சபரிமலை கோவில் விவகாரம் பினராயி விஜயன் கருத்து : கேரளாவில் இருக்கும் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் வழிபாடு செய்ய குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. பல நூற்றாண்டுகளாக இருக்கும் இந்த பழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று தீர்ப்பினை செப்டம்பர் 28ம் தேதி வெளியிட்டது. இது பற்றிய முழுமையான செய்தியைப் படிக்க
முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், ஆர்.எஃப். நரிமன், ஏ.எம். கான்வில்கர், மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பினை வழங்கியது. இதில் நான்கு நீதிபதிகள் பெண்கள் ஆலயத்திற்குள் நுழையலாம் என்று தீர்ப்பு கூறு இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பினை வெளியிட்டார். இந்து மல்ஹோத்ரா வழங்கிய தீர்ப்பைப் பற்றி படிக்க
சபரிமலை கோவில் விவகாரம் பினராயி விஜயன் கருத்து
இது குறித்து இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் “நாங்கள் சட்டத்தை மதித்து நடக்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்திரவினை பின்பற்றுவோம்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் ஐயப்பன் கோவிலிற்கு வழிபாட்டிற்கு வரும் பெண் பக்தர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு நிச்சயம் செய்யும் என்று கூறிய அவர் “பாதுகாப்பிற்காக கேரளத்தில் இருக்கும் காவல்துறையினர் மற்றும் அண்டை மாநிலத்தாரின் பெண் காவல்த்துறையினரை உதவிக்கு அழைத்துக் கொள்வோம். மேலும் ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் எக்காரணம் கொண்டும் தடுக்கப்படமாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார் பினராய் விஜயன்.
போராட்டத்தில் கேரள மக்கள்
02/10/2018 அன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து கேரளாவில் இருந்த பண்டைய பண்டலம் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் ஊர்வலமாக சென்றனர். ஐயப்பன் கோவில் பாரம்பரியம் மற்றும் தொன்மையை பாதுக்காக வேண்டும் என்று அவர்கள் கூறி ஐய்யப்ப கீர்த்தனை பாடிக்கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.
ஆனால் பினராயி வியஜன் இந்த விவகாரம் குறித்து பேசும் போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை முழு மனதோடு ஏற்கிறோம். அதனால் கேரள அரசு சார்பில் மறு சீராய்வு மனு அனுப்பப்படமாட்டாது என்று அவர் கூறியிருக்கிறார்.
ஆனால் பண்டலம் ராஜ குடும்பத்தை சேர்ந்த ஆர். ஆர். வர்மா தெரிவிக்கையில் “இந்த மக்கள் போராட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்பினை பின்பற்ற ஆசைப்படும் ஒவ்வொருவருக்குமான பாடம். பாரம்பரியம் மற்றும் தொன்மை பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.