இளம் வயதிலேயே செஸ் பயிற்சியில் இருந்து சிறுவர்கள் ஏன் வெளியேறுகிறார்கள்?

பெற்றோர்களுக்கு ஒரு ஆலோசனை ஏதாவது ஒரு பயிற்சியாளர் அல்லது பெற்றோர் உங்களிடம், ஒரு குழந்தை நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் பயிற்சி பெற்றால் போதும். இதற்காக பிறந்த நாள் விழாக்களை தியாகம் செய்ய வேண்டியதில்லை. பள்ளியில் கொடுக்கும் வீட்டுப் பாடங்களை செய்யலாம். உங்கள் குழந்தை உலக அல்லது…

By: Updated: February 10, 2020, 09:39:21 PM

பெற்றோர்களுக்கு ஒரு ஆலோசனை

ஏதாவது ஒரு பயிற்சியாளர் அல்லது பெற்றோர் உங்களிடம், ஒரு குழந்தை நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் பயிற்சி பெற்றால் போதும். இதற்காக பிறந்த நாள் விழாக்களை தியாகம் செய்ய வேண்டியதில்லை. பள்ளியில் கொடுக்கும் வீட்டுப் பாடங்களை செய்யலாம். உங்கள் குழந்தை உலக அல்லது தேசிய அளவில் விளையாட முடியும் என்று சொல்வார்கள். ஆனால், அவர்கள் பொய் சொல்கிறார்கள்.

ஷில்பா மேஹ்ரா

ஸ்கிராப்பிள் விளையாட்டுக்கு பாகிஸ்தானில் பயிற்சி கொடுப்பது போல இந்தியாவில் செஸ் விளையாட்டுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறதா? 13 வயதே ஆன பாகிஸ்தான் சிறுவன் அண்மையில் உலக ஸ்கிராப்பிள் ஜூனியர் சாம்பியன் ஆக தேர்வு செய்யப்பட்டான். இந்தியாவில் கிரான்ட் மாஸ்டர்களைக் கொண்ட பெரிய குழுக்கள் இருக்கின்றன, இளம் செஸ் திறமையாளர்கள் இருக்கின்றனர், அனைத்து வயதுகளிலும் பல்வேறு உலக சாம்பியன்கள் இருக்கின்றனர் என்று கூறுகின்றோம். ஸ்க்ராப்பிள் விளையாட்டு குறித்து பாகிஸ்தானுடனா ஒரு ஒப்பீடு அல்ல. உண்மையில் இது விலகிசொல்வோர் குறித்த விகிதாசாரமாகும்.

அரசியலமைப்பு சட்டம் எனும் கலங்கரை விளக்கம்

இந்திய குழந்தைகள் ஐந்து வயதில் செஸ் விளையாட்டில் இறங்குகின்றனர். உலக செஸ் ஃபெடரேஷன் நடத்தும் போட்டிகளில் பங்கேற்கின்றனர். சுழற்காற்றான குழந்தைப் பருவத்தை பயணத்தில் கழித்தல், முடிவற்ற பயிற்சிகள், நிதி இல்லாமல் போவது, பள்ளியில் இடையூறு, மன அழுத்தம் என்று அவர்களின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. இறுதியில், 13 வயதில் செஸ் விளையாட்டில் ஒரு நிலையை அடைய முடியாமல் வெளியேறுகின்றனர். தேர்வுகளுக்குத் திரும்புகின்றனர். செஸ் மீது ஆர்வத்தை இழக்கின்றனர்.
இது ஒரு உதாரணம்தான். இதுதான் இந்தியா முழுக்க இருக்கிறது.

செஸ் விளையாட்டுக்கு பல ஆண்டுகள் குழந்தைகள் தங்களைக் கொடுக்கின்றனர். பெற்றோரும் தங்களைக் கொடுக்கின்றனர். ஆனால், பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. பரிசுகள் தருவதாகச் சொல்லப்படும் போட்டிகளுக்கான ஒரு அழைப்பில், ஏழு வயதுக்கு கீழ் உள்ள பிரிவில் கூட ,இது போன்ற போட்டிகளுக்கு என்ன தேவை என்று உங்களிடம் சொல்ல மாட்டார்கள். பரிசுத் தொகையைச் சுற்றியிருக்கும் ஆரவாரம், ரத்தம் சிந்தி பயிற்சி பெறுவதை மறைத்து விடுகிறது.

ஒவ்வொரு குழந்தைகளும் செஸ் பயிற்சியில் இருந்து வெளியேறுவது இப்போது செய்தியாகிறது. இது இந்தியாவில் ஆயிரகணக்கான அளவில் இருக்கிறது. செஸ் திறமையை தொழில் முறை சார்ந்த போட்டிகள் அல்லது சர்வதேச செஸ் பெடரேஷன் ரேட்டிங்க் கொண்டு மட்டும் அளவிட வேண்டும் என்று நமது ஊடகங்களும், அது சார்ந்த குழுவினரும் சொல்கின்றனர். ஆனால், இது உண்மையல்ல.

உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் செஸ் மிகப்பெரிய இடத்தைப் பெறுவதற்கு, அவர்களை தொடர்ச்சியாக பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும். லதா மங்கேஸ்கர் போல பாடவில்லை என்பதற்காக இசை வகுப்பில் இருந்து உங்கள் குழந்தையை இடையிலேயே கூட்டிக் கொண்டு போய்விடுவீர்களா?
தொழில்முறை சார்ந்த போட்டிகளில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும். பல மணி நேரம் கடந்த பிறகும் பூஜ்யம், நாள் கணக்கில் போராட்டம் மன உறுதியை அதிகரிக்காது. அங்கே செல்வது, அதிருப்தியடைவதன் அர்த்தம், ஆய்வு திறமை, கணித திறமை, தனித்திறமை ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் கருவி குழந்தையின் வாழ்க்கையில் இருந்து வெளியேறி விடும்.

தொழில்முறை சார்ந்த போட்டிகளில் அல்லது பல்வேறு வயதினரைக் கொண்ட தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் சர்வதேச செஸ் பெடரேஷன் மதிப்பீடு செயல்திறனை கொண்டு செஸ் விளையாட்டின் தகுதியை அளவிடக் கூடாது.

தொழில்முறை சார்ந்த செஸ் வட்டத்துக்குள் ஒரு குழந்தை வந்த ஆறு ஆண்டுகள் கழித்து, செஸ்ஸுக்கு வெளியே வாழ்வாதாரத்துக்கு சம்பாதிக்க முடியும் என்ற சிறிய நம்பிக்கையை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். நீங்கள் எப்போது இதை தொடங்கினீர்கள் என்று தெரியாவிட்டால், இது வலிதரும் உண்மையாக இருக்கும்.

செஸ் விளையாட்டில் ஏதும் செய்யமுடியாது என்பது அர்த்தம் அல்ல. உங்கள் குடும்பத்துக்கும், உங்கள் குழந்தைக்கும் உண்மையில் சாத்தியம் என்ன என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது, செஸ் தொழில்முறை உலகம் என்ன என்பதுதான்.

செஸ்ஸுக்கு மேலும் அதிகம் இருக்கிறது. ஸ்கிராப்பிளை போல ஆங்கிலத்தை வளர்த்தெடுப்பதற்கு செஸ் ஒரு கற்றறிவதற்கான கருவியாக இருக்கிறது.

யாரேனும் வயதானவரை அடிப்பதில் உள்ள சந்தோஷம் அல்லது உங்களுடைய முதல் செக்மேட்டை பார்ப்பதில் உள்ள சந்தோஷம், தந்திரமான பொறிகள் மற்றும் சேர்க்கைகளின் வெளிப்படையான அழகு மற்றும் மேலும் பலவற்றை எப்படி நீங்கள் அளவிடுவீர்கள். இது ஒரு குழந்தையின் மனதின் வரம்புகளை விரிவாக்குவது பற்றியது. தொழில்முறை வட்டம் காத்திருக்கத்தான் வேண்டும்.

இங்கேதான் பாகிஸ்தான் ஸ்கிராபிளில் வெற்றி பெற்றிருக்கிறது. பயிற்சி பெறுவதில் இருந்து விலகுதலும் இல்லை.

பிள்ளைகளைவிட கணவனே மன அழுத்தத்துக்கு காரணம் – ஆய்வில் பெண்கள் வெதும்பல்

பிபிசி தொலைகாட்சியில் பேசிய ஒரு ஸ்கிராபிள் பயிற்சியாளர், இந்த விளையாட்டு ஆங்கிலத்தை வளர்த்தெடுக்கும் கருவியாகப் பார்க்கப்படுகிறது. போட்டி குறித்து யார் ஒருவரும் கவலைப்படுவதில்லை. எனவே ஒரு குழந்தை ஸ்கிராபிள் விளையாட்டை தொடர்ந்து விளையாடுகிறது. முதிய வயது வரை விளையாடுகின்றனர். வாழ்க்கை முழுவதற்கும் பலன்களை பெறுகின்றனர்.

எனினும், செஸ் பயிற்சியில் ஈடுபடும் ஒரு இந்திய குழந்தை அவனது இளம் வயதில் வெளியேறுவதாக இருக்கிறது. அது சாரந்த அனைத்துப் பலன்களையும் இழக்கிறது. அவன் தொழில்முறை சார்ந்த போதுமான உயர்ந்த பட்சமதிப்பீட்டை பெற முடியவில்லை என்பதைத்தான் இந்த விளையாட்டு கொடுக்கிறது.
முடிவற்ற விரக்தியின் சுழற்சியாக தொழில்முறை சார்ந்த போட்டிகளின் சர்கஸ் விளையாட்டில் சிக்காமல் உங்கள் குழந்தையும் செஸ்ஸை விரும்புவதை கட்டமைப்பதற்கான வழிமுறைகள்,

1.உங்கள் குழந்தை செஸ் போட்டிகள் குறித்த செய்திகளில் இடம் பெறவில்லை என்று கவலைப்படாதீர்கள். வேறு எந்த தொழிலையும் போலவே, செஸ் போட்டியில் ஈடுபடும் உங்கள் குழந்தையும் 8-10 மணி நேரத்தை செலவிடுகிறது. அத்தியாவசியமான போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆண்டு முழுவதும் பயணம் செய்கின்றனர். அதிக தியாகம் செய்கின்றனர்.

செஸ் விளையாட்டுக்காக உங்கள் குழந்தை விதிவிலக்கான போக்கைக் கொண்டிருந்தால், போட்டிகளின் வட்டத்துக்குள் அவனை இடம் பெற விரும்பினால், உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்; உங்கள் குழந்தைகள் விருந்துகளை தவிர்ப்பதை, பள்ளிக்குச் செல்வதை தவிர்ப்பதை, பல மணிநேரம் தினமும் பயிற்சி பெறுவதை விரும்புகிறீர்களா?

ஏதாவது ஒரு பயிற்சியாளர் அல்லது பெற்றோர் உங்களிடம், ஒரு குழந்தை நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் பயிற்சி பெற்றால் போதும். இதற்காக பிறந்த நாள் விழாக்களை தியாகம் செய்ய வேண்டியதில்லை. பள்ளியில் கொடுக்கும் வீட்டுப் பாடங்களை செய்யலாம். உங்கள் குழந்தை உலக அல்லது தேசிய அளவில் விளையாட முடியும் என்று சொல்வார்கள். ஆனால், அவர்கள் பொய் சொல்கிறார்கள். எந்த ஒரு விளையாட்டுக்கும் இருக்கும் தொழில்முறை சார்ந்த பயிற்சிகளைப் போலவே செஸ் போட்டிக்கும் தொழில்முறை சார்ந்து பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அது இல்லை என்றால் இதை செய்ய முடியாது. இது எப்போது நீங்கள் தயாராக இருப்பீர்கள் என்பதைப் பற்றியது.

2. சர்வதேச பெடரேஷன் போன்ற தொழில்முறையிலான போட்டிகளில் பங்கேற்க அவசரம் காட்டாதீர்கள். கடின உழைப்புடன் கூடிய பயிற்சி இல்லாமலும், குறைந்தபட்சமாக‍ அது குறித்து ஆய்வு செய்யாமலும் அவசரப்படவேண்டாம். சில ஆண்டுகள் ஆனாலும் காத்திருங்கள்.

3. யதார்த்தமான இலக்குகளைக் கொண்டிருங்கள். பயிற்சியாளர் உங்களை வழிநடத்துவதை அனுமதியுங்கள். உள்ளூர் கிளப்பில் உள்ள பயிற்சியாளரை நீங்கள் நம்பாவிட்டால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். செஸ் விளையாடத் தெரியாத பெற்றோர், இணையதளத்தில் படித்துத் தெரிந்து கொள்வார்கள். இதனை தொழில் முறையில் பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளரோடு ஒப்பிடக் கூடாது. இதர விஷயங்களை நம்பிக் கொண்டு, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

4.ஆய்வு மேற்கொள்ள தயாராக இல்லாத பட்சத்தில், விருப்ப அளவிலான செஸ் போட்டிகளில் மட்டும் பங்கேற்கவும். பள்ளி அளவிலான போட்டிகளிலும் பங்கேற்கலாம்.

5. வாரத்துக்கு ஒருமுறையாவது டி.வி-யை ஆஃப் செய்து விட்டு, செஸ் தொடர்பான புதிர்களை தீர்ப்பது அல்லது குடும்பத்தோடு இணைந்து குழு விளையாட்டுகளில் ஈடுபடலாம். உங்கள் குழந்தைகளிடம் , அவரது தாத்தா , பாட்டிகளுக்கு செஸ் கற்றுக் கொடுக்கச் சொல்லலாம். முதியவர்கள் தங்கள் மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவும். விளையாட ஆர்வம் இல்லை எனில், பிறருடன் சேர்ந்து புதிர்களை விடுவிக்கமுடியும்.

6. உங்கள் குழந்தையை பிறருடன் ஒப்பிடாதீர்கள் அல்லது செஸ் வகுப்புக்குப் போவதால், நேரத்தையும் பணத்தையும் எப்படி நீ செலவழிக்கிறாய் என்றும் சொல்லாதீர்கள். செஸ் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டால், அதில் தொடர்ந்திருக்க அனுமதியுங்கள். இல்லையெனில் வேறு செயல்களில் ஈடுபடுத்துங்கள்.

7. செஸ் விளையாட்டில், குறிப்பிட்ட அளவிலான ஆய்வும், பயிற்சியும் அடங்கி இருக்கிறது. செஸ் பயிற்சியாளர் உதவியுடன், குழந்தையை எவ்வளவு தூரம் உந்தித் தள்ளுவது அல்லது அவனது சொந்த வேகத்தில் செல்ல அனுமதிப்பது என உங்கள் குழந்தையின் தனிப்பட்ட நிலைத் திறனை கண்டுபிடியுங்கள்.

‘அமராவதி’ நம்பிக்கை குறைந்து வருகிறது… இரண்டு மாநிலங்களின் கதை!

8. ஒரு பெற்றோராக, செஸ் போட்டியில் ஆர்வம் இருக்கிறது என்று தெரிந்தால், அதை மிகவும் அடிப்படையாகப் பாருங்கள். அது குறித்து உயர்வாக புரிந்து கொள்ள வேண்டாம்.(பெற்றோர் தன்னிலை மறந்து விடுவார்கள்). ஆன்லைனில் இடைவெளி இன்றி செஸ் விளையாடுவது யார் ஒருவருக்கும் நல்லதில்லை. அதே நேரத்தில் இப்படி விளையாடாமல் இருந்தாலும் நல்லதல்ல. நடுநிலைத் தன்மையை கடைபிடிக்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகள் செஸ் விளையாடத் தொடங்கியதுமே, உள்ளூர் வட்டத்தில், ஒரு தொழில் முறையை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இது ஒரு தந்திரமான யோசனை கவனமாக நடந்து கொள்ளவும். அதன் சொந்த உரிமையில் செஸ் அமைப்பு என்பது ஒரு முழு நேரத்தொழிலாகும். நீங்கள் தொடங்குவதற்கு முன்பு, உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும், உங்கள் குழந்தையும் செஸ் விளையாட்டில் இருந்து விலகுவதாக இருந்து விடக் கூடாது.

9. உங்கள் சொந்த குறிக்கோள்களுக்காக உங்கள் குழந்தையை பெரியபோட்டிகளை நோக்கித் தள்ளாதீர்கள். செஸ் விளையாட்டில் அதி புத்திசாலி என்பது கவர்ச்சியான யோசனை. ஆனால், அதன் அடித்தளமாக இருங்கள். இதில் தெளிவாக இருங்கள்.

10. உங்கள் குழந்தையின் நலனுக்காக, அசோஷியேசன் அரசியலில் தெளிவாக இருங்கள். விளையாட்டு அசோஷியேசன் அரசியல் என்பது சோகமான உண்மை. அதில் நீங்கள் தொழில்முறையோடு இல்லாதபட்சத்தில் அதில் பங்கேற்காதீர்கள். உண்மையான செஸ் பிரியர்கள், விளையாட்டு வீர ர்களை விடவும், செஸ் விளையாட்டு கொள்கைகளை கொண்டிருக்கும் நபர்களிடம் அதிக அறிவுரையைப் பெறவும்.
உங்கள் குழந்தை வாழ்க்கை முழுவதும் செஸ் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் வகையில் அவனை செஸ் விளையாட்டில் இறங்க அனுமதியுங்கள். போட்டிகள் காத்திருக்க முடியும். அவை நடக்க வேண்டும் என்றால், அது நடக்கும். உங்களுக்கு வழிகாட்ட நேரத்தை அனுமதியுங்கள். எல்லா வெற்றிகளும், பல ஆண்டுகள் அர்பணிப்பு மற்றும் கடின உழைப்பை எடுக்கக் கூடியவை. நீங்கள் குறுக்கு வழியை முயற்சி செய்தால், உங்கள் குழந்தையின் செஸ் திறமையை பாழாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.

சராசரியாக, செஸில் நன்றாக விளையாட உங்களுக்கு ஒரு ஆண்டு தேவை. அப்போது படிப்பு குறித்த அழுத்தம் இருக்கக் கூடாது. இசை வகுப்பில் பயிற்சி பெறுவது போன்ற முறையான பயிற்சி இருக்க வேண்டும். வாரம் ஒரு முறை என்பது மிகவும் குறைவு. வாரம் ஏழு நாட்களும் என்பதும் மிகவும் அதிகம். தனிப்பட்ட விருப்பம் மற்றும் போக்குக்ககு ஏற்ப ஒரு அட்டவணை தயாரிக்க வேண்டும்.

பாகிஸ்தானியின் ஸ்கிராபிள் விளையாட்டு வழியில் உங்கள் குழந்தைகள் வாழ்க்கை முழுவதும் செஸ் விளையாட்டில் பயிற்சி பெறுவதுடன் , அதில் வேடிக்கையாகவும் சிறந்து விளங்க அனுமதியுங்கள்.
(இந்த கட்டுரையின் எழுத்தாளர் குழந்தை மனநல வல்லுநர். இளம் வயதிலேயே பகுப்பாய்வு திறன்களை வளர்த்தெடுப்பதற்கான ஆர்வம் கொண்டவர். லக்னோவில் உள்ள பிளாக்& ஒய்ட் என்ற செஸ் கிளப்பின் நிறுவனர் மற்றும் உறுப்பினர். செஸ் கட்டுரைகள் கொண்ட முதல் அச்சு இதழை 2004-ம் ஆண்டு முதல் 2012 வரை வெளியிட்டவர். தவிர உ.பி-யில் 2002-ம் ஆண்டின் மகளிர் செஸ் சாம்பியன் ஆக வெற்றி பெற்றவர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Why do so many kids quit chess in their teens

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X