நேபாள புதிய வரைபட மசோதா நிறுத்திவைப்பு: நீண்ட விவாதம் நடப்பதாக இந்தியா தகவல்

Nepal Constitutional Amendment Bill Deferred: நேபாளத்தின் நடைபெற்று வரும் முன்னேற்றங்களை சவுத் பிளாக் "கவனமாக பின்பற்றுகிறது" என்றும், இதுகுறித்த பெரிய விவாதத்தில் புதுடெல்லி இறங்கியுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிகின்றன.

Nepal Constitutional Amendment Bill Deferred: நேபாளத்தின் நடைபெற்று வரும் முன்னேற்றங்களை சவுத் பிளாக் "கவனமாக பின்பற்றுகிறது" என்றும், இதுகுறித்த பெரிய விவாதத்தில் புதுடெல்லி இறங்கியுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நேபாள புதிய வரைபட மசோதா நிறுத்திவைப்பு: நீண்ட விவாதம் நடப்பதாக இந்தியா தகவல்

இந்தியாவுடனான எல்லைப் பகுதி தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, நாட்டின் புது வரைபடத்திற்கு சட்டவடிவம் கொடுக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதாவைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை நேபாள அரசு தற்சமயம் ஒத்திவைத்துள்ளது.

Advertisment

ஆளும் கட்சியினரிடம் ஒருமித்த கருத்து ஏற்படாத சூழலில், மசோதாவின் தன்மைகள் குறித்து ஆராய பிரதான எதிர்க்கட்சிகள் அதிக நேரம் கோரியிருந்தனர். இதனால், நேற்று தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருந்த மசோதாவை கே.பி.ஷர்மா ஒலி தலைமையிலான அரசு தவறவிட்டது.

நேபாளத்தின் நடைபெற்று வரும் முன்னேற்றங்களை சவுத் பிளாக் "கவனமாக பின்பற்றுகிறது" என்றும், இதுகுறித்த பெரிய விவாதத்தில் புதுடெல்லி இறங்கியுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"எல்லைப் பிரச்சினைகள் இயற்கையாகவே அதிக உணர்திறன் கொண்டவை. நம்பிக்கை மற்றும் உறுதியான பங்கேற்பினால் மட்டுமே பரஸ்பர திருப்தி உண்டாகும். இந்தியா உடனான எல்லைப்பகுதி தொடர்பாக, நேபாளத்தில் பெரிய விவாதம் நடந்து வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம். இது, இந்த பிரச்சினையின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ,” என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Advertisment
Advertisements

மன்சரோவர் யாத்திரை பாதையின் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் மாநிலத்தின் தர்ச்சுலா பகுதியில் இருந்து லிபுலேக் கணவாய் செல்லும் சாலையை இந்திய அரசு திறந்தது. இதனால் கோபமடைந்த நேபாள அரசு, லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டது.

வெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்

இந்த புதிய அரசியல் வரைபடத்திற்கு சட்டவடிவம் கொடுக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்றது. செப்டம்பர் 20, 2015 அன்று அதன் அரசியலமைப்பை நடைமுறைக்கு வந்த பொது,நாட்டின் பரப்பளவு மற்றும் அளவு குறித்த வரைப்படம் வெளியிடப்பட்ட நாளில் இருந்து நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்ய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவைப்படுகிறது. 275 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில்,கே.பி.ஷர்மா ஒலி தலமையிலான அரசுக்கு ஒன்பது  உறுப்பினர்கள் குறைவாக உள்ளனர்.

இந்த விவாகரத்தில் மெதுவாக செல்லுமாறு பிரதமர் ஓலிக்குஆளும் கட்சி கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் முன்னாள் பிரதமர் புஷ்பா கமல் தஹால்  அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் 63 உறுப்பினர்களைக் கொண்ட பிரதான எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ், " கட்சியின் மத்திய குழு" பிராந்திய பிரச்சனைகளில்  நிலைப்பாட்டை எடுக்க அதிக நேரம் தேவைப்படுவதாக தெரிவித்தது. கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிஷ்வா மோகன் சர்மா கூறுகையில், பிராந்திய பிரச்சினையில் கட்சி வேறுபாடின்றி அரசாங்கத்தை ஆதரிப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

கொரோனாவால் குறைந்த காற்று மாசு : 200 கி.மீ அப்பால் தெளிவாக காட்சி அளித்த எவரெஸ்ட்!

சமாஜ்பாடி ஜனதா கட்சி, ராஸ்திரிய ஜனதா கட்சி ஆகிய  இரண்டு தராய் சமவெளியை பிரதிபலிக்கும் கட்சிகளும் அரசியலமைப்பு திருத்த மசோதாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட குடியுரிமை குறித்த தாராளமய அணுகுமுறையை பின்பற்றுமாறு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த மே 20 அன்று, வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில் “ நேபாளத்தின் திருத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் இன்று வெளியாகியுள்ளது. புதிய வரைப்படம் இந்திய பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.  நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சினைகளை இராஜதந்திர உரையாடலின் மூலம் தீர்ப்பது இருதரப்பு புரிதலுக்கு வழிவகுக்கும். நேபாளின் ஒருதலைப்பட்ச செயல் வரலாற்று உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அமையவில்லை. இத்தகைய செயற்கையான பிராந்திய உரிமைகோரல்களை இந்தியா ஏற்றுக்கொள்ளாது, ” என்று தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில்"இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை நேபாளம் நன்கு அறிந்திருக்கிறது. எனவே, நியாயப்படுத்தமுடியாத அரசியல் வரைபடத்தை திணிக்காமல் , இந்தியாவின் இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்க நேபாள அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்க உயர்மட்ட உரையாடலுக்கு  சாதகமான சூழ்நிலையை நேபாளம் உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: