நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி இருவர் மீதும், அர்ஹான் கான் என்ற நபர் மன்னிப்பு கேட்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். சமீபத்தில் ரோடில் குப்பை போட்டதற்காக அனுஷ்கா ஷர்மாவிடம் திட்டு வாங்கியவர் இவர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் காரில் சென்றபோது, தனது காரை நிறுத்தி அர்ஹான் என்ற நபரை திட்டினார். நடு ரோட்டில் பிளாஸ்டிக் குப்பை போட்டதற்காக அனுஷ்கா ஷர்மா அவரை கடும் கோபத்தில் திட்டினார். இதனை விராட் கோலி வீடியோ எடுத்தார். இந்த வீடியோ பதிவை சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
June 2018
அந்த வீடியோ வைரலாகி அனுஷ்கா – கோலி ஜோடிக்கு பாராட்டு பெற்றுத்தந்திருந்தாலும், சம்மந்தப்பட்ட அர்ஹான் கானிற்கு இது மன உளைச்சலை அளித்தது. ஒருவர் செய்யும் தவறை திருத்துவது நல்ல விஷயம் தான் ஆனால், பிரபலங்கள் பப்லிசிட்டிக்காக இது போல வீடியோ பதிவு செய்து அவமானப்படுத்துவது முறையல்ல என அவர் குற்றம்சாட்டுகிறார்.
இது குறித்த முந்தைய செய்திக்கு : (ரோட்டில் சண்டைக்கு இறங்கிய அனுஷ்கா.. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோலி!)
இந்நிலையில், அனுஷ்காவிடன் திட்டு வாங்கிய நபர் அர்ஹான் சிங், தன்னைப் பார்த்துக் கத்தியதற்காக அனுஷ்கா மற்றும் கோலி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதன் பேரில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.