சத்தியமா நான் கோட்ஸேவை பாராட்டல… சர்ச்சைக்குரிய ட்வீட் பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி விளக்கம்

காந்தியை நான் எவ்வாறு வணங்குகின்றேன் என்று என்னை ட்விட்டரில் பின் தொடர்வோர் அறிவார்கள்.

By: June 2, 2019, 2:48:49 PM

Mumbai IAS officer Nidhi Choudhari Explains Anti- Gandhi Tweet : கடந்த மாதம் அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும்வான கமல் ஹாசன் ஒரு கருத்து ஒன்றை வெளியிட்டார். அதில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்ஸே. அவர் ஒரு இந்து என்று குறிப்பிட்டார். அன்றைய நாளில் இருந்து ஹாட் டாப்பிகாக மாறினார்கள் மகாத்மா காந்தியும், நாதுராம் கோட்ஸேவும்.

போபால் நாடாளுமன்ற உறுப்பினர் சாத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் நாதுராம் கோட்ஸேவிற்கு ஆதரவாக பேசி மீண்டும் தங்களின் கருத்தினை வாபஸ் வாங்கிக் கொண்டனர். அதே போல் மும்பையில் பணி புரிந்து வரும் துணை நகராட்சி ஆணையர் (Deputy Municipal Commissioner) நிதி சௌத்ரி ஐ.ஏ.எஸ் அவர்கள் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் 150ஆவது பிறந்த வருடம் எப்படி கொண்டாடப்படுகிறது. அவருடைய முகம் ரூபாய் நோட்டுகளில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது. அவர் பெயரில் இயங்கி வந்த சாலைகளும், வீதிகளின் பெயர்களும் கூட வேறு பெயர்கள் தாங்கி நிற்கின்றன. இது தான் அவருக்கான உண்மையான அஞ்சலியாகும். 30/01/1948ற்காக நன்றி நாதுராம் கோட்சே என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவர் வேறு எதையோ மையப்படுத்தி எழுத, ஆனால் அது மக்களால் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அந்த ட்வீட்டினை நீக்கிவிட்டார்.

நிதி சௌதரியின் ட்வீட்

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி, ஐ.ஏ.எஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தனர்.

ஆனால் இது குறித்து நிதியிடம் கேள்விகள் எழுப்பிய போது  நான் யார் என்பதும், காந்தியை நான் எவ்வாறு வணங்குகின்றேன் என்றும் 2011ம் ஆண்டில் இருந்து என்னை ட்விட்டரில் பின் தொடரும் மக்களுக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய கருத்து மக்கள் மத்தியில் தவறாக சென்று சேர்ந்துள்ளது என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று கூறியிருந்தார்.

காந்தியை கொன்றவர்கள் குறித்து புகழாரம் சூட்டுவது மிகவும் தவறானது என்று காங்கிரஸ் தரப்பு கூறியிருக்கின்ற நிலையில் தன் தரப்பு நியாயத்தை விளக்கியுள்ளார் நிதி. மேலும் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக பொறுப்பேற்றதிற்கு பெயரைக் குறிப்பிடாமல், பெண்கள் நிதி நிர்வாகத்தில் மேம்பட்டவர்கள். பெருமைப்படும் தருணம் என்று கூறி ட்வீட் செய்துள்ளார்.

மேலும் பெண்களின் சேனிட்டரி நாப்கின், உடைகள், மற்றும் அலங்காரப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க : சாத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் கோட்ஸே குறித்து கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Mumbai ias officer nidhi choudhari explains anti gandhi tweet

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X