திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வழியாக தங்கம் கடத்திய விவகாரம் கேரளாவில் பினராய் விஜயன் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய நபரான ெசாப்னாவுடன் சிவசங்கர் மிகவும் நெருக்கமாக இருந்தது தெரிய வந்தது. சிவசங்கர் மட்டுமல்லாமல், கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அவரது அலுவலகத்தில் உள்ள பலருக்கும் சொப்னாவுடன் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது என நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்தது. இது, கேரள அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. மேலும், முதல்வர் பினராய் விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பாஜ உட்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதற்கிடையே, கொரோனாவால் கடந்த மார்ச் மாதத்துக்கு பின்னர் கேரள சட்டப்பேரவை கூடவில்லை. நிதி மசோதா இதுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், நிதி மசோதாவை நிறைவேற்றுவதற்காக இன்று ஒருநாள் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை நடந்த முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் கேரள அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இது தொடர்பாக, இரு வாரங்களுக்கு முன்பே காங்கிரஸ் எம்எல்ஏ சதீசன் சட்டப்பேரவை செயலாளரிடம் நோட்டீஸ் கொடுத்திருந்தார். இதையடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சபாநாயகர் ராமகிருஷ்ணன் அனுமதி அளித்தார்.
‘பாஜக உத்தரவா?’ ராகுல் அப்படி கூறவில்லை: குலாம் நபி ஆசாத்
இந்நிலையில், இன்று பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின் மீது, மூத்த காங்கிரஸ் தலைவர் விடி.சதீஷன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். இதனை கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன. சபாநாயகர் தீர்மானத்தை ஏற்ற நிலையில் இதன் மீதான விவாதம் தொடங்கியது.
கேரள அரசு அமல்படுத்தியிருக்கும் ‘Life Mission’ வீட்டு வசதி திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய சதீஷன், தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் அலுவலகம் தலைமையிடமாக செயல்பட்டிருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/08/a46-1-300x167.jpg)
அதற்கு பதிலளித்து பேசிய சிபிஎம் எம்.எல்.ஏ பிரதீப் குமார், “உங்களின் ஆட்சியில் மனித வாழ்வுக்கு ஆக்ஸிஜன் எப்படியோ அதுபோல ஐக்கிய ஜனநாயக முன்னணி ஊழல் இல்லாமல் இருந்தது கிடையாது. நீங்கள் ஊழல் பற்றி பேசுகிறீர்களா?. என்றார்.
இதனால், சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.
40 நாட்களில் அரசு வேலைவாய்ப்பு தளத்தில் பதிவுசெய்த 69 லட்சம் பேர்
இதைத் தொடர்ந்து, பினராயி விஜயன் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கேரள சட்டசபையில் 87-40 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது. நடைமுறையில் உள்ள கோவிட் -19 நிலைமை காரணமாக, மின்னணு வாக்கெடுப்புக்கு பதிலாக, உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்தார்களா அல்லது எதிர்த்தார்களா என்பதைப் பொறுத்து நிற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். 140 இருக்கைகள் கொண்ட சட்டமன்றத்தில் 40 உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்தனர், அவர்களில் 87 பேர் அதை எதிர்த்தனர்.
முதல்வர் விஜயன் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளித்து, 3 மணி 45 நிமிடங்கள் உரையாற்றி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil