சமீபத்திய சந்திரயான் -3 திட்டம் உட்பட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பல்வேறு ஏவுதல்களுக்கான கவுண்டவுன்களின் பின்னணியில் குரல் கொடுத்த கே.வளர்மதி, 64 வயதில் மரணமடைந்தார்.
இஸ்ரோ அதிகாரிகள் விஞ்ஞானி வளர்மதியின் மரணத்தை உறுதிசெய்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இஸ்ரோவின் எண்ணற்ற ஏவுகணைகளுக்கான கவுண்ட்டவுன்களுக்கு அவர் பொறுப்பேற்றவர் என்று கூறினர். வளர்மதி, மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: இந்திய சமூகத்தில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள், இஸ்லாமியப் படையெடுப்புகளே காரணம்- ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதி கிருஷ்ண கோபால்
ஜூலை 30 அன்று பி.எஸ்.எல்.வி சி56 ராக்கெட்டில் DS-SAR ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை ஏவுதல் மற்றும் எல்.வி.எம்3 ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலத்தின் ஜூலை 14 ஏவுதலின் ஒரு பகுதியாக வளர்மதி இருந்தார்.
“பி.எஸ்.எல்.வி 56 மிஷன் (ஜூலை 30 அன்று) ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவப்பட்டதற்கான கவுண்ட்டவுன் அவரின் கடைசியாக இருக்கலாம். இந்த கவுண்ட்டவுன்களுக்கு தொழில்நுட்ப தகுதி வாய்ந்த விஞ்ஞானிகள் தேவை” என்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் X தளத்தில் வளர்மதி மறைவு குறித்து பதிவிட்டுள்ளார்: "சந்திரயான் 3 உட்பட பல இஸ்ரோ ஏவுகணைகளின் பின்னணியில் குரல் கொடுத்த வளர்மதி ஜியின் மறைவைக் கேட்டு வருத்தமாக உள்ளது."
“ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் எதிர்கால பயணங்களின் கவுண்டவுன்களுக்கு வளர்மதி மேடத்தின் குரல் இருக்காது. சந்திரயான் 3 அவரது இறுதி கவுண்டவுன் அறிவிப்பு. எதிர்பாராத மரணம். மிகவும் சோகமாக உணர்கிறேன். பிரணாம்ஸ்!" என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும் இயக்குனருமான பி.வி வெங்கிடகிருஷ்ணன் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“