Advertisment

மோர்பி விபத்து; மோடி வருகைக்கு முன் புதுப்பிக்கப்பட்ட அரசு மருத்துவமனை; எதிர்க்கட்சிகள் விமர்சனம்

குஜராத் மோர்பி பாலம் விபத்து; மோடி வருகைக்கு முன் புதுப்பிக்கப்பட்டஉயிர் பிழைத்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை; காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம்

author-image
WebDesk
New Update
மோர்பி விபத்து; மோடி வருகைக்கு முன் புதுப்பிக்கப்பட்ட அரசு மருத்துவமனை; எதிர்க்கட்சிகள் விமர்சனம்

Aneesa PA

Advertisment

குஜராத்தில் பாலம் இடிந்து குறைந்தது 134 பேரைக் கொன்றதில் இருந்து, மோர்பி நகராட்சி நிர்வாகத்தின் "அலட்சியம்" மற்றும் "தவறான நிர்வாகம்" விவாதத்தின் மையமாக உள்ளது. செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக, காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் அனுமதிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தால் நடத்தப்படும் GMERS மருத்துவமனையில் அவசரகதியில் நடைபெறும் புதுப்பிப்பு பணி தொடர்பான புகைப்படங்கள் திங்கள்கிழமை இரவு வெளிவந்ததால், குஜராத் மோர்பி நகராட்சி அதிகாரிகள் மேலும் தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் GMERS மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள குழந்தைகள் பிரிவில் துருப்பிடித்த படுக்கைகள் மற்றும் பக்கவாட்டு மேசைகளைக் கண்டது, அது உயிர் பிழைத்தவர்களின் சிகிச்சைக்கான பிரிவாக மாற்றப்பட்டுள்ளது, அங்கு இப்போது சுவர்கள் மற்றும் கூரைகளில் சிலந்தி வலைகள் அகற்றப்பட்டு, புதிய வண்ணப்பூச்சுகள் பூசப்பட்டுள்ளன, விரிசல் அடைந்த ஓடுகள் மற்றும் தரையும் சரிசெய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்: குஜராத் பாலம் விபத்து சோகம்; புகைப்படங்களை வைத்து குழந்தைகளை தேடி வரும் பெற்றோர்

மருத்துவமனையின் சுவர்களில் தொழிலாளர்கள் வண்ணம் தீட்டும் வீடியோவை ட்வீட் செய்த, எதிர் வரும் குஜராத் தேர்தலில் பா.ஜ.க.,வின் மிகக் கடுமையான போட்டியாளரான ஆம் ஆத்மி கட்சி, “141 பேர் இறந்துள்ளனர், நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை,. உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை, ஆனால் பா.ஜ.க தொண்டர்கள் போட்டோஷூட்கள் மற்றும் மூடிமறைப்புகளில் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.” என ட்வீட் செய்துள்ளது.

ஆம் ஆத்மி மேலும் ட்வீட் செய்தது, “கடந்த 27 ஆண்டுகளில் குஜராத் அரசு ஏதேனும் ஒரு வேலையைச் செய்திருந்தால், இந்த கடைசி நிமிட வெள்ளையடிப்பு தேவையே இருந்திருக்காது”.

“பிரதமர் மோடியின் படங்களுக்கு எந்தத் தட்டுப்பாடும் இருக்கக் கூடாது” என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கடைசி நிமிட மறுசீரமைப்பின் படங்களை அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கட்சி, “அவர்கள் வெட்கப்படவில்லை! பலர் இறந்துள்ளனர், ஆனால், அவர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.” எனப் பதிவிட்டுள்ளது.

கட்சியின் அடிமட்ட அமைப்பான காங்கிரஸ் சேவா தளமும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்தது: “பிரதமர் நரேந்திர மோடி நாளை மோர்பியை பார்வையிடுகிறார், இரவு அரசு மருத்துவமனையில் வண்ண வேலைகள் செய்யப்படுகின்றன!!! வா! மோடி ஜி வா! தூப்தா குஜராத்.”

காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் தனது விமர்சனத்திற்கு கிண்டலான குறிப்பைச் சேர்த்தார்: "பளபளக்கும் சுவர்கள் மற்றும் புதிய ஓடுகள் கொண்ட மருத்துவமனையில், காயமடைந்தவர்கள் நன்றாக உணரலாம் - நம்பிக்கை உள்ளது." என அவர் பதிவிட்டுள்ளார்.

ஒரு வழக்கறிஞரும் ஆர்வலருமான பிரிஜேஷ் கலப்பா ட்விட்டரில், “பா.ஜ.க.,வின் குஜராத் மாடலில் நேற்று மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் 130 பேர் இறந்தனர், அப்படி என்றால் இன்று பா.ஜ.க நிர்வாகம் எப்படி இருக்கிறது?! பிரதமரின் வருகைக்காக அரசு மருத்துவமனையை அலங்கரித்து வருகிறது” என பதிவிட்டார்.

முன்னதாக, மேற்கு வங்கத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிரான பிரதமர் மோடியின் தாக்குதலைக் குறிப்பிட்டு, இந்த சம்பவம் குறித்து குஜராத் அரசை எதிர்க்கட்சிகள் தாக்கி, இது “கடவுளின் செயலா” அல்லது “மோசடிச் செயலா” என்று கேட்டது. மார்ச் 31, 2016 அன்று நடந்த கொல்கத்தா பாலம் விபத்து பலரைக் கொன்றது.

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, திங்கள்கிழமை ஏன் மோர்பிக்கு செல்லவில்லை என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. அவர் மாநிலத்தில் மூன்று நிகழ்வுகளில் உரையாற்றினார், மற்றும் சர்தார் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை ஒன்றில் பேசுகையில், தனது எண்ணங்கள் மோர்பி மக்களுடன் இருந்தபோது, ​​"கர்மா" மற்றும் "கர்தவ்யா" அவரை கெவாடியாவிற்கு அழைத்துச் சென்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Modi Gujarat India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment