/tamil-ie/media/media_files/uploads/2019/02/atm-robbery.jpg)
Noida SBI ATM robbery
Noida SBI ATM robbery : நொய்டாவில் அமைந்திருக்கும் செக்டார் 82ல் இயங்கி வருகிறது எஸ்.பி.ஐ ஏ.டி.எம். அதில் பணம் நிரப்புவதற்காக வங்கி ஊழியர்கள் நேற்று மதியம் அப்பகுதிக்கு வந்துள்ளனர். தாங்கள் கொண்டு வந்திருந்த பணத்தை எடுத்து ஏ.டி.எம்மிற்குள் நுழையும் போது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் அந்த ஊழியர்களை தாக்கி, அவர்கள் கையில் இருந்த பண மூட்டையை தூக்கிச் சென்றனர்.
இருசக்கர வாகனத்தில் ஏறி விரைந்த அவர்கள், எதிரில் வந்த மற்றொரு வாகனத்தில் மோத, இருவரும் கீழே விழுந்தனர். பணத்தை திருடிய இருவரில் ஒருவர் சுதாகரித்துக் கொண்டு தப்பியோட மற்றொருவர் மாட்டிக் கொண்டார். அவர் கையில் இருந்த பணப்பையில் இருந்த பணத்தாள்கள், விபத்து மூலமாக அந்த சாலையெங்கும் சிதறிக் கிடந்தது.
பணத்தை திருடிச் சென்ற மக்கள்
அங்கு இருந்த மக்கள் இது தான் நல்ல சமயம் என்று கையில் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டனர். இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே காவல்த்துறை அங்கு விரைந்தது. பிடிப்பட்ட கொள்ளையனின் பெயர் நானி, புலாந்த்ஷார் பகுதியை பூர்விகமாக கொண்டவர். இவரிடம் இருந்து ரூ.19.65 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் இருந்த ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. மக்கள் எடுத்துச் சென்ற பணத்தைப் பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.