/tamil-ie/media/media_files/uploads/2022/08/collage-noida.jpg)
Watch: With thunderous blasts, Noida’s Supertech towers falls to earth: நொய்டாவில் உள்ள சூப்பர்டெக் இரட்டைக் கோபுரங்கள் ஞாயிற்றுக்கிழமை இடித்து தரைமட்டமாக்கப்பட்டன, இதன் மூலம் ஒன்பது ஆண்டுகால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது. நொய்டா-கிரேட்டர் நொய்டா விரைவுச்சாலைக்கு அருகில் உள்ள செக்டார் 93A இல் அமைந்துள்ள சுமார் 850 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட, டெல்லியின் சின்னமான குதுப்மினார் (73 மீட்டர்) விட அதிக உயரமான 100 மீட்டர் உயரம் கொண்ட இரட்டை கோபுர கட்டமைப்புகள் நொடிகளில் தரையில் சரிந்து விழுந்தன. அது காற்றில் பெரும் தூசி மேகங்களை அனுப்பியது.
Watch | A resident in the neighbouring society shares their point of view, in a slow-motion video of the #SupertechTwinTowers demolition
— The Indian Express (@IndianExpress) August 28, 2022
Follow our blog for live updates: https://t.co/FKt3ku0m79pic.twitter.com/6yMlVcd9kA
இதையும் படியுங்கள்: நொய்டா இரட்டை கோபுரங்கள் இடிப்பு; கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பு செயல்முறை என்பது என்ன?
சூப்பர்டெக் கோபுரங்கள் 'கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பு' மூலம் இடிக்கப்பட்டன, சுற்றுப்புறங்களுக்கு குறைந்தபட்ச சேதத்தை உறுதி செய்வதற்காக வெடிபொருட்களை வியூக ரீதியாக வைக்கப்பட்டு வெடிக்கச் செய்த பின்னர் அது சரிந்தது. கட்டிடம் இடிக்க 3,700 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன. டவர்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எடிஃபைஸ் இன்ஜினியரிங் நிறுவனம், அருகில் உள்ள குடியிருப்பு கோபுரங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிகிறது என கூறியுள்ளது. சூப்பர்டெக் சொசைட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தூசி துகள்கள் படிய வைக்க தண்ணீர் தெளிப்பான்கள் மற்றும் புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அருகிலுள்ள எமரால்டு கோர்ட் மற்றும் ஏ.டி.எஸ் வில்லேஜ் சங்கங்களில் வசிக்கும் சுமார் 5,000 பேர் இன்றைய தினம் தங்கள் வீடுகளை காலி செய்தனர்.
2005 ஆம் ஆண்டு நொய்டா ஆணையம் மூலம் சூப்பர்டெக் நிறுவனத்திற்கு தலா ஒன்பது தளங்கள், ஒரு வணிக வளாகம் மற்றும் ஒரு தோட்டப் பகுதியுடன் 14 கோபுரங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. நொய்டா ஆணையத்தின் ஒப்புதலுடன், சூப்பர்டெக் தனது திட்டத்தை 2009 இல் திருத்தியது, அதில் அபெக்ஸ் மற்றும் செயேன் என்ற இரட்டை கோபுரங்கள் சேர்க்கப்பட்டன. இது எமரால்டு கோர்ட் ஓனர்ஸ் ரெசிடென்ட்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் (RWA) கோபத்தை சம்பாதித்தது, அவர்கள் 2012 இல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சட்டவிரோத கட்டுமானம் என்று குற்றம்சாட்டினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு RWA க்கு ஆதரவாக உயர் நீதிமன்ற தீர்ப்பு அதை இடிக்க உத்தரவிட்டது. நொய்டா ஆணையமும் சூப்பர்டெக் நிறுவனமும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்ற பிறகு, ஒன்பது ஆண்டுகால நீண்ட சட்டப் போராட்டம் உச்ச நீதிமன்றம் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோபுரங்களை இடிக்க உத்தரவிட்டதுடன் முடிவுக்கு வந்தது.
#NoidaTowerDemolition | Here's a timelapse of Noida's Supertech twin towers demolition
— The Indian Express (@IndianExpress) August 28, 2022
Catch #LIVE updates here: https://t.co/iriC2XWHUc#SupertechTwinTowers#TwinTowers#NoidaTwinTowerspic.twitter.com/AwdVBB5RuB
After the demolition of Supertech twin towers, mechanical sweeping machines, sanitation staff on their way to the demolition spot.
— The Indian Express (@IndianExpress) August 28, 2022
Follow our blog for live updates: https://t.co/FKt3ku0m79pic.twitter.com/ZNihwQPaBH
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.