அருகிலுள்ள நக்ஷத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நந்தனின் படுக்கையில் அமர்ந்தவாறு, மோர்பியில் மார்பிள் பிசினஸ் செய்யும் அவரது மாமா சுரேஷ் டாடாமியா கூறுகிறார், “அவர்கள் மேற்கு வாயிலில் இருந்து பாலத்திற்குள் நுழைந்து பாலத்தின் கிழக்கு முனையை அடைந்தபோது அது இடிந்து விழுந்தது. அவை ஆற்றின் சேற்றுக் கரையில் விழுந்தன. கடவுள் அருளால், அனைவரும் உயிர் தப்பினர், இரவு 8.30 மணியளவில் அவர்கள் மீட்கப்பட்டனர்.”

மோர்பியில் உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் 40 வயதான மெகுல் ராவல், தனது குடும்ப உறுப்பினர்கள் எட்டு பேருடன் பாலத்திற்குச் சென்றதாக கூறுகிறார். அவரது மைத்துனி மற்றும் அவரது குழந்தை காயம் அடைந்தாலும், அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் உயிர் தப்பினர். “பாலத்தில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் இருந்தது. நாங்கள் தர்பார்கத் பக்கத்திலிருந்து (மேற்கு) பாலத்தில் ஏறியிருந்தோம், மேலும் அது மிகவும் நெரிசலாக இருப்பதை உணர்ந்தோம். எனவே பாலம் இடிந்து விழுந்தபோது நாங்கள் திரும்பி நடக்க ஆரம்பித்தோம். எனவே, நாங்கள் கரையில் சேற்றில் விழுந்தோம், இல்லையெனில் நாங்கள் மூழ்கியிருப்போம், ”என்று அவரது வலது கை காயத்துடன் மெகுல் ராவல் கூறுகிறார்.

publive-image

மெகுல் ராவலின் உறவினர் நிரவ் வோரா, 41, கூறுகையில், “பெரும்பாலான மக்கள் பாலத்தின் அடியில் தண்ணீரிலோ அல்லது நீர் பதுமராகம் செடிகளிலோ சிக்கிக் கொண்டனர். திங்கட்கிழமை அதிகாலை வரை, பெற்றோர்கள் ஆற்றின் கரையில், தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களைத் தங்கள் தொலைபேசியில் வைத்துக்கொண்டு அவர்களைத் தேடினர்.”

காயமடைந்தவர்கள் கொண்டு வரப்பட்ட அரசு மருத்துவமனை உட்பட மோர்பியில் உள்ள ஆறு மருத்துவமனைகளில் ஒன்றான கிருஷ்ணா மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர் மனோஜ் கைலா கூறுகையில், “இங்கு கொண்டு வரப்பட்ட 11 பேரில் ஐந்து பேர் குழந்தைகள். அவர்களில் பெரும்பாலோருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதால், அவர்கள் விரைவில் குணப்படுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பட்டனர். உயிர் பிழைத்தவர்கள் பெரும்பாலும் கரையில் விழுந்தவர்கள். தண்ணீரில் விழுந்தவர்களை, அந்த இடத்தில் இருந்த மருத்துவர்கள் பரிசோதித்து, மோர்பி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.”

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#India #Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment