Advertisment

ஐ.பி.எஸ் அதிகாரி வீட்டில் 2 டன் போதை வஸ்துகள்... திணறிப்போன போதைப் பொருள் தடுப்பு பிரிவு!

கிட்டத்தட்ட 11 மணி நேரம் வரையில் அங்கு நடைபெற்ற சோதனையில் 1,818 கிலோ சூடோயெபேட்ரைன் (pseudoephedrine) மற்றும் 1.9 கிலோ கொஹைன் கைப்பற்றப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NCB team seized 2 tonnes of drugs

NCB team seized 2 tonnes of drugs

Shivam Patel, Manish Sahu

Advertisment

NCB team seized 2 tonnes of drugs : போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் நேற்று கிரேட்டர் நொய்டாவில் 2 ஆயிரம்  கிலோ அளவிற்கு போதைப் பொருட்களை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில், போதைப் பொருட்கள் கைப்பற்றபட்ட வீடு, உ.பி.யில் பணியில் இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

2 டன் போதைப் பொருட்களைக் கைப்பற்றிய போதைப்பொருள் தடுப்பு வாரியம்

நொய்டாவில் அமைந்திருக்கிறது ஐ.பி.எஸ் அதிகாரி தேவேந்திர பி.என்.பாண்டேவின் வீடு. உத்திரப்பிரதேசத்தில் காவல்துறை கண்காணிப்பளாராக பணியாற்றி வரும் அவர், நொய்டாவில் இருக்கும் தன்னுடைய வீட்டினை நைஜீரியாவை சேர்ந்த இருவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.

ஹென்றி இடியோஃபோர் (35) மற்றும் சிமந்தோ ஒகோரா (30) என்ற இருவர் கடந்த சில வருடங்களாக இங்கே வசித்து வருகின்றனர். மூன்று வருடங்களுக்கு முன்பு ப்ரோபெர்ட்டி டீலர் கௌரவ் மூலமாக இந்த வீட்டினை வாடகைக்கு தந்துள்ளார் ஐ.பி.எஸ் அதிகாரி.

“அந்த வீட்டில் குடிவந்தவர்கள் குறித்த முறையான வெரிஃபிகேஷனை அவர் நடத்தியதாக தெரியவில்லை. ஆனால் அனைத்து ஃபார்மலிட்டிகளும் முடிந்துவிட்டதாக கௌரவ் என்னிடம் தெரிவித்தார்” என்று கூறுகிறார் ஐ.பி.எஸ் அதிகாரி.

24000 ரூபாய் வாடகைக்கு குடிவந்த அவர்கள் கடந்த ஒரு வருடமாக முறையாக வாடகையினை செலுத்தவில்லை. இது தொடர்பாக கௌரவிடம் புகார் செய்துள்ளார் பாண்டே. மேலும், நிலுவைத் தொகையை கட்டி முடித்துவிட்டு அவர்களை வீட்டை விட்டு காலி செய்யவும் கேட்டுக் கொண்டார்.  ஆனால் கடந்த அக்டோபர் மாதம் பாண்டே இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி வீட்டை காலி செய்ய கேட்டிருக்கிறார். கௌரவ் அவர்களை காப்பாற்றும் வகையில், விரைவில் அவர்கள் வாடகையை திருப்பி செலுத்துவார்கள் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அந்த வீட்டிற்கு ரோந்து சென்ற தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணைய அதிகாரிகள் 5 பேர், நைஜீரிய நாட்டு பிரஜைகள் இருவரையும் கைது செய்துள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரிக்கும் போது, “அவர்கள் இருவரும் குடி வந்த பின்னர், இந்த வீடே மர்ம கோட்டை போல் ஆகிவிட்டது. வீட்டின் கதவுகளுக்கு முன்பு இரண்டு சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

மேலும் கடந்த சில மாதங்களாக மின்சார கட்டணம் கூட எதுவும் செலுத்தவில்லை. அவர்கள் இருவரும் அடிக்கடி என்னுடைய கடைக்கு வந்து ப்ரெட், முட்டை, மற்றும் தண்ணீர் வாங்கும் போது கவனித்திருக்கின்றேன்” என்று கூறுகிறார் மளிகை கடை வைத்திருக்கும் கஜ்ராஜ் சிங்.

10 மணி நேரம் நடைபெற்ற சோதனை

வியாழக்கிழமை (09/05/2019) அன்று ஒரு பெண் அதிகாரி உட்பட ஐந்து அதிகாரிகள் சாதாரண உடையில் வந்து அந்த நைஜீரியாகாரர்கள் குறித்து விசாரணை செய்தனர். நான் தான் அவர்களை அந்த வீட்டிற்கு அழைத்துச்சென்று, “இவர்கள் பாண்டேவின் நண்பர்கள், வீட்டை பார்க்க வந்துள்ளனர் என்று கூறினேன். வந்த ஐவரும் உடனே அந்த நைஜீரியாகாரரை கைது செய்தனர் என்று கூறினார் சிங்.

பக்கத்தில் இருந்த அந்த பெண் ஒகோரா, அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க ஓடியது. போனில் இருந்த சிம்கார்டை வாயில் வைத்துக் கொண்டு, போனை தூக்கி வீசிச்சென்றது. ஆன்னாலும் அதிகாரிகள் அவரை கைது செய்தனர் என்கிறார் கஜ்ராஜ் சிங்கின் மனைவி கவிதா தேவி.

கிட்டத்தட்ட 10 மணி நேரம் வரையில் அங்கு நடைபெற்ற சோதனையில் 1,818 கிலோ சூடோயெபேட்ரைன் (pseudoephedrine) மற்றும் 1.9 கிலோ கொஹைன் கைப்பற்றப்பட்டது. இதற்கு முன்பு எப்போதும் இந்த அளவில் ஃபேக்டரிகளுக்கு வெளியே போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : குடிபோதையில் குழந்தையை விட்டு சென்ற பெண்…குழந்தையின் பசியை போக்க தாயாக மாறிய பெண் போலீஸ்! குவியும் பாராட்டுக்கள்

Ips Noida
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment