Narendra Modi crosses 60 million followers on Twitter : உலகில் அதிக நபர்களால் பின்பற்றப்படும் தலைவர்களில் ஒருவராக தற்போது உயர்ந்துள்ளார் மோடி. அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவை டிவிட்டரில் 12 கோடி நபர்கள் பின்பற்றுகின்றனர். தற்போதைய அதிபரை 8 கோடியே 30 லட்சம் நபர்கள் பின்பற்றுகின்றனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது இந்திய பிரதமரை 6 கோடி நபர்கள் பின்பற்றுகின்றனர்.
மேலும் படிக்க : தங்கத்தில் முகக்கவசம்; கோவையில் நகை செய்யும் நபர் அசத்தல்!
உலக மகளிர் தினத்தின் போது 7 பெண்கள் மோடியின் ட்விட்டரை கையாண்டனர். அப்போது மோடியின் ஃபாலோவர்கள் அதிகமானார்கள். அப்போது 5 கோடியே 33 லட்சம் ஃபாலோவர்கள் மட்டுமே மோடிக்கு இருந்த நிலையில் இந்த 4 மாதத்தில் 75 லட்சம் பேர் மோடியை புதிதாக பின்பற்றுகிறார்கள்.
2009ம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக இருந்த போது ட்விட்டரில் கணக்கை துவங்கினார் மோடி. ஒரு லட்சம் ஃபாலோவர்களை பெற அவருக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது. உலக அரங்கில் நடைபெறும் அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்தும் கருத்து தெரிவிக்கும் ஒரு ஊடகமாக ட்விட்டர் திகழ்கிறது. நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைத்து முக்கிய நபர்களும் இந்த ஊடகம் வாயிலாக தங்களின் கருத்துகளை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil