அதிகரிக்கும் புல்லட் ரயில்கள்; 6 அதிவேக ரயில் காரிடர்கள் - பயணிகளைக் கவருமா?

அதிக எண்ணிக்கையிலான புல்லட் ரயில்கள் வரப்போகின்றனவா?

பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிக்க இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரயில்களின் சராசரி வேகத்தை அதிகரிப்பது தேசிய போக்குவரத்தான இந்தியன் ரயில்வேவிற்கு தொடர்சியான பயிற்சி.

நரேந்திர மோடி தலமையிலான மத்திய அரசு ஆகஸ்ட் 2019 ல், ஏற்கனவே உள்ள புது தில்லி – ஹவுரா (கான்பூர் – லக்னோ உட்பட) வழித்தடம் மற்றும் புது தில்லி – மும்பை (வதோதரா – அகமதாபாத் உட்பட) வழித்தடத்தில் வேகத்தை ஒரு மணி நேரத்துக்கு 160 கிலோ மீட்டர் என்ற அடிப்படையில் அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக, லோக் சபா வில் ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ட்விட்டர் கணக்கை முதல் நபராக நிர்வகித்த தமிழ்ப் பெண்

மத்திய அமைச்சரின் பதிலின்படி, தற்போது மும்பை -அகமதாபாத் அதிவேக ரயில் corridor (High Speed Rail HSR corridor) மட்டும்தான் இந்தியாவில் உள்ள அதிவேக ரயில்வே corridor திட்டம். இத்திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஜப்பான் அரசின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய ரயில்வே அமைச்சகம் இன்னும் 6 அதிவேக ரயில்வே corridor களுக்கு விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report DPR) மேற்கொள்ள முடிவுசெய்துள்ளது. இந்த பணி National High Speed Rail Corporation Limited (NHSRCL) இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அதிவிரைவு ரயில்வே corridor கள்

1) 865 கிலோ மீட்டர் நீள டில்லி– நொய்டா – ஆக்ரா – கான்பூர்– லக்னோ– வாரணாசி corridor

2) 886 கிலோ மீட்டர் நீள டில்லி – ஜெய்பூர் – உதய்பூர் – அகமதாபாத் corridor

3) 753 கிலோ மீட்டர் நீள மும்பை – நாசிக் – நாக்பூர் corridor

4) 711 கிலோ மீட்டர் நீள மும்பை – பூனே – ஹைதராபாத் corridor

5) 435 கிலோ மீட்டர் நீள சென்னை – பெங்களூரூ – மைசூரூ corridor

6) 459 கிலோ மீட்டர் நீள டில்லி– சண்டிகர் – லூதியானா – ஜலந்தர் – அமிர்தசரஸ் corridor

காஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்

ஜப்பானின் E5 Shinkansen தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான 508 கிலோ மீட்டர் நீள அகமதாபாத் – மும்பை அதிவிரைவு ரயில்வே corridor தான் இந்தியாவின் முதல் புல்லட் ரயில். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதம மந்திரி Shinzo Abe ஆகியோர் இணைந்து செப்டம்பர் 2017ல் இந்த திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினர். இந்த அதிவிரைவு ரயில்வே corridor, அகமதாபாத் – மும்பை இடையேயான தூரத்தை 2 மணி நேரத்தில் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close