/tamil-ie/media/media_files/uploads/2020/02/Kamya-Karthikeyan.jpg)
Mumbai girl Kaamya Karthikeyan, summit Mt Aconcagua
Mumbai girl Kaamya Karthikeyan becomes youngest to climb summit Mt Aconcagua : மும்பையை சேர்ந்த காம்யா கார்த்திகேயன் என்ற மாணவி நேவி சில்ட்ரன் ஸ்கூலில் (Navy Children School (NCS)) படித்து வருகிறார். இந்த மாணவி தென் அமெரிக்காவில் இருக்கும் மிக உயர்ந்த மலைச்சிகரமான அக்கோன்காகுவாவில் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சிகரத்தின் உயரம் 6962 மீட்டர்கள் ஆகும். ஆசியாவிற்கு வெளியே இருக்கும் மிக உயரமான சிகரம் இதுவாகும்.
பிப்ரவரி 1ம் தேதி இந்த சிகரத்தை அடைந்த மாணவி காம்யா அங்கு நம் நாட்டின் மூவர்ண கொடியை நட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்தார். காம்யாவின் இந்த வெற்றி குறித்து கப்பற்படை குடியிருப்பில் இருப்பவர்கள் “வெகுநாட்களாக காம்யா இந்த இலக்கிற்காக அயராது உழைத்திருக்கிறார். மன அளவிலும் உடல் அளவிலும் தன்னை இத்தனை ஆண்டுகளாக தயார்படுத்தி வந்தார்” என்று கூறியுள்ளனர். மும்பையை சேர்ந்த இந்த மாணவி உலகிலேயே மிகவும் இளம் வயதில் இந்த சிகரத்தை அடைந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மேலும் படிக்க : இளம் வயதிலேயே செஸ் பயிற்சியில் இருந்து சிறுவர்கள் ஏன் வெளியேறுகிறார்கள்?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.