PM Modi Cabinet Ministers Portfolio Live: அமித்ஷாவுக்கு உள்துறை, நிர்மலாவுக்கு நிதித்துறை – முழு இலாகாக்கள் இங்கே!

PM Modi Cabinet Ministers List with Detailed Portfolio Live: பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற அமைச்சரவையில், 57 பேர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்கள். 

Narendra Modi Cabinet 2019, Modi Cabinet Ministers List

PM Narendra Modi Cabinet Ministers Portfolio Live Updates: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்தது பா.ஜ.க.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பிரதமரானார் மோடி. முறைப்படி நேற்று அவர் 2-ம் முறையாக பதவியேற்றுக் கொண்டார். ராஷ்ட்ரபதி பவன் மாளிகையில் நடந்த இந்நிகழ்ச்சியில் 6000 சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டார்கள்.

PM Modi Cabinet Ministers Portfolio Live Updates:

பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற அமைச்சரவையில், 57 பேர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்கள்.

Modi Cabinet: பிரதமர் நரேந்திர மோடி – 57 அமைச்சர்கள் பட்டியல்

இவர்களுக்கான இலாகாக்கள் இன்று ஒதுக்கப்படுகின்றன. மத்திய அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு என்பதைத் தெரிந்துக் கொள்ள மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள் மக்கள்.

தற்போது மோடியின் அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாக்காக்கள் குறித்த முழு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதில் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அமித்ஷாவுக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த முறை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வகித்த பிரகாஷ் ஜவடேகர், இம்முறை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

முழுவிபரம் இங்கே… 

1. பிரதமர் நரேந்திர மோடி – அணுசக்தித்துறை, விண்வெளித்துறை, மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை 

கேபினட் அமைச்சர்கள்:

2. ராஜ்நாத் சிங்  – பாதுகாப்புத்துறை
3. அமித் ஷா – உள்துறை
4. நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து
5. சதானந்த கவுடா – ரசாயனம்
6. நிர்மலா சீதாராமன் – நிதி அமைச்சர்
7. ராம்விலாஸ் பஸ்வான் – உணவு
8. நரேந்திரசிங் தோமர் – விவசாயத்துறை 
9. ரவிசங்கர் பிரசாத் – சட்டம் 
10. ஹர்சிம்ரத் பாதல் (அகாலி தளம்) – உணவு பதப்படுத்துதல் 
11. தாவர்சந்த் கெலோட் – சமூக நலத்துறை 
12. ஜெய்சங்கர் (முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர்) – வெளியுறவுத்துறை
13. ரமேஷ் பொக்ரியால் – மனித வள மேம்பாடு
14. அர்ஜூன் முன்டா – பழங்குடியினர் துறை 
15. ஸ்மிரிதி இரானி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, ஜவுளித்துறை
16. ஹர்ஷவர்தன் – சுகாதாரத்துறை 
17. பிரகாஷ் ஜவடேகர் – சுற்றுச்சூழல் துறை
18. பியூஷ் கோயல் – ரயில்வே
19. தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியம் 
20. முக்தார் அப்பாஸ் நக்வி – சிறுபான்மையினர் நலம்
21. பிரகலாத் ஜோஷி – நாடாளுமன்ற விவகாரம்
22. மகேந்திரநாத் பாண்டே – தொழில் முனைவோர் துறை 
23. அரவிந்த் சாவந்த் – கனரக தொழில் துறை
24. கிரிராஜ் சிங் – கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளர்ப்பு
25. கஜேந்திரசிங் ஜெகாவத் – நீர்வளத்துறை 

தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள்:

26. சந்தோஷ்குமார் கங்வால் –  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
27. இந்திரஜித் சிங் – புள்ளி விபரம் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
28. ஸ்ரீபத் நாயக் – ஆயுர்வேத, யோகா, இயற்கை மருத்துவ, யுனானி, சித்த மற்றும்ஹோமியோபதி (AYUSH); மற்றும்
மாநில பாதுகாப்பு துறை
29. ஜிதேந்திர சிங் – வட கிழக்கு மாநிலங்கள்
30. கிரன் ரிஜிஜு – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, சிறுபான்மையினர் நலம்
31. பிரகலாத் சிங் படேல் – கலாச்சாரம் மற்றும் மாநில சுற்றுலா
32. ராஜ்குமார் சிங் – மின்சாரத்துறை
33. ஹர்தீப்சிங் பூரி – வீடு மற்றும் நகர்புறம் 
34. மன்சூக் மண்டோலியா – கப்பல் அமைச்சகம்

இணை அமைச்சர்கள்:

35. பஹன் சிங் குலஸ்தே – ஸ்டீல்
36. அஸ்வினி குமார் சவுபே – சுகாதார அமைச்சகம் மற்றும் குடும்ப நலன்
37. அர்ஜூன்ராம் மெக்வால் – நாடாளுமன்ற விவகாரம்
38. வி.கே.சிங் – சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
39. கிரிஷன் பால் குர்ஜார் – சமூக நீதித்துறை
40. டான்வே ராசாஹேப் தாதாராவ் – நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகம்.
41. கிஷன் ரெட்டி – வீட்டு அமைச்சகம்
42. பர்ஷோத்தம் ரூபாலா – விவசாயம் மற்றும் விவசாயிகள் நலம் 
43. ராம்தாஸ் அத்வாலே – சமூக நீதி
44. சாத்வி நிரஞ்சன் சோதி – கிராமப்புற மேம்பாடு
45. பாபுல் சுப்ரியோ – சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை
46. சஞ்சீவ் பால்யன் – விலங்கு, பால் மற்றும் மீன் வளத்துறை
47. சஞ்சய் சாம்ராவ் தோத்ரே – மனித வள மேம்பாடு
48. அனுராக்சிங் தாகூர் – நிதித்துறை
49. அங்காடி சுரேஷ் சன்னபாசப்பா – ரயில்வே
50. நித்யானந்த் ராய் – வீட்டு அமைச்சகம்
51. ரத்தன்லால் கட்டாரியா – சமூக நீதி 
52. முரளிதரன் – வெளியுறவுத்துறை
53. ரேணுகா சிங் – பழங்குடியினர் நலம்
54. சோம் பர்காஷ் – வணிகம் மற்றும் தொழில் துறை
55. ராமேஷ்வர் டெலி – உணவு பதப்படுத்துதல்
56. பிரதாப் சந்திர சாங்கி – சிறு குறு தொழில்கள்
57. கைலாஷ் சவுத்ரி – விவசாயம் மற்றும் விவசாயிகள் நலம்
58. தேபஸ்ரீ சவுத்ரி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்

 

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Narendra modi full cabinet ministers portfolio live

Next Story
மோடி சர்கார் 2.0 : முதல் நாளில் முக்கியத் தலைவர்களை சந்திக்கும் பிரதமர்news in tamil, latest news in tamil, latest tamil news, latest news, tamilnadu news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com