Advertisment

பயணிகள் ரயில்சேவையை தொடங்கும் திட்டம் தற்போது இல்லை - ரயில்வே திட்டவட்டம்

அனைத்து மண்டலங்களிலும் வாரத்திற்கு 10 கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க, தனிமைப்படுத்தப்பட்ட கோச்களை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
No plans regarding passenger train now says railway ministry

No plans regarding passenger train now says railway ministry

No plans regarding passenger train now says railway ministry : இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 14ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைகிறது. 17ம் தேதியில் இருந்து ரயில்கள் அனைத்தும் இயங்கும் என்று பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டது. இதனால் பொதுமக்களிடையே குழப்பம் நிலவியது. இது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரயில்வே அமைச்சகம்.

Advertisment

மேலும் படிக்க : கொரோனா நடவடிக்கை : சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன்

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் மக்களுக்காக இயக்கப்படுகிறது. கொரோனாவால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்த ரயில்களை பயன்படுத்த திட்டம் ஏற்பாடாகி வருகிறது. அனைத்து மண்டலங்களிலும் வாரத்திற்கு 10 தனிமைப்படுத்தப்பட்ட கோச்களை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க : சிகிச்சை அளித்ததால் கொரோனா பாதிக்கப்பட்ட செவிலியர்… மீண்டு வந்து அதே வார்டில் சேவை!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment