மூன்று தொழில்நுட்ப சாராத ரயில்வே துறை (Non- technical ) மற்றும் ஐந்து தொழில்நுட்ப ரயில் சேவைகளையும் இணைத்து ஒரே இந்திய ரயில்வே மேலாண்மை சேவையாக (ஐஆர்எம்எஸ்) மத்திய அரசு அறிவிப்புக்கு நான் டெக்னிக்கல் ரயில்வே அதிகாரிகளிடையே மிகுந்த அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
அவர்கள் தற்போது பிரதமர்,அமைச்சரவை செயலாளர், ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரியம் தலைவர் மற்றும் பணியாளர் பயிற்சித் துறை அமைச்சர் போன்றோர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே துறை வாரியத்தின் (chairman of railway board) தலைவர் வியாழக்கிழமை மாலை, அறிவிக்கப்பட்ட இந்த இணைப்பு தொடர்பாக மூன்று மணி நேர வீடியோ கான்பரன்ஸ் நடத்தியுள்ளார். இருந்தாலும், ரயில்வே போக்குவரத்து, ரயில்வே பணியாளர்கள் மற்றும் ரயில்வே கணக்கு சேவைகளில் இருந்து வரும் அதிகாரிகளின் அச்சங்களை ரயில்வே வாரியத் தலைவர் நீக்க தவறியதோடு, மேலும் சில மனக் கசப்புகளை பதியவைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தியக் குடிமைப்பணி மூலம் சேர்க்கப்பட்ட தொழில்நுட்ப சாராத ரயில்வே அதிகாரிகளிடமிருந்து முறையான பிரதிநிதித்துவம் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு 'ஒருதலைப்பட்சமான' முடிவு என்ற ஒரே கருத்தை நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் 10,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தபால்கள் மூலம் பிரதம மந்திரிக்கு தபால் அனுப்பிவருகின்றனர்
மேலும், இந்த ஒருங்கிணைந்த ரயில்வே சேவையைத் தொடர வேண்டுமெனில், தங்கள் அரசு குடுமை பணி சேவைகளை மாற்றுவதற்கான விருப்பத்தை வழங்கவேண்டும் என்றும் கோரியுள்ளனர் .
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூருகையில்,"ரயில்வே வாரியத் தலைவர் அனைத்து ரயில்வே அதிகாரிகளுடனான நடந்த வீடியோ கான்பரன்சில், ரயில்வே போக்குவரத்து அதிகாரிகள் ( traffic officers) ஒன்றும் செய்யாமல் உள்ளனர் என்று கூறுகிறார். இந்த கருத்தை எப்படி அவரால் கூறமுடியும். அவர்கள் எந்தவொரு ரயில்வே சொத்துகளை பராமரிக்கவில்லையா ? அல்லது பாதுகாக்கவில்லையா? விபத்து தளங்களைப் பார்வையிடவில்லையா? அவர்கள் ஆய்வுகள் செய்ய மாட்டார்களா?.... சிஆர்பி கூறிய கருத்து மிகவும் பாகுபாடானது, ஏன்..... அர்த்தமற்றது என்றார்.
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை எட்டு ரயில்வே சேவைகளை இணைப்பதாக அறிவித்தபோது, "இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதென்றும், அதிகாரிகள் அனைவரின் பெரும் ஆதரவோடு எடுக்கப்பட்டதென்றும்" கூறினார். இதற்காக டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ரயில்வே அதிகாரிகளுடன் கலந்துரையாடலும் நடத்தபப்ட்டது.
இந்த இரண்டு நாள் கலந்துரையாடலில் 12 அணிகளாக பிரிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது. எவ்வாறாயினும், அவை அனைத்திலும் இந்திய பொறியியல் சேவைகள் மூலம் பணி அமர்த்தப்பட்ட பொது மேலாளர்கள் தலைமை தாங்கியுள்ளனர். ரயில்வே போக்குவரத்து, கணக்குகள் மற்றும் பணியாளர்களின் அதிகாரிகளிடமிருந்து சிறிதளவு பிரதிநிதித்துவமும் கூட இந்த கலந்துரையாடலில் இல்லை. ரயில்வே நிறுவனத்தின் நிர்வாக முதுகெலும்பாக இந்த மூன்று ரயில்வே சேவைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
ரயில்வேயில் உள்ள எட்டு சேவைகளில் ரயில்வே கணக்கு துறை , ரயில்வே பணியாளர் துறை மற்றும் ரயில்வே போக்குவரத்து துறை அதிகாரிகள் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதனால், இதிலுள்ள பெரும்பாலான அதிகாரிகள் சமூக அறிவியல் மற்றும் மற்ற தொழில்நுட்பம் சாராத கல்வி பின்னணியில் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். எலெக்ட்ரிகல், பொறியியல் துறை, ரயில்வே ஸ்டோர்ஸ், மெக்கானிக்கல், சிக்னலிங் மற்றும் டெலிகாம் (எஸ் அண்ட் டி) அதிகாரிகள் இந்திய பொறியியல் சேவை (ஐஇஎஸ்) மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்திய ரயில்வேயில் (ஐஆர்) மொத்தமுள்ள 27 பொது மேலாளர் பொறுப்பில் மூன்று பேர்கள் மட்டுமே யுபிஎஸ்சி மூலம் வந்தவர்கள் இருக்கின்றனர்.
எந்தெந்த காரணங்களின் அடிப்படையில் இந்தியாவில் விவாகரத்து வழங்கப்படுகிறது?
ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,“பிபெக் டெப்ராய் (bibek debroy) கமிட்டியின் அறிக்கையும், ஓட்டு மொத்த இந்திய ரயில்வேத் துறையை ஒரே சேவையின் கீழ் கொண்டுவருவதில் உள்ள சிக்கல்கலைப் பற்றி கூறியுள்ளது.
ஒட்டுமொத்த ரயுல்வே சேவைகளையும் இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஒன்று தொழில்நுட்ப ரயில்வே சேவையாகவும் மற்றொன்று தொழில்நுட்பமற்ற ரயில்வே சேவையாகவும் செயல்பட வேண்டும்,” என்று கூறியிருந்தது.
அதிகாரிகள், தங்கள் கடிதங்களில், யுபிஎஸ்சியில் இருந்து ஆட்சேர்ப்பு செய்பவர்கள் நிர்வாக புத்திசாலித்தனத்தைக் கொண்டுள்ளனர் என்றும், “… தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற சேவைகளை ஒன்றிணைப்பது,பொது நலனுக்காகவும் பொது நிதிகளின் வழிகாட்டலாக செயல்படும் நிர்வாக பதவியை குறைத்து மதிப்பிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
Explained : என்ஆர்சி +சிஏஏ உங்களுக்கு பாதிப்பு விளைவிக்குமா ?
மேலும்,யுபிஎஸ்சி வழியாக நுழையும் தொழில்நுட்பம் சாராத அதிகாரிகளின் சராசரி வயது 27 ஆண்டுகளாக உள்ளது , பொறியியல் சேவையில் வரும் அதிகாரிகளின் சராசரி வயது 23-24 என்றுள்ளது. எனவே, பணியின் தன்மையும், தேர்வுகளும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்போது இரண்டு சேவைகளை எவ்வாறு சமமாக வைக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
யுபிஎஸ்சியால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதற்கு எதிராக, தற்போது ஒருங்கிணைந்த ஐஆர்எம்எஸ் மூலம் சேவை நிலையை மாற்றுவது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இதுவரை எட்டு சேவைகள் செயல்பட்டு வரும் சேவை விதிகள் வகுக்கப்பட்டவுடன், ஒரு அதிகாரியின் சேவை வாய்ப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்த விதிகளில் மாற்றங்களைச் செய்ய முடியாது என்று கூறினார்.
இணைப்பின் நன்மை தீமைகள் குறித்து விவாதிக்க ரயில்வே அமைச்சர், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலாளர் (டிஓபிடி) அமைச்சரவை செயலாளர் மற்றும் ரயில்வேயின் அனைத்து சிவில் சர்வீஸ் அதிகாரிகள் ஆகியோருடன் ஒரு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கோரியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.