தாயை இழிவுபடுத்தியது ஏன்? எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மோடி ஆவேசம்

எனது தாயார் அரசியலில் ஈடுபடாதவர். அவருக்கு அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருந்தும், அவர் மீது ஏன் அவதூறு பேசப்பட்டது? இது பீகார் மாநிலத்தின் தாய்மார்கள் மற்றும் மகள்களை அவமதிப்பதாகும்.

எனது தாயார் அரசியலில் ஈடுபடாதவர். அவருக்கு அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருந்தும், அவர் மீது ஏன் அவதூறு பேசப்பட்டது? இது பீகார் மாநிலத்தின் தாய்மார்கள் மற்றும் மகள்களை அவமதிப்பதாகும்.

author-image
WebDesk
New Update
Narendra Modi Bihar politics

Narendra Modi Bihar politics

பீகாரில் நடைபெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) - காங்கிரஸ் கூட்டத்தில், தன்னுடைய தாயார் குறித்து தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த வேதனை தெரிவித்தார். 

Advertisment

செவ்வாய்க்கிழமை, பீகாரில் பெண்கள் சுயஉதவி குழுக்களுக்கான புதிய கூட்டுறவு அமைப்பை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்த பிரதமர் மோடி, "எனது தாயாருக்கு அரசியலில் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருந்தும் ஏன் ஆர்.ஜே.டி. - காங்கிரஸ் மேடையில் அவரை அவதூறாக பேச வேண்டும்? ஒரு தாயை இழிவாக பேசுபவர்களின் மனதில், பெண்கள் பலவீனமானவர்கள் என்ற எண்ணம் ஆழமாக பதிந்துள்ளது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இது எனக்கு மிகுந்த மன வலியை ஏற்படுத்தியுள்ளது" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

பீகாரில் உள்ள கிராமப்புற பெண்களின் தொழில்முனைவு திறன்களை மேம்படுத்தும் வகையில், புதிய கூட்டுறவு அமைப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பீகாரில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) அரசு எப்போதும் பெண்களின் அதிகாரத்திற்காக பாடுபடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆதரவாளர் கைது:

கடந்த புதன்கிழமை, தர்பங்காவில் உள்ள பித்தௌலி கிராமத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் வாக்காளர் உரிமை யாத்திரையின்போது, பிரதமர் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக, முகமது ரிஸ்வி என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஃபாத்வா கோரி மனு:

Advertisment
Advertisements

இந்த விவகாரம் குறித்து, பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவின் தேசியத் தலைவர் ஜமால் சித்திக், தாருல் உலூம் தியோபந்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். மூத்த பெற்றோர்களுக்கு இஸ்லாம் மதம் உயர்ந்த மரியாதையை அளிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி, ரிஸ்விக்கு எதிராக 'ஃபத்வா' (சட்டத் தீர்ப்பு) வெளியிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். மேலும், மோடியின் தாயார் பற்றி உள்ளூர் காங்கிரஸ் ஆதரவாளர் வெளியிட்ட கருத்துக்கள், சமூகத்தின் இமேஜை களங்கப்படுத்திவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும். 

India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: